Karuppu Ulundhu Adai : உடலுக்கு உறுதியளிக்கும் கறுப்பு உளுந்து அடை! – ஆரோக்கியம், யம்மி இரண்டும் உறுதி!
Aug 30, 2023, 04:00 PM IST
Karuppu Ulundhu Adai : கருப்பு உளுந்தில் உள்ள இரும்பு மற்றும் புரதம் உங்கள் உடலுக்கு கட்டாயம் தேவை, அதை தோலுடன் நாம் பயன்படுத்துதால், அதில் உள்ள நார்ச்சத்து நல்ல ஜீரணத்துக்கு உதவுகிறது. இதற்கு தேங்காய் சட்னி, சாம்பார், இட்லிப்பொடி என எதை வேண்டுமானாலும் எடுத்துக்கொள்ளலாம்.
தேவையான பொருட்கள்
கருப்பு உளுந்து – முக்கால் கப்
துவரம் பருப்பு – முக்கால் கப்
கடலை பருப்பு – 2 டேபிள் ஸ்பூன்
வெந்தயம் – 1 டேபிள் ஸ்பூன்
இட்லி அரிசி – ஒரு முழு கப்
பொடித்த மிளகு – ஒரு ஸ்பூன்
பொடித்த சீரகம் – ஒரு ஸ்பூன்
பெருங்காயம் – ஒரு சிட்டிகை
கறிவேப்பிலை – 1 கொத்து
உப்பு – தேவையான அளவு
தண்ணீர் – தேவையான அளவு
எண்ணெய் – தேவையான அளவு
உங்களுக்கு ஒரு ஆரோக்கியமான மாலை நேர சிற்றுண்டி வேண்டுமென்றால், இதை செய்துகொள்ளலாம். கருப்பு உளுந்து அடை நல்ல ஒரு ஸ்னாக்ஸ் ஆகும். மொறு மொறு வென்றும் இருப்பதால் குழந்தைகள் விரும்பி உண்பார்கள்.
கருப்பு உளுந்தின் நன்மைகள்
கருப்பு உளுந்தில் உள்ள இரும்பு மற்றும் புரதம் உங்கள் உடலுக்கு கட்டாயம் தேவை, அதை தோலுடன் நாம் பயன்படுத்துதால், அதில் உள்ள நார்ச்சத்து நல்ல ஜீரணத்துக்கு உதவுகிறது. இதற்கு தேங்காய் சட்னி, சாம்பார், இட்லிப்பொடி என எதை வேண்டுமானாலும் எடுத்துக்கொள்ளலாம்.
நீரிழிவு நோயாளிகள் கருப்பு உளுந்தை தினந்தோறும் உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம், இத்தத்தில் உள்ள குளுக்கோஸ் அளவு ஒழுங்குபடுத்தப்படும். மேலும், கருப்பு உளுந்து சருமத்திற்கு நல்லது செய்வதோடு, கரும்புள்ளிகள், முகப்பரு மற்றும் கறைகளை எதிர்த்து போராட உதவும். அதோடு, கருப்பு உளுந்தம் பருப்பு இதயத்திற்கு மிகவும் நல்லது.
தானிய வகையைச் சேர்ந்த கருப்பு உளுந்து உங்களின் செரிமானத்தை மேம்படுத்த உதவும். குடலின் இயக்கத்தை மேம்படுத்தவும், மலச்சிக்கலை சரிசெய்யவும் உதவுகிறது. வயிற்றுப்போக்கை எதிர்த்துப் போராட கருப்பு உளுந்து உதவுகிறது. மேலும், கருப்பு உளுந்து உடல் உறுப்புகளுக்கு அதிக ஆக்ஸிஜனேற்றப்பட்ட ரத்தத்தை வழங்கவும் உதவுகிறது.
இதன் மூலம் உடலின் ஆற்றலை அதிகரிக்கச் செய்ய முடியும். மேலும், கருப்பு உளுந்தின் மூலம் எலும்புகளின் தாது அடர்த்தி அதிகரிக்கும். இதனால் முதுமையில் ஏற்படும் மூட்டு வலி போன்ற எலும்பு பிரச்னைகளை தடுக்க முடியும்.
கருப்பு உளுந்தம் பருப்பில் அதிக அளவு நார்ச்சத்து உள்ளது. இது செரிமான மண்டலத்தில் சரியாக வேலை செய்யவைத்து செரிமானத்தை அதிகரிக்கிறது. மேலும், கழிவுப் பொருட்களை வெளியேற்ற உதவும் பெரிஸ்டால்சிஸ் வெளியீட்டை தூண்டவும் செய்கிறது.
எனவே, நீங்கள் வயிற்றுப்போக்கு, மலச்சிக்கல் அல்லது வயிற்று வீக்கம் போன்ற செரிமான பிரச்னைகளால் அவதிப்படுகிறீர்கள் எனில், உங்களுக்கு கருப்பு உளுந்தம் பருப்பு உதவும். அத்துடன் உடலில் உள்ள ஊட்டச்சத்து உறிஞ்சப்படுவதை மேம்படுத்தவும் கருப்பு உளுத்தம் பருப்பு உதவுகிறது.
கருப்பு உளுத்தம் பருப்பில் அதிக அளவு இரும்புச் சத்து இருப்பதால், அவை உடலில் உள்ள ஆற்றலை அதிகரிக்கிறது. உடலுக்கு மிக முக்கியமான ஊட்டச்சத்து இரும்புச்சத்து ஆகும். ஏனெனில், இவை தான் ரத்த சிவப்பணுக்களின் உற்பத்தியை தூண்டுகிறது. மேலும், உடலின் எல்லா உறுப்புகளுக்கும் ஆக்ஸிஜனை எடுத்துச் செல்லவும் இரும்புச் சத்து உதவுகிறது.
சரியானளவில் உடல் உறுப்புகளுக்கு ஆக்சிஜன் கிடைக்கும்போது, உடலின் ஒட்டுமொத்த ஆற்றலும் மேம்படுத்தப்படும். மேலும், இரும்புச்சத்து நிறைந்து இருப்பதன் மூலம் ரத்த சோகை தடுக்கப்படும்.
கருப்பு உளுத்தம் பருப்பில் மெக்னீசியம், இரும்பு, பொட்டாசியம், பாஸ்பரஸ் மற்றும் கால்சியம் போன்ற தாதுக்கள் நிரம்பியுள்ளது. இவை அனைத்தும் நம் எலும்பு தாது அடர்த்தியை பாதுகாப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றன.
செய்முறை
அரிசி மற்றும் அனைத்து பருப்பு வகைகளையும் நன்றாக 4 மணி நேரம் ஊறவைத்து அரைத்து எடுத்துக்கொள்ள வேண்டும்.
மிளகுத்தூள், உப்பு, சீரகத்தூள், பெருங்காயம், கறிவேப்பிலை என அனைத்தையும் சேர்த்து நன்றாக தோசை மாவு பதத்திற்கு கரைத்துக்கொள்ள வேண்டும்.
அதை தோசைக்கல்லை சூடாக்கி, சிறு, சிறு அடைகளாக வார்த்த எடுத்துக்கொள்ள வேண்டும். இதற்கு ஏதேனும் சட்னி தொட்டுக்கொண்டு சாப்பிட்டு விடலாம்.
டாபிக்ஸ்