தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Relationship : ப்ரேக்ப் கொடுக்கும் மனஅழுத்தம்! மீள்வதற்கான வழிகளை தெரிந்துகொள்ளுங்கள்!

Relationship : ப்ரேக்ப் கொடுக்கும் மனஅழுத்தம்! மீள்வதற்கான வழிகளை தெரிந்துகொள்ளுங்கள்!

Priyadarshini R HT Tamil

Dec 16, 2023, 03:00 PM IST

google News
ப்ரேக்அப்பில் இருந்து மீள்வது எப்படி? ஆரோக்கியமான வழியில் ப்ரேக்அப்பில் இருந்த மிள்வதற்காக வழிகள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.
ப்ரேக்அப்பில் இருந்து மீள்வது எப்படி? ஆரோக்கியமான வழியில் ப்ரேக்அப்பில் இருந்த மிள்வதற்காக வழிகள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.

ப்ரேக்அப்பில் இருந்து மீள்வது எப்படி? ஆரோக்கியமான வழியில் ப்ரேக்அப்பில் இருந்த மிள்வதற்காக வழிகள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.

ப்ரேக் அப் பயணத்தில் பொறுமை மிகவும் அவசியம். சுய பிரதிபலிப்பு மற்றும் மீளவேண்டுமென்ற நோக்கம் ஆகியவை மிகவும் அவசியம். நீங்கள் ப்ரேக் அப்பை மட்டும் கையாளவில்லை.

மற்ற பல்வேறு விஷயங்களையும் எதிர்கொள்கிறீர்கள். இப்போது நீங்கள் முன்னேறிச்செல்ல உங்களுக்கு சில வழிகாட்டுதல்கள் தேவை. இங்கு அதற்கான சில வழிகள் கொடுக்கப்பட்டுள்ளன.

உங்கள் உணர்வுகளை உணருங்கள்

ப்ரேக்அப் நடக்கும்போது பல்வேறு உணர்வுகள் கட்டுக்கடங்காமல் தோன்றும். அது ஒரு ரோலர் கோஸ்டர் பயணத்தை போன்றது. சோகம், கோவம், குழப்பம், வெறுமை என உங்களுக்கு அது என்ன உணர்வை கொடுக்கிறதோ, அதை உணருங்கள்.

இவற்றை நீங்கள் உணர்வது நீங்கள் மீளும் பாதையின் முதற்படி, ப்ரேக்அப்பை கடக்க உங்களுக்கு தேவையான நேரத்தை எடுத்துக்கொள்ளுங்கள்.

உங்களுக்கு மகிழ்ச்சி கொடுக்கும் விஷயத்தில் நீங்கள் மீண்டும் இணைந்திருங்கள்

உங்கள் வாழ்க்கைக்கு மகிழ்ச்சியை கொண்டுவரும் விஷயங்களை மீண்டும் செய்யுங்கள். அது நீங்கள் மறந்துபோன பழக்கவழக்கமாக இருக்கலாம் அல்லது உங்களுக்கு பிடித்த புத்தகமாக இருக்கலாம். நீண்ட நாட்கள் நீங்கள் தள்ளிப்போட்ட ஒரு விஷயமாக இருக்கலாம். உங்களுக்கு பிடித்த விஷயங்களில் நீங்கள் மீண்டும் கவனம் செலுத்தும்போது, அது உங்களை மகிழ்ச்சியாக்குகிறது. அது உங்களில் மாற்றத்தை வரவேற்கிறது.

உங்களின் தற்போதையை உறவுகளை பலப்படுத்துவது நீங்கள் மீள்வதற்கு முக்கியமான காரணியாக அமையும். உங்கள் உணர்வுகளை பகிர்ந்துகொள்ளுங்கள், அறிவுரைகளை பெறுங்கள், உங்கள் மீது அக்கறை செலுத்தும் நண்பர் மற்று உறவினர்களுடன் உறைந்து போங்கள். ப்ரேக் அப்பை எதிர்கொள்வதில் மனித உறவுகள் முக்கிய பங்கு வகிக்கின்றன.

புதிய நினைவுகளை உருவாக்குவதில் கவனம் செலுத்துங்கள்

புதிய அனுபவங்களை தேடித்தேடிப்பெறும்போது, உங்கள் கடந்த கால ப்ரேக் அப் பிரச்னைகள் அகல்கிறது. உங்கள் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் தரமான நேரத்தை செலவிடுங்கள். புதிய பழக்கவழக்கங்களை தேர்ந்தெடுத்துக்கொள்ளுங்கள். புதிய இடங்களை சென்று பாருங்கள். புதிய நினைவுகளை உருவாக்கும்போது, அது உங்களின் ப்ரேக்அப் சோகங்களை கடக்க உதவுகிறது.

கடந்து செல்லும் முன்னரே முடிவுக்காக காத்திருக்காதீர்கள்

முடிவுகள் நமக்குள் இருந்துதான் வருகிறது. உங்கள் முன்னாள் காதலரிடம் இருந்து விளக்கங்கள் மற்றும் மன்னிப்புகளை தவிர்த்துவிடுங்கள். நீங்கள் குணமடைய வேண்டிய முயற்சிகள் அனைத்தையும் செய்யுங்கள். நீங்கள் முடிவுக்காக காத்திருப்பது உங்கள் வளர்ச்சியை தடுக்கும். உங்களின் தனிப்பட்ட வளர்ச்சியில் கவனம் செலுத்தும்போது, அது உங்களை முன்னோக்கி செலுத்துகிறது.

உடனே அடுத்த உறவை தவிர்த்திடுங்கள்

உடனடியாக அடுத்த உறவில் குதித்துவிட வேண்டும் எண்ணத்தை தவிர்த்துவிடுங்கள். சிறிது காலம் உங்களுக்காகவும், உங்களின் வளர்ச்சிக்காகவும் எடுத்துக்கொள்ளுங்கள். புதிய காதலில் விழுவது, நீங்கள் விரைந்து குணமடைவதை தடுக்கலாம். உங்களின் ஆழ்மனதை கவனியுங்கள். அடுத்த காதலுக்கு நீங்கள் தயாரில்லையென்றால், சிறிது இடைவெளி எடுத்துக்கொள்ளுங்கள்.

ஆனால் அடுத்த காதல் கட்டாயம் எனும்பட்சத்தில், எச்சரிக்கையுடன் இருங்கள். உங்களின் உள்ளுணர்வுகளை நம்புங்கள், உங்களுக்கு ஏற்ற இடத்திற்கு செல்லுங்கள். புதிய உறவு மற்றும் உணர்வுக்குள் செல்லும் முன் உங்களை மீள்கட்டமைக்க அனுமதியுங்கள். அதுவே நீங்கள் உங்களுக்கு செய்யும் நியாயம் ஆகும்.

அவர்களின் எதிர்மறை அத்தனையும் பட்டியலிடுங்கள்

உங்களின் உணர்வுகளை அப்படியே ஒரு பேப்பரில் எழுதுங்கள். இதுபோல் நீங்கள் எதிர்மறை எண்ணங்களை பட்டியலிடும்போது, அது உங்களுக்கு ஒரு தெளிவையும் முடிவையும் கொடுக்கிறது. இது உங்களின் உணர்வுகளை கையாளும் ஒரு தெரபியாகும். உங்களின் ப்ரேக்அப்புக்கான காரணத்தையும் இது உணர்த்தும்.

வலியை நீங்கள் மதிப்பது அவசியம்தான் அதே நேரத்தில், உங்கள் உறவில் மகிழ்ந்திருந்த காலத்தையும் மறந்துவிடாதீர்கள். நீங்கள் கற்ற பாடங்களை மறந்துவிடாதீர்கள். உங்களின் தனிப்பட்ட வளர்ச்சியில் கவனம் செலுத்துங்கள். இவற்றை பயன்படுத்தி உங்களின் எதிர்காலத்தை பிரகாசமாக்குங்கள்.

தேவைப்பட்டால் தெரபி எடுத்துக்கொள்ளுங்கள்

நிபுணர்களின் உதவியை எடுத்துக்கொள்வதற்கு உங்களுக்கு பலம் சேர்க்கும் ஒன்று என்பதை நீங்கள் உணரவேண்டும். அது பலவீனமல்ல. ப்ரேக்அப்புக்கு பின்னர் நீங்கள் கடும் மனஉளைச்சலில் இருந்தால், தெரபி உங்களுக்கு மீள்வதற்கு நல்ல கருவியாக அமையும். நல்ல பயிற்சிபெற்ற தெரபிஸ்ட் உங்களை புரிந்துகொண்டு உங்களை நல்ல முறையில் குணப்படுத்துவார்.

டாபிக்ஸ்

அடுத்த செய்தி