Kids Teeth Care: குழந்தைகள் பற்களின் ஆரோக்கியத்துக்கு சிறந்த உணவு எது தெரியுமா? எந்த உணவுகளை தவிர்க்க வேண்டும்
பற்களில் தொற்று பாதிப்பு ஏற்படாமல் தடுக்கும் வல்லமை கொண்ட உணவுகள் உள்ளன. இவை ஆரோக்கியமான ஈறுகள் மற்றும் பற்களை பெறவும் உதவுகிறது. இந்த உணவுகளை குழந்தைகளுக்கு கொடுப்பதனால் அவர்களின் பற்கள் ஆரோக்கியத்துக்கு நன்மை தரும்.
குழந்தைகளின் ஆரோக்கிய விஷயத்தை பொறுத்தவரை, அவர்களின் ஒட்டு மொத்த வளர்ச்சியிலும் பெற்றோர்கள் அக்கறை செலுத்துகிறார்கள். உடலிலுள்ள மற்ற உறுப்புகளைப் போல் குழந்தைகளின் பற்கள் விஷயத்திலும் தனியொரு கவனத்தை பெற்றோர்கள் செலுத்த வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் குழந்தகளின் வாய் பகுதியில் ஏற்படும் நோய் தொற்றுகள் முற்றிலும் தவிர்க்கப்படும்.
குறிப்பாக இனிப்பு பலகாரங்களை விரும்பு சாப்பிடுவதில் நாட்டம் கொண்ட குழந்தைகள் வீடு, கடை என எங்கு சென்றாலும் இனிப்பை கண்டால் ஒரு புடி பிடித்துவிடுவார்கள். அதேபோல் ஜங்க் உணவுகள் மீதும் அவர்களின் மோகம் அளப்பரியதாகவே உள்ளது. இந்த இரண்டு உணவுகளும் பற்களில் ஒட்டிக்கொண்டு துவாரங்கள் உருவாக வழிவகுக்கும். எனவே இதுபோன்ற பாதிப்புகளை தவிர்க்க தொடக்கம் முதலே குழந்தைகளுக்கு ஆரோக்கியமான உணவு பழக்கத்தை கடைப்பிடிக்க கற்றுக்கொடுக்க வேண்டும்.
அதிக சர்க்கரை அளவு கொண்ட சில மோசமான உணவுகள் உங்கள் குழந்தைகளின் பற்களை பதம் பார்க்கலாம். ஆனால் ஆபத்து அதிகம் நிறைந்திருந்தால் குழந்தைகள் அதை சாப்பிடுவதை கட்டுப்படுத்த இயலாது. இருப்பினும் அதன் அளவை மெல்ல குறைக்கலாம்.
சர்க்கரை நிறைந்த பானங்களான சோடா, இனிப்பு ஜூஸ் போன்றவை கண்டிப்பாக தவிர்க்கப்பட வேண்டும். ஏனென்றால் சர்க்கரையால் கவர்ந்து இழுக்கப்படும் நுண்பாக்டீரியாக்கள் ஈறுகளில் அழற்சி மற்றும் ஈறுகள் சார்ந்த நோய் பாதிப்பை உருவாக்குகிறது. கூடுதலா பற்களின் ஏனாமல்லை உட்கொள்ளும் அமிலங்களையும் உருவாக்குகிறது. இதுபோன்ற உணவுகளை குழந்தைகளுக்கு எப்படி கொடுக்க வேண்டும், அவர்கள் சாப்பிடுவதை குறைக்க வைக்க என்ன செய்ய வேண்டும் என்பது பற்றி பிரபல பல் மருத்துர் டாக்டர் ரித்தி கத்தாரா விளக்குகிறார்.
பற்களுக்கான சிறந்த உணவு
கொட்டை வகைகள், பீன்ஸ், திராட்சை, ஆப்பிள்கள்
பற்களில் தொற்று ஏற்படுவதை தடுக்கவும் ஆரோக்கியமான பற்கள் மற்றும் ஈறுகளை பெற உதவும் உணவுகளை குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டும். அந்த வகையில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்த உணவுகளான பாதாம், முந்திரி, பிஸ்தா உள்ளிட்ட கொட்டை வகைகள், பீன்ஸ், திராட்சை, ஆப்பிள் போன்றவற்றை கொடுக்கலாம். இவை அழற்சிக்கு எதிராக செயல்படுவதோடு, பற்களில் தொற்றுகள் ஏற்படுவதையும் தடுத்து ஈறுகள் மற்றும் இதர பற்கள் சார்ந்த நோய் பாதிப்புகள் ஏற்படுவதையும் தடுக்கிறது.
ஸ்ட்ராபெர்ரி, பார்க்கோலி, ஆரஞ்சு
பற்களின் ஆரோக்கியத்துக்கு வைட்டமின் சி முக்கிய தேவையாக உள்ளது. இவை ஈறுகளில் வீக்கம் ஏற்படுவதையும், இரத்தபோக்கு உண்டாவதையும் தடுக்கிறது. குழந்தைகள், பெரியவர்கள் என இருவரும் மேற்கூறிய பழங்களை பற்களின் ஆரோக்கியத்தை மனதில் வைத்து சாப்பிடலாம்.
கீரைகள்
கீரைகள் பற்களின் எனாமல் கிழவதை தடுக்கிறது. பற்களின் எனாமல் கால்சீயம், பாஸ்பரஸ் சத்துக்கள் நிறைந்தவையாக உள்ளது. எனவே இந்த சத்துக்கள் நிறைந்த உணவை அதிகம் சாப்பிட்டால் பற்களில் அரிப்பு ஏற்படுவது தடுக்கப்படுகிறது.
சமச்சீரான உணவுகள்
குழந்தைகளுக்கு சமச்சீரான உணவுகளை கொடுக்க வேண்டும். பிரஷ்ஷான் உணவுகளான பழங்கள், காய்கறிகள், சாலட், பால் சார்ந்த பொருள்கள், மெலிதான இறைச்சிகள், மீன் ஆகியவற்றோடு கட்டுப்பாடுகள் நிறைந்த உணவுமுறையை கடைப்பிடிக்க வேண்டும்.
உங்கள் குழந்தைகள் ஆரோக்கியம் நிறைந்த உணவுகளை சாப்பிட வைப்பது எப்படி?
கண்வழியே ஆசையை தூண்டுவது
ஆரோக்கியம் நிறைந்த உணவுகள் யாவும் பார்ப்பதற்கு பளிச்சென தோற்றத்தில் இருப்பதில்லை. எனவே உணவை அவர்கள் கண் வழி உள்ளே அனுப்பி சாப்பிட தூண்ட வேண்டும். அதுமட்டுமில்லாமல் சுவையும் தூக்கலாக இருக்கும் என்ற உணர்வை ஏற்படுத்த வேண்டும்.
வீட்டிலேயே இனிப்புகளை தயார் செய்தல்
வெளிப்புற கடைகளில் விற்க்கப்படும் பல பொருள்கள் சர்க்கரை இல்லை என்று சத்தியம் செய்து விற்கப்படுகிறது. ஆனால் அவை இனிப்பாகவே இருப்பதோடு மட்டுமல்லாமல் உடலை ஆரோக்கியத்திலும் சிக்கலை உண்டாக்குகிறது. எனவே குறைவான சர்க்கரை சேர்மானங்கள் நிறைந்த உணவுகளை தேர்வு செய்து குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டும்.
மிட்டாய், கேக், குக்கீக்கள், ஐஸ்கிரீம் போன்றவை அதன் தோற்றத்தாலும், வண்ணத்தாலும் குழந்தைகளை பெரிதும் கவர்கிறது. ஆனால் அவற்றை போலவே கவனமாக மூலப்பொருள்களை தேர்வு செய்து அதுபோன்று வீட்டிலேயே அளவாக தயார் செய்து கொடுக்கலாம்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:
Twitter: https://twitter.com/httamilnews
Facebook" https://www.facebook.com/HTTamilNews
You Tube: https://www.youtube.com/@httamil
Google News: https://tamil.hindustantimes.com/
ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.
டாபிக்ஸ்