தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Mangoes Increase Blood Sugar : மாம்பழம் சாப்பிடுவதால் உடலில் சர்க்கரையும், எடையும் அதிகரிக்குமா? – இதோ விளக்கம்!

Mangoes Increase Blood Sugar : மாம்பழம் சாப்பிடுவதால் உடலில் சர்க்கரையும், எடையும் அதிகரிக்குமா? – இதோ விளக்கம்!

Priyadarshini R HT Tamil

Apr 26, 2024, 03:00 PM IST

Mangoes Increase Blood Sugar : மாம்பழம் சாப்பிடுவதால் உடலில் சர்க்கரையும், எடையும் அதிகரிக்கும் என்ற அச்சம் உள்ளதா? இதோ விளக்கம்.
Mangoes Increase Blood Sugar : மாம்பழம் சாப்பிடுவதால் உடலில் சர்க்கரையும், எடையும் அதிகரிக்கும் என்ற அச்சம் உள்ளதா? இதோ விளக்கம்.

Mangoes Increase Blood Sugar : மாம்பழம் சாப்பிடுவதால் உடலில் சர்க்கரையும், எடையும் அதிகரிக்கும் என்ற அச்சம் உள்ளதா? இதோ விளக்கம்.

பழங்களின் ராஜா என்றால் அது மாம்பழம்தான். அதுவும், சீசன் வந்துவிட்டது. சாப்பிடாமல் இருக்க முடியுமா? இதை சாப்பிடுவதால் உடலில் என்ன நடக்கும் என்ற அச்சம் இருந்துகொண்டே இருக்கும். சர்க்கரை உயருமா? உடல் எடை அதிகரிக்குமா என்பதுதான் அவை.

ட்ரெண்டிங் செய்திகள்

Avoid rapid weight loss: ‘விரைவான எடை இழப்பு வேண்டாம்.. வாரத்திற்கு எவ்வளவு எடை குறைந்தால் நல்லது?’-ICMR

Bottle gourd Pachadi : கோடையை குளுமையாக்கும் சுரைக்காய் தயிர் பச்சடி! கூட்டு, பொரியலுக்கு நல்ல மாற்று!

Menstruation Health : சிறுவயதிலே பூப்பெய்தும் பெண் குழந்தைகளை காக்கும் அருமருந்து! வெறும் கஞ்சி மட்டும் போதும்!

Live without Disease : நோயின்றி நூறாண்டு காலம் வாழ வேண்டுமா? அதற்கு என்ன தேவை – ஆய்வுகள் கூறுவது இதைத்தான்!

மாம்பழத்தில் அதிக சர்க்கரை உள்ளது, அது சாப்பிட்டவுடன் உடலில் சர்க்கரை அளவை அதிகரிக்கும் என்ற நம்பிக்கை சிலருக்கு உண்டு. இதனால் நீரிழிவு நோயாளிகள் தவிர்க்கவேண்டிய பழம் என்ற தகவலும் உள்ளது.

மாம்பழத்தில் குளுக்கோஸ் மற்றும் ஃப்ரூட்டோஸ் போன்ற இயற்கை சர்க்கரைகள் உள்ளது. இது லோ கிளைசமிக் இன்டக்ஸ் உள்ளது. இதில் உள்ள குறைவான கிளைசமிக் உணவுகள், மெதுவாக செரிமானமாகும் மற்றும் உடலில் சர்க்கரையை மெதுவாக கலக்கச்செய்யும். வேகமாக கலக்கச்செய்யாது.

மாம்பழம் சுவையானது மட்டுமல்ல, தேவையான ஊட்டச்சத்துக்கள் நிறைந்தது. இதில் வைட்டமின் ஏ மற்றும் சி உள்ளது. இது உடலின் நோய் எதிர்ப்பை அதிகரிக்கிறது மற்றும் ஆரோக்கியமான சருமத்தை உருவாக்குகிறது. மாம்பழத்தில் நார்ச்சத்துக்கள் உள்ளது.

செரிமானத்தை அதிகரிக்கிறது மற்றும் இதில் உள்ள பொட்டாசியம் ரத்த அழுத்தத்தை முறைப்படுத்துகிறது. இதை குறைவான அளவு எடுத்துக்கொள்வதுதான் சர்க்கரை நோயாளிகளுக்கு நல்லது. 

இதை சாலட், ஸ்மூத்தி, இனிப்பு வகைகளில் சேர்த்து சாப்பிடலாம். இது உணவுக்கு கூடுதல் சுவையும், ஊட்டச்சத்தையும் வழங்குகிறது.

ஆராய்ச்சிகளின்படி, ரத்தத்தில் சர்க்கரை அளவை கட்டுப்படுத்தவும் மாம்பழம் உதவுகிறது. உடல் எடை அதிகம் உள்ளவர்கள் மாம்பழம் சாப்பிடுவதால், ரத்தத்தில் சர்க்கரை அளவு மற்றும் இன்சுலின் சென்சிட்டிவிட்யை அதிகரிக்கிறது.

ரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்த சரிவிகித உணவின் அங்கமாக ரத்த மாம்பழத்தை எடுத்துக்கொள்ளலாம். ரத்த சர்க்கரையை நிலையாக பராமரிக்க மாம்பழங்கள் உதவுவதாக ஆய்வுகள் அறிவுறுத்துகின்றன.

மாம்பழங்கள் உடல் எடையை அதிகரிக்கச் செய்யுமா? 

மேலும் மாம்பழத்தில் உள்ள சர்க்கரை உடல் எடையை அதிகரிக்கச் செய்யும் என்ற தகவலும் உண்டு. தினசரி கலோரி அளவுக்கு அதிகமாக எதையுமே எடுத்துக்கொள்ளக்கூடாது. அதேபோல், இதை எந்த அளவில் எடுத்துக்கொள்கிறீர்கள் என்பதும் உள்ளது.

கலோரிகள் குறைந்ததுதான் மாம்பழம், நடுத்தர அளவுள்ள மாம்பழம் 150 கலோரிகள் கொண்டது. இதை ஊட்டச்சத்துக்கள் நிறைந்த மற்றும் திருப்தியளிக்கும் ஸ்னாக்ஸாக உள்ளது.

நார்ச்சத்துக்கள், வைட்டமின்கள், ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் நிறைந்தது. இது வயிறு நிறைந்த உணர்வைக்கொடுக்கும். உடல் எடை மேலாண்மையிலும் உதவுகிறது. இதில் உள்ள நார்ச்சத்துக்கள் செரிமானத்தை தூண்டுகின்றன.

வயிறு நிறைந்த உணர்வைக்கொடுத்து அதிகம் உட்கொள்வதை தவிர்க்கச் செய்கிறது. மாம்பழத்தில் உள்ள வைட்டமின்கள் மற்றும் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள், ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்துக்கு உதவும். இதை சரிவிகித உணவில் சேர்த்துக்கொள்ளலாம்.

மாம்பழம் சாப்பிடும் அளவு 

மிதமான அளவில் சேர்த்துக்கொண்டு பயன்பெறுங்கள்.

இதில் உள்ள இயற்கை சர்க்கரையை சமப்படுத்த, புரதம் அதிகம் கொண்ட மற்றும் நார்ச்சத்துக்கள் நிறைந்த உணவை எடுத்துக்கொள்ள வேண்டும். மாம்பழங்களை கிரீக் யோகர்ட்டுடன் அல்லது சாலடாக கீரைகளுடனும், சிக்கன் மற்றும் டோஃபூவுடனும் சேர்த்து சாப்பிடலாம்.

பழுத்த மாம்பழங்களை உட்கொள்ளுங்கள். அது உங்கள் இனிப்பு சாப்பிடவேண்டும் என்ற எண்ணத்தை கட்டுப்படுத்த உதவும்.

அதிக சர்க்கரை உள்ள மாம்பழ உணவுகளை தவிர்க்கவேண்டும். மாம்பழச்சாறு, புட்டிகளில் அடைக்கப்பட்ட மாம்பழங்கள் ஆகியவற்றை தவிர்த்தல் நலம். இவை உங்கள் உடலில் சர்க்கரையை அதிகம் சேர்த்துவிடும்.

டாபிக்ஸ்

அடுத்த செய்தி