Kollu Podi: உடல் எடையை கரைக்க உதவும் கொள்ளு பொடி.. இப்படி ஒரு முறை ட்ரை பண்ணி பாருங்க!
Sep 07, 2023, 08:00 AM IST
வாங்க இப்ப வீட்டிலேயே சுவையான கொள்ளுப்பொடியை எப்படி செய்வது என பார்க்கலாம்.
நாம் வீடுகளில் பொதுவாக பல வகையான பொடிகளை செய்து ருசித்திருப்போம். அந்த வகையில் நம் உடல் எடை குறைக்க வேண்டும். கொழுப்பை குறைக்க வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு ஒரு சிறந்த பொடி என்றால் அது கொள்ளு பொடி. வாங்க இப்ப வீட்டிலேயே சுவையான கொள்ளுப்பொடியை எப்படி செய்வது என பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
கொள்ளு - 1 கப்
எள்ளு -1 கப்
உளுந்தம்பருப்பு -1 கப்
மிளகாய் வத்தல்
பூண்டு
பெருங்காயம்
உப்பு
புளி
கறிவேப்பிலை
தேங்காய் எண்ணெய்
செய்முறை
ஒரு கப் எள்ளை எடுத்து நன்றாக சுத்தம் செய்து கொள்ள வேண்டும். அடி கனமான கடாயில் எள்ளை விட்டு நன்றாக வறுக்க வேண்டும். எள்ளு பொரிய ஆரம்பிக்கும் போது அதை ஒரு பாத்திரத்திற்கு மாற்றி விட வேண்டும். அதே கடாயில் ஒரு கப் கொள்ளை நன்றாக வறுக்க வேண்டும். பின்னர் அதே கடாயில் உளுந்தம் பருப்பை இரண்டு ஸ்பூன் தேங்காய் எண்ணெய் ஊற்றி நன்றாக பொன்னிறம் வரும் வரை வறுக்க வேண்டும் தீயை சிம்மில் வைத்து வறுத்தால் உளுந்தம் பருப்பு கருகாமல் இருக்கும்.
இதையடுத்து உங்கள் காரத்திற்கு ஏற்ப மிளகாய் வத்தலை ஒரு ஸ்பூன் எண்ணெய் ஊற்றி லேசாக வறுக்க வேண்டும். பின்னர் அதில் பெருங்காயம் சேர்க்க வேண்டும். அதில் தேவையான அளவு உப்பை சேர்த்துக் கொள்ள வேண்டும். இதில் பூண்டை சேர்த்துக்கொள்ள வேண்டும். மேலும் இரண்டு கைபிடி கறிவேப்பிலையையும் சேர்த்து இதில் ஒரு சின்ன நெல்லிக்காய் அளவு புளி சேர்த்து கொள்ளலாம்.(விரும்பம் இல்லா விட்டால் புளியை தவிர்த்து விடலாம்.)
வறுத்த பொருட்கள் நன்றாக ஆறிய பின் மிக்ஸியில் சேர்த்து அரைத்து கொள்ள வேண்டும். அதிகமான அளவில் பொருட்களை எடுத்தவர்கள் ரைஸ் மில்லில் கொடுத்து அரைத்து கொள்ளலாம். இந்த இட்லிப்பொடியை பொதுவாக கொரகொரப்பாக அரைத்து கொள்ள வேண்டும்.
இந்த கொள்ளுப்பொடி சூடான சாதம், இட்லி, தோசைக்கு சாப்பிட நன்றாக இருக்கும். கொள்ளு பொதுவாக உடலுக்கு மிகவும் நன்மை தரும் ஒரு உணவு. உடல் எடையை குறைக்க பயன்படும். எப்போது அவித்து சாப்பிடுவதற்கு பதிலாக இப்படி ஒரு முறை பொடி செய்து சாப்பிட்டு பாருங்கள்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், ஆன்மிகம், புகைப்பட கேலரி, வெப் ஸ்டோரி, வேலைவாய்ப்பு தகவல்கள், சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
டாபிக்ஸ்