தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Nipah Virus : விடாமல் துரத்தும் தொற்றுகள்! விலங்குகளே காரணம்! நிபா வைரசிடம் இருந்து தப்பிப்பது எப்படி?

Nipah Virus : விடாமல் துரத்தும் தொற்றுகள்! விலங்குகளே காரணம்! நிபா வைரசிடம் இருந்து தப்பிப்பது எப்படி?

Priyadarshini R HT Tamil

Sep 15, 2023, 10:00 AM IST

google News
கேரளாவில் நிபா வைரஸ் தொற்று அதிகரித்து வருகிறது. நிபா வைரசின் அறிகுறிகள் மற்றும் அவை வராமல் தடுத்துக்கொள்வது எப்படி என்று தெரிந்துகொள்ளுங்கள்.
கேரளாவில் நிபா வைரஸ் தொற்று அதிகரித்து வருகிறது. நிபா வைரசின் அறிகுறிகள் மற்றும் அவை வராமல் தடுத்துக்கொள்வது எப்படி என்று தெரிந்துகொள்ளுங்கள்.

கேரளாவில் நிபா வைரஸ் தொற்று அதிகரித்து வருகிறது. நிபா வைரசின் அறிகுறிகள் மற்றும் அவை வராமல் தடுத்துக்கொள்வது எப்படி என்று தெரிந்துகொள்ளுங்கள்.

கேரளாவில் 706க்கும் மேற்பட்டோருக்கு நிபா வைரஸ் தொற்று ஏற்பட்டு அதில் 77 பேர் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். 1999ம் ஆண்டு நிபா வைரஸ் மலேசியாவில் கண்டுபிடிக்கப்பட்டது. 2001ல் பன்றி வளர்ப்பவர்களிடம் பங்களாதேஷிலும் காணப்பட்டது. உலக சுகாதார நிறுவனத்தை பொறுத்தவரை நிபா பாதித்தால் 40 முதல் 75 சதவீதம் வரை உயிரிழப்பு ஏற்படுகிறது. இது பரவும் அளவைப்பொறுத்து மாறுபடுகிறது.

நிபா வைரஸ் என்றால் என்ன?

நிபா வைரஸ் அல்லது என்ஐவி என்பது மனிதர்கள் மற்றும் விலங்குகளிடம் பரவுகிறது. நாம் நிபா வைரஸ் குறித்து ஏன் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்பதற்கு மருத்துவர்கள் கூறும் காரணங்கள்

உயிரிழப்பு அதிகம்

கடுமையான அறிகுறிகள்

குறிப்பிட்ட சிகிச்சை குறைவு

ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்கு எளிதாக பரவும்

தீவிரமாக பரவக்கூடியது

நிபா வைரசின் அறிகுறிகள்

இது பொது சுகாதாரத்திற்கு கடும் அச்சுறுத்தலை ஏற்படுத்துகிறது. எனவே ஆரம்பத்திலே கண்டுபிடித்து இது பரவாமல் தடுக்க வேண்டியது அவசியம்.

காய்ச்சல்

தலைவலி

இருமல்

மூச்சு திணறல்

வாந்தி

தூக்கம்

வலிப்பு

மயக்கம்

நிபா வைரஸ் ஏற்பட காரணங்கள்

இது விலங்குகளில் இருந்து மனிதர்களுக்கு பரவக்கூடியது.

பழந்திண்ணி வவ்வால்களிடம் இருந்து நிபா வைரஸ் பரவுகிறது. இவை அறிகுறிகள் காட்டாமல் இந்த வைரசை கொண்டுள்ளன.

நிபா வைரஸ் வவ்வால்களிடம் இருந்து மற்ற விலங்குகளுக்கு எளிதில் பரவிவிடும். அதிலிருந்து மனிதர்களுக்கும் பரவிவிடும். பன்றிகளிலும் இந்த வைரஸ் காணப்படுகிறது.

வவ்வால்களின் எச்சில், சிறுநீர், வவ்வால்களுடன் மனிதர்கள் அதிக தொடர்பில் இருக்கும் இடங்களில் இந்த வைரஸ் மனிதர்களுக்கு எளிதில் பரவிவிடுகிறது.

நிபாவுக்கான சிகிச்சை

இதுவரை நிபாவுக்கான சிகிச்சைகளோ, தடுப்பு மருந்துகளோ இல்லை. எனவே தடுப்பு ஒன்றே அவசியம்.

பாதிக்கப்பட்டவர்கள் தனிமைப்படுத்தப்படவேண்டும். அப்போது வைரஸ் பரவல் கட்டுப்படும்.

கடுமையான தடுப்பு நடவடிக்கைகள் பின்பற்றப்படவேண்டும். தனிப்பட்ட பாதுகாப்ப கவசம் அணிய வேண்டும்.

சுவாச கோளாறு ஏற்படுபவர்களுக்கு வெண்டிலேசன் அல்லது ஆக்ஸிஜன் சுவாசிக்க தேவைப்படும்.

உடலில் தண்ணீர்ச்சத்து அதிகம் வேண்டும். எலெக்ட்ரோலைட்கள் சமமாக இருக்க வேண்டும்.

உடலில் நீர்ச்சத்தை பராமரிக்க குளுக்கோஸ் ஏற்றப்படும்.

தப்பித்துக்கொள்ள நீங்கள் செய்ய வேண்டியது என்ன? 

உங்கள் கைகளை சோப்பு போட்டு தண்ணீரில் கழுவ வேண்டும். குறிப்பாக சாப்பிடுவதற்கு முன் கட்டாயம் கழுவவேண்டும்.

பாதிக்கப்பட்ட பன்றிகள் மற்றும் வவ்வால்களிடம் இருந்து விலகியிருக்க வேண்டும்.

வவ்வால்கள் இருக்கும் இடத்திற்கு செல்ல வேண்டாம்.

வவ்வால் சாப்பிடுவது அல்லது வவ்வால்களால் மாசுபட்ட பொருட்களை உட்கொள்ள வேண்டாம். பழுத்த பழம், மரத்தில் இருந்து பழுத்து கடிபட்டு விழுந்த பழங்களை உட்கொள்ள வேண்டாம்.

நிபா வைரஸ் தொற்று ஏற்பட்டவர்களுடன் தொடர்பில் இருக்க வேண்டாம். இப்படி நீங்கள் உங்களை பாதுகாத்துக்கொண்டால் நிபா வைரசில் இருந்து தப்பிக்கலாம்.

டாபிக்ஸ்

அடுத்த செய்தி