தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Poonam Bajwa Fitness: நடிகை பூனம் பாஜ்வாவின் கவர்ச்சி உடல் ரகசியம் இது தான்!

Poonam Bajwa Fitness: நடிகை பூனம் பாஜ்வாவின் கவர்ச்சி உடல் ரகசியம் இது தான்!

I Jayachandran HT Tamil

Jun 02, 2023, 03:15 PM IST

google News
நடிகை பூனம் பாஜ்வாவின் கவர்ச்சி உடல் ரகசியம் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.
நடிகை பூனம் பாஜ்வாவின் கவர்ச்சி உடல் ரகசியம் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.

நடிகை பூனம் பாஜ்வாவின் கவர்ச்சி உடல் ரகசியம் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.

நடிகை பூனம் பஜ்வா ஜிம்மில் ஒர்க் அவுட் செய்யும் வீடியோ ஒன்று ரசிகர்கள் மத்தியில் தற்போது வைரல் ஆகி வருகிறது. அவர் செய்யும் உடற்பயிற்சி பற்றிய விவரங்களை இங்கு பார்க்கலாம். தனது கவர்ச்சியான கட்டழகுக்கு இந்தப் பயிற்சி தான் காரணம் என்கிறார் பூனம் பாஜ்வா.

நடிகை பூனம் பஜ்வா செய்யும் கடுமையான உடற்பயிற்சி வீடியோ ஒன்று தற்போது சமூக வலைதளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. அவர் செய்யும் பயிற்சி முறையின் பெயர் பிளாடீஸ். இந்த பயிற்சி தசையின் சமநிலை, வலிமை மற்றும் நெகிழ்வுத்தன்மையை மேம்படுத்துகிறது. இந்த பிளாடீஸ் பயிற்சியை தரையிலும் செய்யலாம் அல்லது உபகரணங்களும் உதவியுடனும் பயிற்சி மேற்கொள்ளலாம்.

பிளாடீஸ் பயிற்சி முறையின் நன்மைகள்-

நெகிழ்வுத்தன்மை மேம்படும்

தசை வலிமை பெறும். இது வயிற்று தசைகள், கீழ் முதுகு, இடுப்பு மற்றும் பின்புற தசைகளை ஈடுபடுத்துகிறது.

முதுகு மற்றும் மூட்டுகளின் தசை கட்டுப்பாடு மேம்படும்

முதுகுத்தண்டு உறுதிபெறும்.

தோரணை மேம்படும்.

பிளாடீஸ் பயிற்சி செய்வது தோள், கழுத்து மற்றும் மேல் முதுகு தசைகளை தளர்த்த உதவும்.

ஆழ்ந்த சுவாசத்தின் மூலம் நுரையீரலின் திறன் மற்றும் சுழற்சி அதிகரிக்கும்.

ஒருமுகச் சிந்தனை மேம்படும்.

உடல் விழிப்புணர்வு அதிகரிக்கும்.

மன அழுத்தத்தை போக்கலாம்.

யாரெல்லாம் பிளாடீஸ் பயிற்சி செய்ய கூடாது?

சமீபத்தில் அறுவை சிகிச்சை செய்தவர்கள்

கர்ப்பிணி பெண்கள்

45 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடைய ஆண்கள்

55 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடைய பெண்கள்

இதய நோய் உள்ளவர்கள்

தசையில் காயம் அல்லது பிரச்சனை உள்ளவர்கள்

நீண்ட காலமாக உடற்பயிற்சி செய்யாதவர்கள்

உடல் எடை அதிகமாக இருப்பவர்கள்.

எந்தவொரு புதிய உடற்பயிற்சி திட்டத்தை தொடங்குவதற்கு முன் மருத்துவரை அணுகவும். உங்கள் மருத்துவ நிலையை கண்டறிந்த பின், உடற்பயிற்சி நிபுணர் அல்லது பயிற்சியாளரின் உதவியுடன் இந்த பயிற்சிகளை மேற்கொள்ளலாம்.

டாபிக்ஸ்

அடுத்த செய்தி