இந்த ஒமேகா கொழுப்பு இருக்கும் உணவுகளை சாப்பிட்டால் புற்றுநோயை எதிர்க்கும்! புதிய ஆய்வில் தகவல்!
Nov 07, 2024, 12:03 PM IST
ஒமேகா -3 மற்றும் ஒமேகா -6 கொழுப்பு அமிலங்கள் உடலில் ஏற்படும் வீக்கம் மற்றும் செல் வளர்ச்சியைக் கட்டுப்படுத்த உதவுகின்றன. மேலும் இது புற்றுநோயிலிருந்து பாதுகாக்க உதவுகிறது.
ஒமேகா -3 மற்றும் ஒமேகா -6 கொழுப்பு அமிலங்கள் உடலில் ஏற்படும் வீக்கம் மற்றும் செல் வளர்ச்சியைக் கட்டுப்படுத்த உதவுகின்றன. மேலும் இது புற்றுநோயிலிருந்து பாதுகாக்க உதவுகிறது.இதயம் மற்றும் மூளை ஆரோக்கியம் சீராக இருக்க உதவும் ஒமேகா கொழுப்புகள், புற்றுநோய்க்கு எதிரான உடலின் எதிர்ப்பிற்கும் காரணமாக இருக்கலாம் என ஒரு புதிய ஆய்வூ ஒன்றில் தெரியவந்துள்ளது. இது குறித்து ஜோர்ஜியா பல்கலைக்கழகத்தின் யுசென் ஜாங் தலைமையிலான ஆய்வுக் குழு நடத்திய சமீபத்திய ஆய்வில், ஒமேகா-3 மற்றும் ஒமேகா-6 கொழுப்பு அமிலங்கள் பல புற்றுநோய்களை தடுப்பதற்கான ஆற்றலை கொண்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
ஆய்வின் முடிவுகள்
பெருங்குடல், வயிறு மற்றும் நுரையீரல் புற்றுநோய் மற்றும் பிற செரிமானப் பாதை புற்றுநோய்களின் குறைந்த விகிதங்களுடன் ஒமேகா -3 களின் அதிக அளவுகள் இணைக்கப்பட்டுள்ளதாக ஆய்வு காட்டுகிறது. அதிக அளவு ஒமேகா-6 கொழுப்பு அமிலங்களை உட்கொண்ட பங்கேற்பாளர்களின் உடலில் மூளை, தோல், சிறுநீர்ப்பை மற்றும் பலவற்றை உள்ளடக்கிய 14 வகையான புற்றுநோய்களைப் பெறுவதற்கான ஆபத்து குறைவதாக ஆய்வு கண்டறிந்துள்ளது.
ஜார்ஜியா பல்கலைக்கழகத்தின் முனைவர் பட்டம் பெற்ற மாணவரும், இந்த ஆய்வின் தலைவருமான யுச்சென் ஜாங், பல்கலைக்கழக வெளியீட்டில், ஆய்வின் முடிவுகள் மக்கள் ஏன் இந்த ஆரோக்கியமான கொழுப்பு அமிலங்களை உணவில் உட்கொள்வதை அதிகரிக்க வேண்டும் என்பதை நிரூபித்ததாகக் கூறினார்.
ஒமேகா-3 மற்றும் ஒமேகா-6 கொழுப்பு அமிலங்களின் பல நன்மைகள்:
ஒமேகா -3 மற்றும் ஒமேகா -6 கொழுப்பு அமிலங்கள் உடல் செயல்பாடுகளில் ஆரோக்கியமான தாக்கத்திற்கு உதவுகின்றன. ஆய்வில் பங்கேற்ற பங்கேறப்பாளரின் ஒருவரது எடை, மது அருந்துதல் அல்லது உடல் செயல்பாடு உட்பட ஒட்டுமொத்த ஆரோக்கிய சுயவிவரம் இருந்தபோதிலும், அவரது உடலில் இருக்கும் ஆரோக்கியமான கொழுப்புகள் புற்றுநோய்க்கு எதிராக ஒரு பாதுகாப்பு தாக்கத்தை ஏற்படுத்துவதாக ஆய்வு மேலும் கண்டறிந்துள்ளது.
அதிக ஒமேகா -3 அளவுகள்
இருப்பினும், அதிக அளவு ஒமேகா -3 கொழுப்பு அமிலங்களைக் கொண்டிருப்பதில் குறைபாடுகள் உள்ளன. அதிக அளவு ஆரோக்கியமான கொழுப்புகள் ஆண்களுக்கு புரோஸ்டேட் புற்றுநோயின் அபாயத்தை ஏற்படுத்தும் என்று கண்டறியப்பட்டது. பெண்களில், ஒமேகா-6 கொழுப்பு அமிலங்களின் பாதுகாப்பு தாக்கம் ஆண்களை விட அதிகமாக காணப்பட்டது.
புற்றுநோயக்கு எதிராக கொழுப்பு அமிலங்கள்
ஒமேகா-3 மற்றும் ஒமேகா-6 கொழுப்பு அமிலங்கள் உடலில் ஏற்படும் அழற்சியைக் கட்டுப்படுத்தவும், செல் வளர்ச்சியைக் கட்டுப்படுத்தவும் உதவுகின்றன. இது நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்தவும், புற்றுநோயிலிருந்து உடலைப் பாதுகாக்கவும் மேலும் உதவும்.
ஆரோக்கியமான கொழுப்புகளின் ஆதாரங்கள்
கொழுப்பு நிறைந்த மீன், கொட்டைகள், விதைகள் மற்றும் சில தாவர எண்ணெய்களில் இந்த ஆரோக்கியமான கொழுப்புகள் நிறைந்துள்ளன. இதயம் மற்றும் மூளையின் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும், புற்றுநோயிலிருந்து நம்மைப் பாதுகாத்துக் கொள்ளவும் தினசரி உணவில் சால்மன், அக்ரூட் பருப்புகள் மற்றும் ஆளிவிதைகளை சேர்ப்பது முக்கியம்.
பொறுப்பு துறப்பு
இங்கு பகிரப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் முற்றிலும் உண்மை என்றும், இதனால் தீர்வு நிச்சயம் என்றும் கூற முடியாது. ஆனாலும், அனுபவங்களின் அடிப்படையில் தேர்ந்தெடுத்து ஆய்ந்தறிந்தே வழங்கப்படுகிறது. இவையனைத்தும் தீர்வு என்று நாங்கள் ஒரு போதும் கூறமாட்டோம்.
எனவே, நாள்பட்ட அல்லது தீவிரமான பிரச்னைகளுக்கு மருத்துவரை அணுகுவதுதான் சிறந்த வழி. எனவே தேவையான பிரச்னைகளுக்கு மருத்துவரை அணுகி பலன்பெறுவதே சிறந்தது. இவையெல்லாம் முதலுதவி போல் உதவக்கூடும். இங்கு கொடுக்கப்படும் மருத்துவக்குறிப்புக்களை பின்பற்றி பயன்பெறுங்கள்.
டாபிக்ஸ்