ராஜாவாகும் ராசிகள்.. சுக்கிரன் மேஷத்தில் புகுந்தார்.. இந்த ராசிகளின் வாழ்க்கை சூப்பரோ சூப்பர்.. யாருக்கு யோகம்?
Venus: சுக்கிர பகவான் ஏப்ரல் 24ஆம் தேதி அன்று மீன ராசியில் இருந்து மேஷ ராசிக்கு இடம் மாறினார். வருகின்ற மே 19ஆம் தேதி வரை இதே ராசியில் பயணம் செய்வார். அதற்குப் பிறகு ரிஷப ராசிக்குள் இடம் மாறுகிறார்.

நவ கிரகங்களில் ஆடம்பர கிரகமாக விளங்க கூடியவர் சுக்கிர பகவான். இவர் மகிழ்ச்சி, ஆடம்பரம், காதல், அழகு, சொகுசு உள்ளிட்டவைகளுக்கு காரணியாக திகழ்ந்து வருகின்றார். சுக்கிரன் மகிழ்ச்சியின் கடவுளாக திகழ்ந்து வருகின்றார். மேலும் அசுரர்களின் கடவுளாக திகழ்ந்து வருகின்றார். இவர் மாதத்திற்கு ஒருமுறை தனது இடத்தை மாற்றக் கூடியவர். இவருடைய இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.
இது போன்ற போட்டோக்கள்
Apr 28, 2025 05:00 AMவெற்றி சாத்தியம்.. பணத்தை பத்திரம்.. கவனமா இருக்க வேண்டியது யார்.. இன்று ஏப்.28 உங்கள் நாள் எப்படி இருக்கும் பாருங்க!
Apr 27, 2025 02:57 PMகௌரி யோகம் 5 ராசிகளின் செல்வத்தையும் செழிப்பையும் அதிகரிக்கும்.. வாராந்திர டாரட் பலன் என்ன?
Apr 27, 2025 02:11 PMமே மாதத்தில் அரிய புதாதித்ய ராஜயோகம்.. அதிர்ஷடம் காத்திருக்கும் இந்த 3 ராசிக்காரர்கள்
Apr 27, 2025 07:30 AMராகு குறி வச்சுட்டார்.. மகிழ்ச்சி பொங்கப் போகும் ராசிகள்.. உங்க ராசி இருக்கா பாருங்க?
Apr 27, 2025 05:00 AMலாபமும் மகிழ்ச்சியும் தேடி வரும் யோகம் யாருக்கு.. கவனமாக இருக்க வேண்டியது யார்.. இன்று உங்க நாள் எப்படி இருக்கு பாருங்க!
Apr 26, 2025 11:26 AMபண கட்டிலில் படுத்து உருளும் ராசிகள்.. சூரியன் அஸ்வினியில் நுழைகிறார்.. தமிழ் புத்தாண்டு ராசிகள்!
சுக்கிர பகவான் ஏப்ரல் 24ஆம் தேதி அன்று மீன ராசியில் இருந்து மேஷ ராசிக்கு இடம் மாறினார். வருகின்ற மே 19ஆம் தேதி வரை இதே ராசியில் பயணம் செய்வார். அதற்குப் பிறகு ரிஷப ராசிக்குள் இடம் மாறுகிறார். சுக்கிரனின் இடமாற்றும் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தினாலும் குறிப்பிட்ட சில ராசிகள் அதிர்ஷ்டத்தை முழுமையாக அனுபவிக்க போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்ளலாம்.
மீன ராசி
உங்கள் ராசிகள் இரண்டாவது வீட்டில் சுக்கிரன் பயணம் செய்து வருகின்றார். இதனால் உங்களுக்கு பண யோகம் கிடைத்துள்ளது. மற்றவர்களிடம் சிக்கிக் கிடந்த பணம் உங்களைத் தேடி வரும். குடும்ப பொறுப்புகள் அதிகரிக்கும். புதிதாக வீடு மற்றும் வாகனம் வாங்குவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. குடும்பத்தில் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் விலகும். சொத்துக்களால் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும். உடல் ஆரோக்கியத்தில் மட்டும் சற்று கவனமாக இருக்க வேண்டும். வெளியில் பயணம் செய்வது நல்லது கிடையாது. மற்றபடி பண வரவு, பொருளாதாரத்தில் முன்னேற்றம் உள்ளிட்டவைகள் அனைத்தும் உங்களுக்கு சாதகமாக உள்ளது.
கும்ப ராசி
உங்கள் ராசிகள் மூன்றாவது வீட்டில் சுக்கிரன் பயணம் செய்து வருகின்றார். இதனால் உங்களுக்கு தைரியம் மற்றும் துணிச்சல் அதிகரிக்கும். மற்றவர்களுக்கு நல்லது. செய்வதில் உங்களுக்கு ஆர்வம் அதிகரிக்கும். ஆன்மீகத்தில் உங்களுக்கு ஆர்வம் அதிகரிக்கும். வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புகள் அதிகம் உண்டாகும். வீட்டில் மங்கள காரியங்கள் நடக்க அதிக வாய்ப்பு உள்ளது. திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். புதுமணத் தம்பதிகளுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கக்கூடிய சூழ்நிலை அமையும். இதுவரை ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும்.
மகர ராசி
உங்கள் ராசியில் நான்காவது வீட்டில் சுக்கிரன் பயணம் செய்து வருகின்றார். உங்களுக்கு இனிமையான யோகங்கள் தேடி வர போகின்றது. நண்பர்களால் உதவி கிடைக்கும். உறவினர்களால் ஒத்துழைப்பு கிடைக்கும். புதிதாக வீடு மற்றும் நிலம் வாங்குவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. இந்த காலம் உங்களுக்கு சாதகமாக அமையும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும். புதிய திட்டங்கள் உங்களுக்கு சாதகமாக முடிவடையும் நல்ல முன்னேற்றத்தை நீங்கள் காண்பீர்கள்.
தனுசு ராசி
உங்கள் ராசிகள் ஐந்தாவது வீட்டில் சுக்கிரன் பயணம் செய்து வருகின்றார். இதனால் உங்களுக்கு பண யோகம் கிடைத்துள்ளது. மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள். காதல் திருமணம் உங்களுக்கு சாதகமாக முடிவடையும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும் உயர் அலுவலர்களுடன் உங்களுக்கு இணக்கமான தருணங்கள் அமையும். சக ஊழியர்கள் உங்களுக்கு சாதகமாக செயல்படுவார்கள். புதிய முயற்சிகள் உங்களுக்கு வெற்றியை தேடி தரும். புதிய தொழில் தொடங்குவதற்கான சாதகமான காலங்கள் அமையும்.
பொறுப்புத் துறப்பு:
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:
https://twitter.com/httamilnews
Google News: https://bit.ly/3onGqm9
