Hyderabad Biriyani Masala : இந்த ஒரு பொடிய செஞ்சு வெச்சுக்கங்க போதும்! ஹைதராபாத் பிரியாணிய அடிக்கடி செஞ்சு அசத்தலாம்!
Nov 26, 2023, 10:45 AM IST
Hyderabad Biriyani Masala : இந்த ஒரு பொடிய செஞ்சு வெச்சுக்கங்க போதும். ஹைதராபாத் பிரியாணிய அடிக்கடி செஞ்சு அசத்தலாம்.
தேவையான பொருட்கள்
வர கொத்த மல்லி – ஒரு கப்
வர மிளகாய் – 15
(இதை இரண்டையும் தனியான சூடான கடாயில் சேர்த்து வாசம் வரும் வரை வறுத்து எடுத்துவிடவேண்டும். இதை தனியாக ஒரு தட்டில் வைத்து ஆறவைக்கவேண்டும்)
ஷாஹி ஜீரா – ஒரு டேபிள் ஸ்பூன்
சீரகம் – ஒரு டேபிள் ஸ்பூன்
வெள்ளை மிளகு – ஒரு டேபிள் ஸ்பூன்
கருப்பு மிளகு – ஒரு டேபிள் ஸ்பூன்
சோம்பு – ஒரு டேபிள் ஸ்பூன்
(இந்த 5 பொருட்களையும் ஒரு சூடான கடாயில் சேர்த்து வாசம் வரும் வரை வறுத்து, அதே தட்டில் சேர்த்து ஆறவைக்க வேண்டும்)
ரோஸ் பெட்டல்ஸ் – 2 டேபிள் ஸ்பூன்
கசூரி மேத்தி – 1 ஸ்பூன்
(இது இரண்டையும் தனியாக சேர்த்து, மிகக்குறைவான சூட்டில் வறுத்துக்கொள்ள வேண்டும். இதை முதலிலே வறுத்துவிடுவது நல்லது. கடாய் மற்ற பொருட்களை வறுத்து சூடேறிப்போயிருக்கும். இந்த கடாய் மிகவும் சூடாக இருக்கும்போது சேர்த்தால், கருகிவிடும். எனவே கடாய் மிகக்குறைவான சூட்டில் இருக்கும்போதே வறுத்துக்கொள்ளவேண்டும்)
பட்டை – 6
ஏலக்காய் – 10
கருப்பு ஏலக்காய் – 4
ஸ்டார் சோம்பு – 5
பிரியாணி இலை – 6
கிராம்பு – 15
ஜாதிபத்திரி – 2
கல்பாசி – 2
லவங்கம் – 4
ஜாதிக்காய் – 1
(இவை அனைத்தையும் தனியாக சேர்த்து வாசம் வரும் வரை வறுத்து எடுத்துக்கொள்ள வேண்டும்)
அனைத்தையும் ஒன்றாக சேர்த்து தனியாக நன்றாக ஆறவைக்க வேண்டும். பின்னர் ஒரு காய்ந்த மிக்ஸி ஜாரில் சேர்த்து அரைத்து எடுத்தால், ஹைதராபாத் பிரியாணி பொடி ரெடி.
வீட்டிலேயே ஹைதராபாத் பிரியாணி சுவையில் பிரியாணி செய்து அசத்தலாம். பிரியாணியை நன்றாக செய்யும்போது அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். பிரியாணி பெரும்பாலானோர்களின் விருப்ப உணவு.
இந்தப்பொடியை வைத்து மட்டன், சிக்கன், மீன், இறால் என எந்த பிரியாணி வேண்டுமானாலும் செய்ய முடியும். அசைவ பிரியாணி மட்டுமல்ல சைவ பிரியாணியும் செய்ய முடியும்.
எனவே அதிகளவு செய்து வீட்டில் இந்தப்பொடியை எப்போதும் ஸ்டாக் வைத்துக்கொள்ளுங்கள். இதில் சேர்க்கப்படும் ரோஸ் பெட்டல்ஸ் மற்றும் கசூரி மேத்தி இரண்டுமே பிரியாணிக்கு தனியான ஒரு சுவை மற்றும் மணத்தை கொடுக்கும்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
டாபிக்ஸ்