Sukku Kali: பிரசவமான பெண்களின் கர்ப்பப்பை வலுப்பெற வேண்டுமா? இதோ இதமான சுக்கு களி!
Sep 21, 2023, 12:15 PM IST
பிரசமான பெண்களுக்கு இந்த ஒரு சுக்கு களியே போதும்.
பொதுவாக சளி இருமல் என்றால் இப்படி ஒரு சுக்கு களி செய்து சாப்பிடலாம். உங்கள் குழந்தைகளின் எலும்புகள் வலும்பெற இது பெரிதும் உதவும். பிரசமான பெண்களுக்கு இந்த ஒரு களியே போதும்.
தேவையான பொருட்கள்
சுக்கு
நல்லெண்ணெய்
கருப்பட்டி
ஏலக்காய்
உப்பு
செய்முறை
50 கிராம் அளவு சுக்கை இடி கல்லில் வைத்து தட்டி எடுத்து கொள்ள வேண்டும். பின்னர் தட்டி எடுத்த சுக்கை மிக்ஸி ஜாரில் சேர்த்து இரண்டு ஏலக்காயையும் சேர்த்து நன்றாக பவுடர் செய்து சலித்து எடுத்து கொள்ள வேண்டும்.
ஒரு கப் அரிசியை கழுவி 2 மணி நேரம் நீரில் ஊற வைக்க வேண்டும். பின்னர் ஊற வைத்த அரிசியை நன்றாக அரைத்து எடுத்து கொள்ள வேண்டும்.
அரிசி அளந்து எடுத்த அதே கப்பில் 5 கப் அளவு தண்ணீர் சேர்த்து அரிசி மாவை கரைத்து கொள்ள வேண்டும். அரிசி எடுத்த அதே கப்பில் இரண்டு கப் அளவு கருப்பட்டி எடுத்து கொள்ள வேண்டும். இனிப்பு அதிகம் விரும்புபவர்கள் தேவையான அளவு எடுத்து கொள்ளலாம்.
கருப்பட்டியை லேசாக தண்ணீர் கலந்து காய்ச்சி வடிகட்டி எடுத்து கொள்ள வேண்டும். ஒரு அடி கனமான பாத்திரத்தில் அரிசி மாவை சேர்த்து கலந்து விட வேண்டும் அதில் கருப்பட்டி பாகையும் கலந்து கொள்ள வேண்டும். தொடர்ச்சியாக அடுப்பை குறைவான தீயில் வைத்து கொஞ்சம் கொஞ்சமாக 50 மில்லி நல்லெண்ணெய்யை சேர்த்து கொள்ள வேண்டும். இந்த களி ரெடியாக குறைந்தது 20 நிமிடங்கள் வரை எடுக்கும். அடுப்பை குறைவான தீயில் வைத்து செய்தால் அடி பிடிக்காது . களியில் எண்ணெய் பிரிந்து வரும் போது அடுப்பை அணைத்து விடலாம். ஈரமான கையில் தொட்டால் களி கையில் ஒட்டாமல் இருந்தால் ரெடியாகி விட்டது என்பதை தெரிந்து கொள்ளலாம் சிறிது நேரம் வைத்து பின்னர் பரிமாறினால் சூடான சுக்கு களி ரெடி.
இது எலும்பு வலுப்பெறவும் நெஞ்சு சளி பித்தம் ஆகியவற்றை போக்க பெரிதும் உதவும். கர்ப்பமான பெண்கள் மட்டும் இந்த களியை தவிர்த்து விடலாம்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
டாபிக்ஸ்