தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Parenting Tips : குழந்தைகளை புத்தகங்கள் வாசிக்க வைக்க வேண்டுமா? இதோ இவற்றை பின்பற்றுங்கள்!

Parenting Tips : குழந்தைகளை புத்தகங்கள் வாசிக்க வைக்க வேண்டுமா? இதோ இவற்றை பின்பற்றுங்கள்!

Priyadarshini R HT Tamil

Feb 13, 2024, 02:05 PM IST

google News
Parenting Tips : குழந்தைகளை புத்தகங்கள் வாசிக்க வைக்க வேண்டுமா? இதோ இவற்றை பின்பற்றுங்கள்!
Parenting Tips : குழந்தைகளை புத்தகங்கள் வாசிக்க வைக்க வேண்டுமா? இதோ இவற்றை பின்பற்றுங்கள்!

Parenting Tips : குழந்தைகளை புத்தகங்கள் வாசிக்க வைக்க வேண்டுமா? இதோ இவற்றை பின்பற்றுங்கள்!

மற்ற குழந்தைகள் சில குழந்தைகள் அதிகம் படிப்பதை விரும்புவார்கள் ஏன் தெரியுமா?          

குழந்தைகளுக்கு புத்தகங்கள் வாசிப்பது மற்றும் படிப்பது குறித்து பரவலான எண்ணங்கள் இருக்கும். ஒரு சிலருக்கு வாசிப்பது மிகவும் பிடித்த ஒரு பழக்கமாக இருக்கும். மற்றவர்களுக்கு பிடிக்காது. சில குழந்தைகளுக்கு வாசிப்பது ஏன் பிடிக்கிறது என்பதை தெரிந்துகொள்வோம். குழந்தைகள் புத்தங்கள் வாசிக்க எப்படி ஊக்கப்படுத்தலாம். 

முன்னரே வாசிக்கும் பழக்கத்தை அறிமுகப்படுத்துவது

குழந்தைகளுக்கு மிகச்சிறிய வயதிலேயே புத்தகங்கள் படிப்பதை ஊக்குவித்தால், அவர்கள், வாழ்நாள் முழுவதும் படிக்கும் ஆர்வம் அவர்களிடம் அதிகம் இருக்கும். முன்னரே அவர்களிடம் புத்தகங்கள் வாசிக்கும் பழக்கத்தை ஏற்படுத்திவிட்டீர்கள் என்றால் போதும், அவர்கள் புத்தகத்துடன் அதிக நேரத்தை செலவிடுவார்கள். அவர்களுக்கு புத்தகங்கள் படிப்பதை மகிழ்ச்சியான அனுபவமாக மாற்றிவிடும்.

புத்தகங்கள் படிப்பது

பல்வேறு புத்தகங்களை படிக்கும் வாய்ப்பு பெற்றவர்களுக்கு வாசிப்பு பழக்கம் இயல்பிலேயே ஏற்பட்டுவிடுகிறது. குழந்தை வயதிலேயே அவர்கள் பல்வேறு தலைப்புகளிலும் வாசித்து பழகினால் அவர்களுக்கு ஆர்வம் அதிகம் ஏற்படும். அது அவர்களுக்கு இயற்கையான ஆர்வத்தையும் தூண்டும். வாசிப்பு மீது அன்பும் ஏற்பட்டுவிடும்.

வாசிக்கும் பழக்கத்துக்கு ரோல் மாடலாகுங்கள்

குழந்தைகள், தங்கள் வீட்டில் உள்ள பெரியவர்கள் அதிக புத்தகங்கள் வாசிப்பதை பார்த்து வளர்பவர்களுக்கு படிப்பில் இயற்கையிலேயே ஆர்வம் ஏற்படும். எனவே, வீட்டில் உள்ள பெரியவர்கள் குழந்தைகள் முன் அமர்ந்து வாசிக்க வேண்டும். அப்போது குழந்தைகளும் வாசிக்க துவங்குவார்கள். அவர்கள் முன் வாசிக்கும்போது அவர்களுக்கு அது நேர்மறையான எண்ணங்களை ஏற்படுத்துகிறது.

அவர்களுக்கு பிடித்ததை படிக்க அனுமதியுங்கள்

புத்தகங்கள் அதிகம் பிடித்து படிப்பவர்களுக்கு, கற்பனைத்திறன் அதிகம் உண்டு. அவர்களின் ஆர்வம் அவர்களுக்கு மகிழ்ச்சியுடன் அறிவையும் வளர்க்க உதவுகிறது.

நேர்மறையான ஊக்குவிப்பு கிடைக்கும்போது 

குழந்தைகளுக்கு பாராட்டுகளும், ஊக்கமும் கிடைக்கும்போது, அவர்கள் அந்த செயலை அதிகம் விரும்பி செய்வார்கள். அதிலும் அவர்கள் வாசிக்கும்போது அவர்களை ஊக்குவிப்பது அவர்கள் நேர்மறையான தொடர்பை வாசிப்புடன் ஏற்படுத்தி விடுகிறது. இந்த எண்ணம் அவர்களை அதிகம் வாசிக்க ஊக்குவிக்கிறது.

கல்வியில் வெற்றி பெற்றால் 

குழந்தைகள் தங்கள் வாசிப்பின் மூலம், தங்கள் பள்ளி பாடங்களில் அதிக மதிப்பெண்கள் எடுத்துவிட்டால், அவர்கள் வாசிப்பதை விட மாட்டார்கள். தொடர்ந்து வாசிப்பார்கள். அது அவர்களை படிப்பிலும் சிறப்பாக்குகிறது. அறிவை தேடுவதிலும் அவர்களுக்கு துணை புரிவதால் அவர்கள் வாசிப்பதில் ஆர்வம் கொண்டிருப்பார்கள்.

பிற நடவடிக்கைகளில் இருந்து தப்பித்துக்கொள்ள

வாசிப்பு, சில குழந்தைகளுக்கு சில விஷயங்களில் இருந்து தப்பிக்க வழி அமைத்துக்கொடுக்கும். அவர்களை புதிய உலகத்திற்கு அழைத்துச்செல்லும். புதிய யோசனைகள், புதிய அனுபவங்களை அவர்களுக்கு ஏற்படுத்திக்கொடுக்கும். வாசிப்பு அவர்கள் இப்போது உள்ள சூழலை மாற்றிவிடும். அதுவும் அவர்களை வாசிக்க ஊக்குவிக்கும் காரணிகளுள் ஒன்று.

கலந்துரையாடும் வாசிப்பு பழக்கம்

குழந்தைகள் வாசித்தபின் கலந்துரையாடல்களில் ஈடுபட்டால், அவர்களுக்கு வாசிப்பின் மீது ஆர்வம் ஏற்படும். புத்தக சங்கங்கள் அல்லது வாசிப்பு குழுக்களுடன் சேர்ந்து அவர்கள் வாசிக்க கற்றுக்கொண்டால், வாசிப்பு அவர்களின் சமூக பழக்கவழக்கமாகிவிட்டால், அவர்களுக்கு அதுவும் ஆர்வத்தை அதிகரிக்கும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

https://twitter.com/httamilnews

https://www.facebook.com/HTTamilNews

https://www.youtube.com/@httamil

Google News: https://bit.ly/3onGqm9

டாபிக்ஸ்

அடுத்த செய்தி