தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Murungai Muttai Bonda: மழைக்கு இதமாக ருசியான முருங்கை முட்டை போண்டா இப்படி செஞ்சு பாருங்க!

Murungai Muttai Bonda: மழைக்கு இதமாக ருசியான முருங்கை முட்டை போண்டா இப்படி செஞ்சு பாருங்க!

Nov 09, 2023, 10:03 AM IST

google News
முருங்கை இலையில் அதிக அளவில் உள்ள ஆன்டி ஆக்சிடண்ட் உடல் பருமன், இருதய நோய்கள், ஆா்த்தரிட்டிஸ், கல்லீரல் நோய்கள், தோல் நோய்கள், ஜீரணக் கோளாறு உள்ளிட்டவற்றைக் குணப்படுத்தும்.
முருங்கை இலையில் அதிக அளவில் உள்ள ஆன்டி ஆக்சிடண்ட் உடல் பருமன், இருதய நோய்கள், ஆா்த்தரிட்டிஸ், கல்லீரல் நோய்கள், தோல் நோய்கள், ஜீரணக் கோளாறு உள்ளிட்டவற்றைக் குணப்படுத்தும்.

முருங்கை இலையில் அதிக அளவில் உள்ள ஆன்டி ஆக்சிடண்ட் உடல் பருமன், இருதய நோய்கள், ஆா்த்தரிட்டிஸ், கல்லீரல் நோய்கள், தோல் நோய்கள், ஜீரணக் கோளாறு உள்ளிட்டவற்றைக் குணப்படுத்தும்.

தமிழகத்தின் பல பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இந்த மழைக்கு இதமாக வடை, பஜ்ஜி, பக்கோடா சாப்பிடுவது வழக்கம் தான். அதிலும் குழந்தைகள் வீட்டில் இருக்கும் போது இப்படி ருசியான சத்தான முருங்கை முட்டை போண்டா செய்து கொடுத்தால் ஆரோக்கியமாகவும் இருக்கும். வாங்க முருங்கை முட்டை போண்டா எப்படி செய்வது என பார்க்கலாம் வாங்க

தேவையான பொருட்கள்

முருங்கை கீரை

முட்டை

மிளகு பொடி

சீரகம்

கடலை மாவு

சின்ன வெங்காயம்

பச்சை மிளகாய்

உப்பு

பூண்டு

இஞ்சி

மஞ்சள் தூள்

எண்ணெய்

கறிவேப்பிலை

மல்லி இலை

செய்முறை

ஒரு கட்டு முருங்கை கீரையை நன்றாக சுத்தம் செய்து எடுத்து கொள்ள வேண்டும். அதை ஒரு அகலமான பாத்திரத்தில்  5 முட்டையை உடைத்து சேர்த்து கொள்ள வேண்டும். அதில் ஒரு கப் கடலை மாவை சேர்த்து கொள்ள வேண்டும். 

மேலும் ஒரு ஸ்பூன் மிளகு தூளை சேர்த்து கொள்ள வேண்டும். அதில் ஒரு ஸ்பூன் சீரகத்தை கசக்கி சேர்த்து கொள்ள வேண்டும். பின்னர் ஒரு கால் ஸ்பூன் மஞ்சள் தூளை சேர்த்து கொள்ள வேண்டும். மேலும் அதில் அரை ஸ்பூன் பெருங்காய தூளை சேர்த்து கொள்ள வேண்டும். அதில் 200 கிராம் சின்ன வெங்காயத்தை பொடியாக சேர்த்து கொள்ள வேண்டும்.  அதில் காரத்திற்கு ஏற்ப பச்சை மிளகாயையும் பொடியான நறுக்கி சேர்த்து கொள்ளலாம்.

மேலும் 100 கிராம் அளவு பூண்டையும் பொடியாக நறுக்கி சேர்த்து கொள்ள வேண்டும். இதில் ஒரு கால் துண்டு இஞ்சியை நன்றாக அரைத்து சேர்த்து கொள்ள வேண்டும். அதில் தேவையான அளவு உப்பு மற்றும் கறிவேப்பிலை, கொத்தமல்லியை பொடியாக நறுக்கி சேர்த்து கொள்ள வேண்டும்.

ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடாக்க வேண்டும் அதில் ஒரு குழி கரண்டி எண்ணெய்யை மாவுடன் சேர்த்து நன்றாக கலந்து விட வேண்டும்.

பின்னர் சூடான எண்ணெய்யில் முருங்கை இலை, கடலை மாவு, முட்டை கலந்த மாவை குட்டி குட்டியாக உருட்டி எண்ணெய்யில் சேர்த்து வேக விட வேண்டும். அவ்வளவுதான் இந்த மாவு நன்றாக சிவக்கும் அளவிற்கு வேக விட வேண்டும்.  அவ்வளவுதான் ருசியாக முருங்கை முட்டை போண்டா ரெடி. உங்கள் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள்.

முருங்கைக்கீரை நன்மைகள்

மலிவாக கிடைக்கும் முருங்கைக்கீரையில் எண்ணற்ற மருத்துவ குணங்கள் உள்ளன

முருங்கை கீரை சூப் குடித்து வந்தால் உங்கள் உடல் எடை கணிசமாக குறையும்.

சர்க்கரை நோயால் அவதிப்படுபவர்கள் வாரத்திற்கு 3 முறை முருங்கைக் கீரை சூப் குடித்து வந்தால் உங்களது சர்க்கரை அளவு குறையும்.

முருங்கைக் கீரையில் உடலுக்குத் தேவையான இரும்புச்சத்து உள்ளது. இது ரத்தத்தில் உள்ள ஹீமோகுளோபினை அதிகரிக்கச் செய்யும்

முருங்கை கீரை சூப் குடித்து வந்தால் உங்கள் உடல் எடை கணிசமாக குறையும். தலைமுடிக்கு சிறந்த மருந்து முருங்கை. நரைமுடியும் குறையும்.

மலச்சிக்கல், வயிற்று வலி, வயிற்றுப்புண் நீங்கும். தோல் வியாதிகள் தீரும். உடல் சூட்டை தணிக்கும். வயிற்றுப்புண், வாய்ப்புண் குணமாகும்.

முருங்கை இலையில் அதிக அளவில் உள்ள ஆன்டி ஆக்சிடண்ட் உடல் பருமன், இருதய நோய்கள், ஆா்த்தரிட்டிஸ், கல்லீரல் நோய்கள், தோல் நோய்கள், ஜீரணக் கோளாறு உள்ளிட்டவற்றைக் குணப்படுத்தும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், ஆன்மிகம், புகைப்பட கேலரி, வெப் ஸ்டோரி, வேலைவாய்ப்பு தகவல்கள், சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

 

டாபிக்ஸ்

அடுத்த செய்தி
கவனம் பெற்றவை