தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Non-veg Masala Powder : மட்டன் – சிக்கன் மசாலா தூள்! உங்க வீட்டு அசைவ குழம்பு வேற லெவல் டேஸ்டா இருக்கும்!

Non-Veg Masala Powder : மட்டன் – சிக்கன் மசாலா தூள்! உங்க வீட்டு அசைவ குழம்பு வேற லெவல் டேஸ்டா இருக்கும்!

Priyadarshini R HT Tamil

Oct 08, 2023, 12:01 PM IST

google News
Non-Veg Masala Powder : மட்டன் – சிக்கன் மசாலா தூள் இந்த முறையில் செய்து பாருங்கள். உங்க வீட்டு அசைவ குழம்பு வேற லெவல் டேஸ்டில் அசத்தும்.
Non-Veg Masala Powder : மட்டன் – சிக்கன் மசாலா தூள் இந்த முறையில் செய்து பாருங்கள். உங்க வீட்டு அசைவ குழம்பு வேற லெவல் டேஸ்டில் அசத்தும்.

Non-Veg Masala Powder : மட்டன் – சிக்கன் மசாலா தூள் இந்த முறையில் செய்து பாருங்கள். உங்க வீட்டு அசைவ குழம்பு வேற லெவல் டேஸ்டில் அசத்தும்.

தேவையான பொருட்கள்

நாட்டு மல்லி விதைகள் – கால் கப்

சோம்பு – 1 டேபிள் ஸ்பூன்

மிளகு – 1 டேபிள் ஸ்பூன்

சீரகம் - ஸ்பூன்

(இந்த நான்கு பொருட்களையும் முதலில் தனியாக வறுத்து ஆறவைக்க வேண்டும்)

பட்டை – 4

கிராம்பு – 15

ஸ்டார் சோம்பு – 1

பிரியாணி இலை – 3

கல்பாசி – 1 ஸ்பூன்

ஏலக்காய் - 4

(இவற்றை தனியாக வறுத்து ஏற்கனவே வறுத்து வைத்துள்ள மசாலா கலவையுடன் சேர்த்துக்கொள்ள வேண்டும்)

புழுங்கல் அரிசி – 1 ஸ்பூன்

கசகசா – 1 ஸ்பூன்

கறிவேப்பிலை – 2 கொத்து

(புழுங்கல் அரிசியை பொன்னிறமாக வறுத்துக்கொள்ள வேண்டும். பின்னர் அதில் கழுவி நன்றாக காயவைத்த கறிவேப்பிலை சேர்த்து வறுத்துக்கொள்ள வேண்டும். அடுப்பை அணைத்துவிட்டு அந்த சூட்டிலேயே கசகசாவையும் சேர்த்துக்கொள்ள வறுபட விடவேண்டும். பின்னர் அனைத்தையும் ஒன்றாக சேர்த்து ஆறவைக்கவேண்டும்)

கஷ்மீரி மிளகாய் தூள் – 1 ஸ்பூன்

வர மிளகாய் தூள் – 1 ஸ்பூன்

ஆறிய அனைத்து பொருட்களையும் ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து அதனுடன் கஷ்மீரி மிளகாய் தூள் மற்றும் வர மிளகாய் தூள் சேர்த்து நல்ல பொடியாக அரைத்து எடுத்துக்கொள்ள வேண்டும்.

இதில் புழுங்கல் அரிசி சேர்த்துள்ளதால் இது குழம்புக்கு நல்ல கெட்டித்தன்மையை கொடுக்கும்.

இந்தப்பொடியை பயன்படுத்தி நீங்கள் மட்டன் அல்லது சிக்கன் குழம்பு செய்தீர்கள் என்றால் அதன் மணம் ஊரையே உங்கள் வீட்டுக்கு அழைக்கும். சுவை அதைவிட அபாரமாக இருக்கும். உங்கள் வீட்டில் உள்ளவர்கள் வெறும் குழம்பையே வேண்டும், வேண்டும் என்று சாப்பிட்டுக்கொண்டே இருப்பார்கள்.

இதை நீங்கள் மீன் தவிர அனைத்து அசைவ கிரேவி மற்றும் பிரியாணிக்களுக்கு பயன்படுத்தலாம். சைவத்தில் கிரேவி செய்யும்போதும், சிக்கன் 65, பன்னீர் 65 மற்றும் கோபி, காளான் 65 செய்வதற்கு மேரியனேட் செய்ய பயன்படுத்தலாம். அதற்கும் சுவையை அள்ளித்தரும்.

இந்த பொடியும் அதிகளவில் மணமாகவே இருக்கும். அனைவரும் அதை மிகவும் விரும்புவார்கள்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

அடுத்த செய்தி