Kidney Stones: சிறுநீரகக் கற்கள் - எச்சரிக்கை அறிகுறிகள், காரணங்கள், தடுப்பது எப்படி?
Mar 07, 2024, 04:51 PM IST
உங்களுக்கு சிறுநீரகக் கற்கள் உருவாகும் அபாயம் உள்ளதா? சிறுநீரகக் கல்லின் எச்சரிக்கை அறிகுறிகளை ஒரு நிபுணரிடமிருந்து தெரிந்து கொள்ளுங்கள்.
சிறுநீரகக் கற்கள் என்பது, சிறுநீரகங்களுக்குள் உருவாகும் தாதுக்கள் மற்றும் உப்புகளால் ஆன திடமான பொருள் ஆகும். சிறுநீர் செறிவடைந்து தாதுக்கள் படிகமாகும்போது சிறுநீரக கற்கள் உருவாகின்றன.
குறைந்த அளவு நீர் உட்கொள்வது, உப்பு நிறைந்த உணவை உட்கொள்வது சிறுநீரக் கற்களுக்குக் காரணமாக இருக்கலாம். அவை பெரும்பாலும் சிறுநீரகங்கள், சிறுநீர்ப்பையில் உருவாகின்றன.
"சிறுநீரகங்களுக்குள் கரைந்த தாதுக்கள் உருவாகும்போது சிறுநீரகக் கற்கள் ஏற்படுகின்றன. அவை சிறுநீர் பாதையில் செல்லக்கூடும். குறைந்த திரவ நுகர்வு, உணவு உட்கொள்ளும் முறை சிறுநீரகக் கல் உருவாக உதவும் காரணமாகும் "என்று சிறுநீரக மருத்துவர் பிரவீன் புஷ்கர் தெரிவிக்கிறார்.
சிறுநீரகக் கற்களின் வகைகள்:
டாக்டர் பிரவீன் கூறுகையில், ‘’சில நேரங்களில் சிறுநீரகக் கற்கள் மிகவும் சிறியவை. மக்கள் அவற்றைக் கவனிக்கமாட்டார்கள், மேலும் அவை தாங்களாகவே சிறுநீர் வழியாக செல்கின்றன. இருப்பினும், பெரிய கற்கள் தான் சிக்கல்களை உருவாக்குகின்றன.
சிறுநீரகக் கற்களில் பல வகைகள் உள்ளன. இவற்றை கால்சியம் கற்கள் எனக்கூட சொல்லலாம். சிறுநீரகத்தில் உற்பத்தியாகும் பெரிய கற்கள் உடலை விட்டு வெளியேறும்போது கடுமையான வலியை ஏற்படுத்தும்" என்று கூறுகிறார்.
சிறுநீரகக் கற்களின் அறிகுறிகள்: அவற்றை எவ்வாறு கண்டறிவது?
சிறுநீரகம் குறித்து டாக்டர் பிரவீன் கூறுகையில், "சிறிய கற்கள் உடலில் இருந்து சிறிய அல்லது வலி இல்லாமல் வெளியேறலாம். சிறுநீர் மண்டலத்தில் உள்ள பெரிய கற்கள் சிறுநீரகப் பாதையில் சிக்கிக்கொள்ளக்கூடும். திடீரென்று கடுமையான கூர்மையான வலி போன்ற அறிகுறிகளை ஏற்படுத்தும். பொதுவாக உங்கள் வயிற்றில் அல்லது உங்கள் முதுகின் ஒரு பக்கத்தில், அது வலியை ஏற்படுத்தும்.
மற்ற அறிகுறிகளில் அசாதாரண சிறுநீர் நிறம், உங்கள் சிறுநீரில் ரத்தம், காய்ச்சல், குளிர், குமட்டல் மற்றும் வாந்தி ஆகியவை அடங்கும். சில நேரங்களில், பெரிய ஒரு கல், இது ஒன்று அல்லது இரண்டு சிறுநீரகங்களையும் வீக்கமடையச் செய்து, பக்க மற்றும் முதுகில் வலியை ஏற்படுத்தும். இது சிகிச்சையளிக்கப்படாவிட்டால், அது நீண்டகால சிறுநீரக பாதிப்பை ஏற்படுத்தக்கூடும்" என்று அவர் கூறுகிறார்.
சிறுநீரகக் கல் ஏற்படுவதற்கான காரணங்கள்:
‘’சிறுநீரகக் கற்கள் பெரும்பாலும் பெரியவர்களைப் பாதிக்கின்றன. ஆனால், குழந்தைகள் மற்றும் பதின்ம வயதினருக்கும் சிறுநீரகக் கற்கள் உண்டாக வாய்ப்புள்ளது.
சிறுநீரகக் கற்கள் உள்ளவர்களுக்கு உடல் பருமன், வளர்சிதை மாற்றக் கோளாறு, நீரிழிவு போன்ற உடல்நலப் பிரச்னைகள் இருக்கலாம். இது நீங்கள் என்ன உணவை சாப்பிடுகிறீர்கள் என்பதைப் பொறுத்தது.
உப்பு நிறைந்த உணவுகளை உட்கொள்வது மற்றும் போதுமான அளவு தண்ணீர் எடுத்துக்கொள்ளாதது ஆகியவை, சிறுநீரக் கற்களை உண்டாக்கலாம்.
எனவே, வலி ஏற்பட்டால், உங்களுக்கு ரத்தப் பரிசோதனைகள், சிறுநீரகச் செயல்பாடு சோதனைகள், சிறுநீரில் உப்பு சோதனைகள் தேவைப்படலாம்.
சி.டி ஸ்கேன், சிறுநீர் பாதையில் கற்களைக் கண்டறிய உதவுகிறது. இதன்மூலம் சிறந்த சிகிச்சையை மருத்துவர்கள் தீர்மானிக்க உதவுகிறது" என்று டாக்டர் பிரவீன் கூறுகிறார்.
சிறுநீரகக் கற்களுக்கான சிகிச்சை:
சிறுநீரகக் கற்களுக்கான சிகிச்சை, உங்களிடம் உள்ள கல் வகை மற்றும் அறிகுறிகள் எவ்வளவு மோசமானவை என்பதைப் பொறுத்தது.
- சிலர் ஒரு நாளைக்கு நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும். இது கல்லை வெளியே கொண்டு வர உதவுகிறது.
- சிறுநீரகக் கல்லைக் கரைக்க, உணவில் உப்பினைக் குறைக்க வேண்டும். சோடா காரத்தைக்குறைத்துக் கொள்ளவேண்டும்.
- சிறுநீரகக் கற்களுக்கான சிகிச்சைகளின்போது, பெரிய கற்கள் உள்ளவர்கள், கல் வளர்ந்து கொண்டிருப்பவர்கள், கற்களை அகற்ற உதவும் அறுவை சிகிச்சை செய்யலாம்.
சிறுநீரகக் கற்களைத் தடுக்கும் வழிகள்:
சிறுநீரகக் கற்கள் ஒரு பொதுவான பிரச்னை ஆகும். போதுமான அளவு நீர் குடிக்காதது ஒரு முக்கிய காரணியாகும். ஆனால் உணவுப் பழக்கம், உடல் பருமன் மற்றும் உட்கார்ந்த வாழ்க்கை முறை இவை அனைத்தும் சிறுநீர்க் கற்களை உண்டு செய்யும்.
மேலும், ‘’துளசி, ஆப்பிள், திராட்சை ஆகியவை சிறுநீரகங்களைப் பாதுகாக்க உதவும். சிறுநீரகக் கல், சிறுநீர் தொற்று போன்ற அறிகுறிகள் உள்ள எவரும் சிக்கல்கள் உருவாகாமல் தடுக்க மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும், "என்று மருத்துவ நிபுணர் கூறுகிறார்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்