தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Mint, Coriander Rice: மணம் நிறைந்த கொத்தமல்லி, புதினா சாதம், சாப்பிட்டுக்கொண்டே இருக்க தூண்டும் சுவையில் செய்வது எப்படி

Mint, Coriander Rice: மணம் நிறைந்த கொத்தமல்லி, புதினா சாதம், சாப்பிட்டுக்கொண்டே இருக்க தூண்டும் சுவையில் செய்வது எப்படி

Priyadarshini R HT Tamil

Jul 30, 2023, 04:58 PM IST

google News
Mint, Coriander Rice : இந்த புதினா மல்லி சாதத்தை நீங்கள் சமைத்த அல்லது சமைக்காத எந்த சாதத்தில் வேண்டுமானாலும் செய்ய முடியும். சமைக்காத அரிசி என்றால் இரண்டு கப் எடுத்து ஊறவைத்துக்கொள்ள வேண்டும். சமைத்த சாதம் என்றால் 4 கப் எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும்.
Mint, Coriander Rice : இந்த புதினா மல்லி சாதத்தை நீங்கள் சமைத்த அல்லது சமைக்காத எந்த சாதத்தில் வேண்டுமானாலும் செய்ய முடியும். சமைக்காத அரிசி என்றால் இரண்டு கப் எடுத்து ஊறவைத்துக்கொள்ள வேண்டும். சமைத்த சாதம் என்றால் 4 கப் எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும்.

Mint, Coriander Rice : இந்த புதினா மல்லி சாதத்தை நீங்கள் சமைத்த அல்லது சமைக்காத எந்த சாதத்தில் வேண்டுமானாலும் செய்ய முடியும். சமைக்காத அரிசி என்றால் இரண்டு கப் எடுத்து ஊறவைத்துக்கொள்ள வேண்டும். சமைத்த சாதம் என்றால் 4 கப் எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும்.

மணம் நிறைந்த புதினா சாதம் செய்வது எப்படி என்று தெரிந்துகொள்ளுங்கள். புதினாவையும், கொத்தமல்லியையும் நீங்கள் எளிதாக வீட்டு தோட்டத்திலே வளர்த்துவிடலாம். தேவைக்கு ஏற்பட கடைகளிலும் வாங்கிக்கொள்ளலாம். ஆண்டுமுழுவதும் தடையற கிடைப்பவை. அதனால் இந்த சாதத்தை நீங்கள் எப்போது வேண்டுமானாலும் செய்யலாம். இது லஞ்ச் பாக்ஸ் ரெசிபியாகும். வழக்கமான சாதத்தைவிட இதுபோன்ற சாதத்தை செய்யும்போது நமது லஞ்ச் பாக்ஸ் சீக்கிரம் காலியாகிவிடும்.

புதினா மற்றும் கொத்தமல்லி இரண்டிலுமே நிறைய நன்மைகள் உள்ளன. இதை நீங்கள் தினசரி உணவிலே சேர்த்துக்கொள்ளலாம். இவை இரண்டும் மூலிகைகள் ஆகும். இவை கொழுப்பில்லாதவை. இதில் அதிகம் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் உள்ளன. இதில் வைட்டமின்கள், உடலுக்கு தேவையான எண்ணெய் சத்துக்கள் மற்றும் நார்ச்சத்துக்கள் உள்ளன. இதில் ரத்த கொழுப்பு மற்றும் ரத்த அழுத்தத்தை பராமரிக்க உதவுகிறது. இதில் பொட்டசியம், கால்சியம், இரும்பு, மாங்கனீஸ் மற்றும் மெக்னீசியம் போன்ற எண்ணற்ற மினரல்கள் உள்ளன. இதில் உள்ள வைட்டமின் கே எலும்பு வளர்ச்சிக்கு உதவுகிறது. இது அல்சைமர் நோயை குணப்படுத்த உதவுகிறது.

இதை தயாரிக்க அதிகபட்சம் ஒரு மணி நேரம்தான் தேவைப்படும்.

தேவையான பொருட்கள்

அரிசி (பாஸ்மதி அரிசி அல்லது மற்ற அரிசி (அலசி, நன்றாக ஊறவைத்து சமைத்தது – 4 கப்

வெங்காயம் – பொடியாக நறுக்கியது 1 கப்

எலுமிச்சை சாறு – 1 ஸ்பூன்

தண்ணீர் – 3 கப்

உப்பு – தேவையான அளவு

எண்ணெய் அல்லது நெய் – 4 ஸ்பூன்

அரைக்க

புதினா இலைகள் – 1 கப்

மல்லி இழைகள் – 1 கப்

துருவிய தேங்காய் – கால் கப்

இஞ்சி – 1 இன்ச்

பூண்டு – 4 பல்

பச்சை மிளகாய் – 5 முதல் 6

முழு கரம் மசாலா – பட்டை 1, கிராம்பு 3, ஏலக்காய் 2, ஸ்டார் சோம்பு 1

வர கொத்தமல்லி – 1 ஸ்பூன்

தாளிக்க

கடலை அல்லது முந்திரி – கைப்பிடியளவு

கடுகு – கால் ஸ்பூன்

உளுந்து – 1 ஸ்பூன்

கடலை பருப்பு – 1 ஸ்பூன்

பிரியாணி இலை – 1

வரமிளகாய் – 1 ஸ்பூன்

செய்முறை

இந்த புதினா மல்லி சாதத்தை நீங்கள் சமைத்த அல்லது சமைக்காத எந்த சாதத்தில் வேண்டுமானாலும் செய்ய முடியும். சமைக்காத அரிசி என்றால் இரண்டு கப் எடுத்து ஊறவைத்துக்கொள்ள வேண்டும். சமைத்த சாதம் என்றால் 4 கப் எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும். சமைக்காத அரிசியை முழு கரம் மசாலாப்பொருட்கள் சேர்த்து சமைத்து வடித்து அவற்றை நீக்கி விட்டு ஆறவைத்து எடுத்துக்கொள்ள வேண்டும். அது நன்றாக ஆற வேண்டும்.

அரைக்க கொடுத்துள்ள பொருட்களை தனியாக அரைத்து எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும்.

குக்கரில் எண்ணெய் அல்லது நெய் சேர்த்து, தாளிக்க கொடுத்திருந்த அனைத்து பொருட்களையும் சேர்த்து, வெங்காயத்துடன் நன்றாக வதக்கிக்கொள்ள வேண்டும்.

வெங்காயம் பொன்னிறமானவுடன், அரைத்த விழுதுகளை சேர்க்க வேண்டும்.

பின்னர் மசாலா வாசம் போகும் வதை நன்றாக வதக்க வேண்டும். எண்ணெய் பிரிந்து நல்ல அடர் பச்சை நிறம் வருவதுதான் பதம்.

இதில் சமைத்த சாதம் இருந்தால் போட்டு நன்றாக கலக்க வேண்டும். தேவையான அளவு உப்பு சேர்த்துக்கொள்ள வேண்டும். நன்றாக கிளறினாலே போதும் உணவு சாப்பிட தயாராகிவிடும்.

அரிசியாக இருந்தால், அரிசியை சேர்த்து 15 நிமிடம் வேக விடவேண்டும் அல்லது நீங்கள் வழக்கமாக சாதம் வைக்க பயன்படுத்தும் முறையை பயன்படுத்த வேண்டும்.

ஆவி அடங்கியதும் இறக்கினால் உங்களுக்கு கிடைப்பது மணம் வீசும் புதினா, கொத்தமல்லி சாதம் ரெடி, கடலை முந்திரி வறுத்துப்போட்டு பரிமாறலாம்.

இதற்கு சைட்டிஷ்ஷாக ரைத்தா அல்லது காய்கறிகள் உங்கள் விருப்பத்திற்கு சேர்த்துக்கொள்ளலாம்.

டாபிக்ஸ்

அடுத்த செய்தி