தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Restaurant Style Kadai Paneer : ரெஸ்டாரன்ட் ஸ்டைல் கடாய் பன்னீர்! இனி வீட்டிலே செய்யலாம் இதோ ரெசிபி!

Restaurant Style Kadai Paneer : ரெஸ்டாரன்ட் ஸ்டைல் கடாய் பன்னீர்! இனி வீட்டிலே செய்யலாம் இதோ ரெசிபி!

Priyadarshini R HT Tamil

Oct 31, 2023, 01:20 PM IST

google News
Restaurant Style Kadai Paneer : ரெஸ்டாரன்ட் ஸ்டைல் கடாய் பன்னீர்! இனி வீட்டிலே செய்யலாம் இதோ ரெசிபி!
Restaurant Style Kadai Paneer : ரெஸ்டாரன்ட் ஸ்டைல் கடாய் பன்னீர்! இனி வீட்டிலே செய்யலாம் இதோ ரெசிபி!

Restaurant Style Kadai Paneer : ரெஸ்டாரன்ட் ஸ்டைல் கடாய் பன்னீர்! இனி வீட்டிலே செய்யலாம் இதோ ரெசிபி!

தேவையான பொருட்கள்

நெய் – 2 ஸ்பூன்

இஞ்சி – 2 ஸ்பூன் (பொடியாக நறுக்கியது)

பூண்டு – 2 ஸ்பூன் (பொடியாக நறுக்கியது)

வெங்காயம் – 1 (பொடியாக நறுக்கியது)

தக்காளி – 2 (1 நறுக்கியது, 1 அரைத்த விழுது)

பச்சை மிளகாய் – 1 ஸ்பூன் (பொடியாக நறுக்கியது)

மஞ்சள் தூள் – கால் ஸ்பூன்

மிளகாய் தூள் – 1 ஸ்பூன்

கொத்தமல்லித்தூள் – அரை ஸ்பூன்

சீரகத்தூள் – 1 ஸ்பூன் ‘

தயிர் – 2 டேபிள் ஸ்பூன்

கடாய் மசாலா செய்ய தேவையான பொருட்கள்

மிளகு – 1 ஸ்பூன்

வர மிளகாய் – 2

சோம்பு – 1 ஸ்பூன்

வர கொத்தமல்லி – 1 ஸ்பூன்

சீரகம் – 1 ஸ்பூன்

உப்பு – தேவையான அளவு

பன்னீர் வறுக்க தேவையான பொருட்கள்

பன்னீர் – 200 கிராம்

குடை மிளகாய் – 1

பெரிய வெங்காயம் – 1 (சதுரமாக நறுக்கியது)

தக்காளி – 1 (நறுக்கியது)

மல்லித்தழை – கைப்பிடியளவு

கரம் மசாலா – அரை ஸ்பூன்

கசூரி மேத்தி – அரை ஸ்பூன்

ஃபிரஷ் கிரீம் – 2 ஸ்பூன்

(ஒரு கடாயில் இவற்றை சேர்த்து ட்ரையாக 4 நிமிடங்கள் வறுத்து, ஆறியவுடன் காய்ந்த மிக்ஸியில் சேர்த்து கொரகொரப்பாக அரைத்து தனியாக வைத்துக்கொள்ள வேண்டும்)

செய்முறை 

ஒரு அகலமான கடாயில் நெய் சேர்ந்து காய்ந்தவுடன், பொடியாக நறுக்கிய இஞ்சி-பூண்டு விழுது சேர்த்து நன்றாக பச்சை வாசம் போகும் வரை வதக்க வேண்டும்.

பின்னர் பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து நன்றாக வதக்க வேண்டும். வெங்காயம் பொன்னிறமானதும், தக்காளி நறுக்கியது மற்றும் அரைத்த விழுது இரண்டையும் சேர்த்து மூடி வைத்து நன்றாக வதங்க விடவேண்டும்.

பின்னர் பச்சை மிளகாய், மஞ்சள் தூள், மிளகாய் தூள், கொத்தமல்லித்தூள், சீரகத்தூள், தயிர் அனைத்தையும் சேர்த்து நன்றாக கலந்துவிடவேண்டும். மூடிவைத்து நன்றாக வேகவைத்து, பின்னர் நாம் தனியாக அரைத்த கடாய் மசாலாப்பொடி சேர்த்து சுடு தண்ணீர் ஊற்றி நன்றாக வேகவைக்க வேண்டும்.

மற்றொரு அடுப்பில் கடாயை சூடாக்கி நெய், வெங்காயம், குடை மிளகாய், தக்காளி, பன்னீர், கடாய் பன்னீர் மசாலா, உப்பு, மஞ்சள் தூள் அனைத்தும் சேர்த்து நன்றாக வறுத்து எடுத்து, தயாராக உள்ள கடாய் பன்னீர் மசாலாவில் சேர்க்க வேண்டும்.

மல்லித்தழை, கசூரி மேத்தி, கரம் மசாலா தூவி குறைவான தீயில் நன்றாக வேகவைத்து, 2 ஸ்பூன் ஃபிரஷ் கிரீம் சேர்த்து நன்றாக கலந்து விடவேண்டும். நெய் பிரிந்து வரும் பதத்தில் இறக்க வேண்டும்.

இதை நீங்கள் ரொட்டி, பராட்டா, பிரியாணி, ஃப்ரைட் ரைஸ் என எதனுடன் வேண்டுமானாலும் பரிமாறலாம்.

 

டாபிக்ஸ்

அடுத்த செய்தி