Parenting Tips : நீங்கள் கூறுவதை காதுகொடுத்து கேட்கமாட்டேன் என அடம்பிடிக்கும் குழந்தையா? வழிக்கும் கொண்டுவர வழிகள்!
Feb 17, 2024, 04:59 PM IST
Parenting Tips : நீங்கள் கூறுவதை காதுகொடுத்து கேட்கமாட்டேன் என அடம்பிடிக்கும் குழந்தையா? வழிக்கும் கொண்டுவர வழிகள்!
சில குழந்தைகள் எப்போதும் ஏன் அடம்பிடிக்கிறார்கள்?
குழந்தைகள் எப்போதும் பெற்றோரை பல்வேறு காரணங்களுக்காக எதிர்க்கிறார்கள். சில நேரங்களில் அவர்கள் பெற்றோர்கள் கூறும் கருத்துக்களை அவமானமாக கருதுகிறார்கள். இதனால் அவர்கள் அடம்பிடிக்கிறார்கள். உங்கள் குழந்தைகள் அடம்பிடிக்க காரணங்கள் இவைதான். இவற்றை நீங்கள் தவிர்த்தால் அவர்கள் கட்டாயம் உங்கள் வழிக்கு வருவார்கள்.
தெளிவான உரையாடல் இல்லாதது
உங்கள் உரையாடல் இல்லாவிட்டால் அவர்கள் உங்களை கவனிக்கவும், நீங்கள் கூறுவதை கேட்கவும் மாட்டார்கள். உங்களின் எதிர்பார்ப்புகளை அவர்கள் புரிந்துகொள்ளும் விதத்தில் நீங்கள் கூறாவிட்டால், குழந்தைகள் உங்களை கவனிக்க மாட்டார்கள். எனவே உங்கள் உரையாடல் தெளிவாக இருக்கவேண்டும்.
ஒழுக்கத்தில் மாறுபட்ட நிலை
வீட்டிற்கென நீங்கள் வகுக்கும் விதிகள் அனைத்தும் எப்போதும் ஒரே மாதிரியாக கடைபிடிக்க வேண்டும். அதில் மாறுபாடு ஏற்பட்டால் குழந்தைகள் அதை கடைபிடிப்பதில் ஆர்வம் காட்டமாட்டார்கள். உங்களையும் மதிக்க மாட்டார்கள்.
அதிகமாக கட்டளையிட்டால்
குழந்தைகளுக்கு பெற்றோர் அதிக கட்டளையிட்டால், அவர்களின் உணர்வுகளை வெளிப்படுத்தவிடாமல் தொடர்ந்து அவர்களுக்கு கட்டளைகளை பிறப்பித்துக்கொண்டேயிருந்தால், அந்த குழந்தைகள் பெற்றோர்களை மதிக்க மாட்டார்கள்.
உங்கள் குழந்தைகளை உங்களை மதித்து நடந்துகொள்ள வேண்டுமென்றால், நீங்கள் அவர்களிடம் அன்பாக பேசி அவர்களையும் பேச அனுமதிக்க வேண்டும். அப்போதுதான் உங்கள் வழிக்கு வருவார்கள்.
கவனத்தை ஈர்க்கும் பழக்கம்
அவர்கள் கீழ்படிதலுடன் நடந்துகொள்ளவிட்டால் அவர்கள் மீது அதிக கவனம் செலுத்தப்படும் என்று என்று தெரிந்துகொண்டாலோ அல்லது நம்பினாலோ அந்த குழந்தை பெற்றோர் கூறுவதை காது கொடுத்து கேட்கமாட்டார்கள். எனவே, அதை தவிர்க்க வேண்டும்.
இடைவெளி அதிகரித்தால்
குழந்தைகளுக்கும் பெற்றோருக்குமான தொடர்பு துண்டிக்கப்பட்டாலோ அல்லது அதிகப்படியான வேலைப்பளு காரணமாக (இருவருக்கும்) அவர்களால் தரமான நேரத்தை செலவிட முடியவில்லையென்றால், அவர்கள் பெற்றோர் கூறுவதை கேட்க மாட்டார்கள்.
மரியாதையான உரையாடல் குறைவது
உங்கள் குழந்தைகளை நீங்கள் மரியாதையுடன் நடத்தவில்லையென்றாலோ அல்லது அவ்வாறு குழந்தைகள் உணர்ந்தாலோ, அவர்கள் பெற்றோருடன் உரையாடவோ அல்லது பெற்றோர் கூறுவதை கேட்கவோ மாட்டார்கள்.
அதிகப்படியான தேவைகள்
குழந்தைகள் அதிகப்படியான தேவை மற்றும் எதிர்பார்ப்புகளை, குறிப்பாக அவை அவர்களின் வளர்ச்சிக்கும், திறனுக்கும் பொருந்தாவிட்டால், அது குழந்தைகளுக்கு எரிச்சலை ஏற்படுத்தும். அதனால் அவர்கள் கவனிக்க வேண்டும் என்று நினைக்கமாட்டார்கள்.
உணர்வு ரீதியான துயரங்கள்
மனஅழுத்தத்தையும், உணர்வு ரீதியிலான துன்பங்களையும் எதிர்கொள்ளும் குழந்தைகளுக்கு, எதிலும் கவனம் செலுத்த முடியாமல் போய்விடும். எனவே குழந்தைகள் எப்போதும் மகிழ்வுடன் இருக்கிறார்களா என்பதை உறுதிசெய்துகொள்ளுங்கள்.
அதிகாரச் சண்டைகள்
பெற்றோர் குழந்தைகளுடன் அதிகாரச்சண்டைகளில் ஈடுபட்டால், அது குழந்தைகளை எதிர்க்கவும், ஏற்றுக்கொள்ளவும் முடியாததாகிவிடுகிறது. அவர்கள் தங்கள் குழந்தைகளின் சுதந்திரத்தை அறியச்செய்துவிடுகிறார்கள். எனவே குழந்தைகளிடம் அதிகாரச்சண்டைகளை செய்துகொள்ள வேண்டாம்.
எதிர்மறை தூண்டல்கள்
குழந்தைகள், கவனித்தல் மற்றும் சேர்ந்து பணி செய்தல் ஆகியவற்றில், ஆர்வமின்றி இருந்தால், எப்போதும் குழந்தைகளுக்கு தண்டனைகள் மட்டும் வழங்கப்பட்டால், அவர்களுக்கு எதிர்மறை எண்ணங்கள் கொடுக்கப்பட்டால், நல்ல பழக்கங்களுக்கு நேர்மறையான பாராட்டுக்கள் மறுக்கப்பட்டால் குழந்தைகள் பெற்றோரை கவனிக்கமாட்டார்கள்.
எனவே பெற்றோர் மேற்கொண்ட தவறுகளை செய்துவிடாமல் குழந்தைகளை தட்டிக்கொடுத்து, அவர்கள் சொல் பேச்சு கேட்க வைக்க வேண்டும்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்