Kidney Stone : 7 MM சிறுநீரக கல்லை கரைக்க இந்த ஒரு காய் மட்டுமே போதும்! மாதத்தில் ஒருமுறை இதை செய்தாலே பலன் தரும்!
Feb 17, 2024, 02:14 PM IST
Kidney Stone : 7 MM சிறுநீரக கல்லை கரைக்க இந்த ஒரு காய் மட்டுமே போதும்! மாதத்தில் ஒருமுறை இதை செய்தாலே பலன் தரும்!
தேவையான பொருள்
பீன்ஸ் – அரை கிலோ
செய்முறை
அரை கிலோ பீன்ஸை சுத்தம் செய்து சிறிய துண்டுகளாக நறுக்கி ஒரு லிட்டர் தண்ணீரில் ஒரு மணி நேரம் வேக விடவேண்டும்.
வெந்து ஆறியதும் அதை அப்படியே சாப்பிடலாம் அல்லது மிக்ஸியில் அரைத்து சாறை பருகலாம்.
ஒரு நாள் காலையில் அதை வெறும் வயிற்றில் பருகிவிட்டு, அன்று முழுவதும் வேறு உணவுகளை எடுத்துக்கொள்ளக்கூடாது.
வெறும் தண்ணீர் மட்டுமே பருகவேண்டும். இவ்வாறு செய்தால் 7 எம்எம் அளவுள்ள கல் சிறுநீரில் அடித்துக்கொண்டு வெளியேற்றப்படும். இதை மாதத்தில் ஒருமுறை மட்டும்தான் செய்யவேண்டும். அதற்கு மேல் செய்யக்கூடாது.
இரவு உணவு மட்டுமே எடுத்துக்கொள்ள வேண்டும். அதுவும் எளிதில் ஜீரணமாகக்கூடிய இட்லி, இடியாப்பம் போன்றவைதான் சாப்பிடவேண்டும்.
பொறுப்பு துறப்பு
கடுமையான பிரச்னைகளுக்கு மருத்துவர் அறிவுரைதான் மிகவும் தேவை. இதை முயற்சி செய்து பார்க்கலாம். ஆனால் இது மட்டுமே தீர்வாகாது என்பது கவனமுடன் செயல் படவேண்டும். ஆனால் இதனால் பக்கவிளைவுகள் ஏற்படாது.
பச்சை பீன்ஸின் நன்மைகள்
ஒரு கப் பீன்ஸில் 31 கலோரிகள் உள்ளன. 0 கிராம் கொழுப்புச்சத்து உள்ளது. 3.4 கிராம்கள் நார்ச்சத்துக்கள் உள்ளது. இதில் வைட்டமின்கள் கே 18 சதவீதம், சி 18 சதவீதம், வைட்டமின் பி9 9 சதவீதம், இரும்புச்சத்து 6 சதவீதம், பொட்டாசியச்சத்து 4 சதவீதம் உள்ளது.
பச்சை பீன்ஸின் நன்மைகள்
செரிமானத்துக்கு உதவுகிறது
பச்சை பீன்ஸில் அதிகளவில் நார்ச்சத்துக்கள் உள்ளது. இது உங்கள் உடலில் செரிமானம் நன்றாக நடைபெற உதவுகிறது. நார்ச்சத்துக்கள் மலத்தை இலகுவாக்குகிறது. ஆனால் நார்ச்சத்துக்கள் மலச்சிக்கலை தவிர்க்காது. இது உங்கள் குடலில் உள்ள நுண்ணுயிரிகளை சமமாக்குகிறது. இது உணவை செரிக்கவைத்து உடலுக்கு தேவையான சத்துக்களை வழங்குகிறது.
பசியை கட்டுப்படுத்துகிறது
சர்க்கரை அதிகம் நிறைந்த உணவுகளை நாம் உட்கொள்ளும்போது, அது உங்கள் ரத்தத்தில் சர்க்கரையை அதிகரிக்கிறது. ரத்தத்தில் சர்க்கரை அளவு குறையும்போதுதான் உங்களுக்கு மீண்டும் பசிக்கிறது. இதனால்தான் பிஸ்கட்கள், சிப்ஸ் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகள் உட்கொண்டபின் உடனடியாக பசி உணர்வு ஏற்படும். அதற்கு பதில் பீன்ஸை எடுத்துக்கொண்டால் அது உங்கள் உங்களுக்கு சத்துக்களை கொடுக்கிறது.
நார்ச்சத்துக்கள் நிறைந்த உணவுகள் செரிமானத்தை மெதுவாக்க நீண்ட நேரம் உங்களுக்கு வயிறு நிறைந்த உணர்வை கொடுக்கிறது. பச்சை பீன்ஸில், ஒரே அளவில் இயற்கையான சர்க்கரையும், நார்ச்சத்துக்களும் நிறைந்துள்ளது. இதனால் உங்கள் உடலில் ரத்தசர்க்கரை அளவு அதிகரிப்பது மற்றும் குறைவதால் உங்களுக்கு பசி உணர்வு ஏற்படது.
எலும்பு ஆரோக்கியத்துக்கு உதவுகிறது
பச்சை பீன்ஸில் உள்ள வைட்டமின் கே சத்துக்கள், இது எலும்புகளின் ஆரோக்கியத்துக்கு நல்லது. கால்சியம், எலும்பு ஆரோக்கியத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது. மற்ற ஊட்டச்சத்துக்களும் தேவை. உங்கள் உணவில் போதிய அளவில் வைட்டமின் கே எடுத்துக்கொள்ளாவிட்டால், அது உங்கள் எலும்பு ஆரோக்கியத்தை பாதிக்கும் என தெரிவித்துள்ளது. ஆனால் வைட்டமின் கே மாத்திரைகளை மருத்துவர் ஆலோசனையின்றி எடுத்துக்கொள்ளக்கூடாது.
உடலின் நோய் எதிர்ப்பை அதிகரிக்கிறது
உங்கள் உடலில் உள்ள நோய் எதிர்ப்புத்திறன்தான் உங்களை தொற்றுகள் மற்றும் நோய்களில் இருந்து காக்கிறது. எனவே பச்சை பீன்ஸை சாப்பிடும்போது உங்கள் உடலில் உள்ள நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது. அதில் வைட்டமின் சி சத்து அதிகம் உள்ளது. அது உங்கள் உடல் நோய் எதிர்ப்புத்திறனை அதிகரிக்கிறது. இது உங்களுக்கு அடிக்கடி சளி, இருமல் ஏற்படாமல் தடுத்து, உங்கள் நோய் எதிர்ப்புத்திறன் சிறப்பாக செயல்பட உதவுகிறது.
இதய ஆரோக்கியத்துக்கு உதவுகிறது
ரத்த அழுத்தம் மற்றும் அதிக கொழுப்பு இதய நோய் ஏற்பட காரணமாகிறது. எனவே அதை தடுக்க அதிகம் பச்சை காய்கறிகளை உணவில் எடுத்துக்கொள்ள வேண்டும். அதன் மூலம் இதய நோய் ஆபத்தை தடுக்கலாம். பச்சை பீன்ஸில் உள்ள ஃபோலேட்கள் மற்றம் பெட்டாசியம், உங்கள் இதய ஆரோக்கியத்தை அதிகரிக்கும்.
இந்த ஊட்டச்சத்துக்கள், உங்கள் உடலில் இதய ஆரோக்கியத்தை அதிகரிக்க உதவும். உங்கள் உடலில் ரத்த அழுத்தத்தை முறையாக பராமரிக்க உதவும். அதனுடன் நீங்கள் சரிவிகித உணவு மற்றும் உடற்பயிற்சி போன்ற மற்ற ஆரோக்கிய செயல்பாடுகளிலும் ஈடுபடவேண்டும்.
பச்சை பீன்ஸில் உள்ள நார்ச்சத்துக்கள், உங்கள் உடலில் ஆரோக்கியமான கொழுப்பை சரியான அளவில் பராமரிக்க உதவும். இதில் உள்ள கரையக்கூடிய நார்ச்சத்துக்கள், உங்கள் உடலில் உள்ள கெட்ட கொழுப்பை குறைக்கும். இது உங்கள் குடலில் உள்ள கொழுப்பு ரத்தத்தை அடையும் முன்னர் அப்படியே உறிஞ்சி எடுத்துவிடும்.
டாபிக்ஸ்