தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Hemorrhoids: மூல நோயால் பாதிக்கப்பட்டவர்கள் இத மட்டும் ஒரு வாரம் சாப்பிட்டு பாருங்க!

Hemorrhoids: மூல நோயால் பாதிக்கப்பட்டவர்கள் இத மட்டும் ஒரு வாரம் சாப்பிட்டு பாருங்க!

Jul 18, 2023, 05:00 PM IST

google News
அதே சமயம் துத்தி இலை வைத்தியத்தை தொடர்ந்த பின்னரும் பாதிப்பில் முன்னேற்றம் கிடைக்க வில்லை என்றால் முறையான மருத்துவரை அணுகி ஆலோசனை பெற்று மருந்து எடுத்து கொள்ள வேண்டும்.

இன்றை இளம் தலைமுறையினர் சிலருக்கு மூலநோய் பெரும் சவாலாக உள்ளது. அதிலும் உட்கார்ந்த இடத்தில் கணினி முன் அமர்ந்தே மணிக்கணக்கில் வேலை செய்பவர்களில் ஏராளமானோர் மூல நோயால் அவதிப்பட்டு வருகின்றனர். அதிலும் இந்த மூல நோய் குறித்து இளைஞர்கள் வெளியில் சொல்ல கூச்சப்படுகின்றனர். அப்படி பாதிக்கப்பட்டவர்கள் இந்த துத்தி இலை மருந்தை முயற்சித்து பார்க்கலாம் . துத்தி இலையில் நீர்ச்சத்து மற்றும் நார்ச்சத்து அதிகம் உள்ளது. இது மூல நோய்க்கு அருமருந்தாக பார்க்கப்படுகிறது.

தேவையான பொருட்கள்

துத்தி இலை

பால்

பனங்கற்கண்டு

செய்முறை

முதலில் இரண்டு கைபிடி துத்தி இலையை நன்றாக கழுவி கொள்ள வேண்டும்

பின் அந்த இலைகளை ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து மைய அரைத்து எடுத்து கொள்ள வேண்டும் அரைத்த கீரையை வடிகட்டியில் விட்டு சாறு பிழிந்து எடுத்து கெள்ள வேண்டும். இந்த சாற்றில் அரை டம்ளர் வரை பால் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும். மேலும் அதில் பனங்கற்கண்டு அல்லது நாட்டு சர்க்கரையை சேர்த்து கலந்து குடிக்க வேண்டும். குறிப்பாக இந்த மருந்தை காலையில் வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும்.

இதில் சாறு எடுத்த துத்தி இலை சக்கையை ஒரு துணியில் கட்டி புண் உள்ள இடத்தில் வைக்கலாம்.

இப்படி செய்தால் ஒரு வாரத்தில் மூலநோய் குணமாக வாய்ப்புள்ளது.

சமயத்தில் துத்தி இலை கிடைக்க வில்லை என்றால் நாட்டு மருந்து கடைகளில் பொடியாக கிடைக்கும். அதை வாங்கி வெந்நீரில் கலந்து தினமும் பருகி வந்தாலும் மூல நோய் குணமாகும். பிரச்சனை பெரிதாக உள்ளவர்கள் 15 முதல் 20 நாட்கள் வரை இதை எடுத்துக்கொள்ளலாம்.

அதே சமயம் துத்தி இலை வைத்தியத்தை தொடர்ந்த பின்னரும் பாதிப்பில் முன்னேற்றம் கிடைக்க வில்லை என்றால் முறையான மருத்துவரை அணுகி ஆலோசனை பெற்று மருந்து எடுத்து கொள்ள வேண்டும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

டாபிக்ஸ்

அடுத்த செய்தி