Mutton Rib Bone Soup : மழைக்கு இதமானது! சளி, இருமல், காய்ச்சலுக்கு நல்லது! நெஞ்சு எலும்பு சூப்!
Nov 15, 2023, 07:00 AM IST
Mutton Rib Bone Soup : மழைக்கு இதமானது! சளி, இருமல், காய்ச்சலுக்கு நல்லது! நெஞ்சு எலும்பு சூப்!
தேவையான பொருட்கள்
மசாலா தூள் தயாரிக்க
சீரகம் – ஒரு ஸ்பூன்
மிளகு – ஒரு ஸ்பூன
வரகொத்தமல்லி – ஒரு டேபிள் ஸ்பூன்
நெஞ்சு எலும்பு சூப்
அரைத்த மசாலா தூள் – ஒரு டேபிள் ஸ்பூன்
பூண்டு - 6 பற்கள் (தட்டியது)
சின்ன வெங்காயம் - 1 கப் (தட்டியது)
எண்ணெய் – ஒரு டேபிள் ஸ்பூன்
பட்டை - 1 துண்டு
கிராம்பு - 5
சோம்பு – ஒரு ஸ்பூன்
பிரியாணி இலை - 1
ஆட்டு நெஞ்சு எலும்பு - 250 கிராம்
தக்காளி – 1 (பொடியாக நறுக்கியது)
மஞ்சள் தூள் – அரை ஸ்பூன்
கல் உப்பு – தேவையான அளவு
கறிவேப்பிலை – 2 கொத்து
கொத்துமல்லி இலை – கைப்பிடியளவு
தண்ணீர் - 3 கப்
செய்முறை –
முதலில் மசாலா தூள் அரைத்துக்கொள்ள வேண்டும். அதற்கு ஒரு காய்ந்த மிக்ஸி ஜாரில் மிளகு, சீரகம், வர கொத்தமல்லி என அனைத்தையும் சேர்த்து நன்றாக பொடித்துக்கொள்ள வேண்டும்.
அடுத்து பூண்டை தோலுடனும், சின்ன வெங்காயத்தையும் நன்கு தட்டி எடுத்துக்கொள்ள வேண்டும்.
அடுத்த பிரஷர் குக்கரில் எண்ணெய் ஊற்றி பட்டை, கிராம்பு, சோம்பு, பிரியாணி இலை மற்றும் நெஞ்சு எலும்பு கறியை போட்டு வதக்க வேண்டும்.
அடுத்து தட்டிய பூண்டு, தட்டிய சின்ன வெங்காயம், தக்காளி, மஞ்சள் தூள், ஒரு மேசைக்கரண்டி அரைத்த மசாலா, கல்லுப்பு மற்றும் கருவேப்பிலை சேர்க்கவேண்டும். அதில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றிக்கொள்ள வேண்டும்.
குக்கரை மூடி மிதமான சூட்டில் 10 விசில் வரும் வரை வேக வைக்கவேண்டும். பிரஷர் ரிலீஸ் ஆனவுடன், குக்கரை திறந்து அதில் நறுக்கிய கொத்தமல்லி மற்றும் கருவேப்பிலை இலைகளை சேர்க்க வேண்டும். சூடான நெஞ்செலும்பு சூப் தயார்.
மழைக்காலத்தில் சளி, இருமல், காய்ச்சலுக்கு நல்லது. குழந்தைகளுக்கு அடிக்கடி செய்து கொடுத்தால் அவர்களின் உடல் வலுப்பெறும். இதில் நெய்யும் சேர்த்துக்கொள்ளலாம். குழந்தைகளுக்கு நெய் சேர்த்து கொடுப்பது கூடுதல் பலனை கொடுக்கிறது.
ஹேமா சுப்ரமணியன்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
டாபிக்ஸ்