தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Rathasali Rice : ரத்த சோகை போக்கி, வாதம், பித்தம், கபம் சமநிலைப்படுத்தும் ரத்தசாலி பாரம்பரிய அரிசியின் நன்மைகள்!

Rathasali Rice : ரத்த சோகை போக்கி, வாதம், பித்தம், கபம் சமநிலைப்படுத்தும் ரத்தசாலி பாரம்பரிய அரிசியின் நன்மைகள்!

Priyadarshini R HT Tamil

Sep 06, 2023, 02:00 PM IST

google News
RathaSali Rice : ரத்தசாலி அரிசியின் நன்மைகள் என்ன என்று இங்கு தெரிந்துகொள்ளலாம். பாரம்பரிய அரிசிகளுள் தலையான ஒன்று.
RathaSali Rice : ரத்தசாலி அரிசியின் நன்மைகள் என்ன என்று இங்கு தெரிந்துகொள்ளலாம். பாரம்பரிய அரிசிகளுள் தலையான ஒன்று.

RathaSali Rice : ரத்தசாலி அரிசியின் நன்மைகள் என்ன என்று இங்கு தெரிந்துகொள்ளலாம். பாரம்பரிய அரிசிகளுள் தலையான ஒன்று.

அரிசி ரகத்திலேயே மிக பழமையான ஒன்று பல நூற்றாண்டுகளாக ஆயுர்வேத மருத்துவர்கள் மருந்தாகவும், நோயாளிகளுக்கு உணவாகவும், துணை மருந்தாகவும் கொடுத்து வருகின்றனர். ரத்தசாலி நெல் ரகம் 120 முதல் 125 நாட்கள் வயதுள்ள குட்டையான சன்ன சிவப்பு அரிசி, மூன்று பருவத்திற்க்கும் ஏற்ற ரகம்.

இயல்பாகவே நெல் வயலில் அதிகம் எலி காணப்படும், ரத்தசாலி பயிரிட்டுள்ள வயலில் இதன் வாசனைக்கு இருமடங்கு எலித்தொல்லை உண்டு. மேலும் நெல் மணிகள் உதிரும் தன்மை சற்று அதிகம். எனவே பராமரிப்பு இந்த ரகத்திற்கு அதிகம் தேவை. கை அறுவடைதான் செய்வது நல்லது,. ரத்தசாலி என்று பெயர் வர காரணம் நெல் தோல் மற்றும் அரிசி நிறம் ரத்த நிறத்தை ஒத்து காணப்படுவதாலும், ரத்தம் சார்ந்த அனைத்து பிரச்னைகளையும் அகற்றுவதே ஆகும்.

தமிழ்நாட்டிலும் தற்போது பயிரிட தொடங்கி உள்ளனர். வாதம், பித்தம் மற்றும் கபம் நாடி நிலைகளை சுத்தம் செய்து அதன் இயல்பில் இயங்க கேரள பாரம்பரிய ஆயுர்வேத வைத்தியர்கள் ரத்தசாலி அரிசியை பல நூற்றாண்டுகளாக பயன்படுத்தி வந்தார்கள். தற்போது வெகுசிலரே பயன்படுத்தி வருகின்றனர்.

ரத்தசாலி அரிசி பல்வேறு நோய்களுக்கு நல்ல நிவாரணம் அளிக்கிறது. பாரம்பரிய ஆயுர்வேத வைத்தியர் கூறி ரத்தசாலி அரிசியின் பயன்கள் கீழே தொகுத்து கொடுத்துள்ளோம்.

நலிந்து மெலிந்து இருப்பவர்களை புஷ்டியாக்கும் ரத்தசாலி சோறு.

நரம்பு பலவீனத்தை களைகிறது. உடல் வலிமைக்கு உதவும் ரத்தசாலி கஞ்சி.

ரத்த அழுத்தம், சிறுநீரக கோளாறுகள் மற்றும் நீரிழிவு நோயாளிகளுக்கு துணை உணவாகவும், மருந்தாகும் கொடுத்து வருகின்றனர்.

தாய்பால் சுரப்பு குறைவாக உள்ள தாய்மார்களுக்கு ரத்தசாலி அரிசி, பனைவெல்லம், ஏலக்காய், பசும்பால் கலந்த கஞ்சி நல்ல பலன்தரும்

அலர்ஜி, தோல் நோய்,கர்ப்பப்பை சார்ந்த பிரச்னைகள், வயிறு தொந்தரவு, கல்லீரல் தொந்தரவுகளுக்கு உணவாக கொடுக்கலாம்.

மலமிலக்கி ஆக செயல்படும். சிறுநீர் எரிச்சல் சரி செய்யும். உமிழ்நீர் சுரப்பு பற்றாகுறை உள்ளவர்களுக்கு நல்ல பலன் தரும், பிரசவத்திற்கு பின் வரும் மலசிக்கல், செரிமான கோளாறுகளுக்கு நல்ல உணவாகும்.

அரிசி கழுவிய நீரில் உடலை கழுவ தோல் அழற்சி குணமாகும். தோல் நோய்களுக்கு வெண்ணையுடன் கலந்து பூசலாம்.

மஞ்சள் பொடியுடன் சம அளவு ரத்தசாலி அரிசி பொடி கலந்து பசை போல வீக்கத்தின் மேல் இட்டு துணி வைத்து கட்ட நல்ல பலன் தரும்.

இவ்வாறாக ஒரு அரிசியே மருந்தாகவும், மருந்தே உணவாகவும் செயல்படும் அரிசியில் ரத்தசாலி அரிசிக்கு எப்போதும் நல்ல இடம் உண்டு.

தகவல் – புவனேஸ்வரி, இயற்கை ஆர்வலர், திருச்சி.

அடுத்த செய்தி