மதிய டிபனுக்கு பக்காவான சாய்ஸ்! சுவையான முட்டை சாதம் செய்வது எப்படி? இதோ மாஸ் ரெசிபி!
Nov 27, 2024, 02:08 PM IST
முட்டை ஒரு சத்தான உணவாகும். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் தினம் ஒரு முட்டை சாப்பிட வேண்டும் என மருத்துவர்கள் பரிந்துரை செய்கின்றனர். சில சமயங்களில் அவித்த முட்டையை விரும்பாதவர்கள் சிலரும் உள்ளனர்.
முட்டை ஒரு சத்தான உணவாகும். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் தினம் ஒரு முட்டை சாப்பிட வேண்டும் என மருத்துவர்கள் பரிந்துரை செய்கின்றனர். சில சமயங்களில் அவித்த முட்டையை விரும்பாதவர்கள் சிலரும் உள்ளனர். எனவே முட்டையை சுவையான ஒரு உணவாக செய்து கொடுத்தால் அனைவரும் சாப்பிடுவார்கள். முட்டையை வைத்து சுவையான முட்டை சாதம் செய்யலாம். இது மதிய உணவுக்கு சத்து மிகுந்த ஒரு தேர்வாக இருக்கும். முட்டையை வைத்து சுவையான முட்டை சாதம் செய்வது எப்படி என்பதை தெரிந்துக் கொள்ள இதனை முழுமையாக படியுங்கள்.
தேவையான பொருட்கள்
1 கப் பாஸ்மதி அரிசி
7 முட்டை
1 பெரிய வெங்காயம்
சிறிதளவு கறிவேப்பிலை
2 தக்காளி
தேவையான அளவு உப்பு
அரை டீஸ்பூன் மஞ்சள் தூள்
2 டீஸ்பூன் மிளகாய் தூள்
அரைத்த மசாலா தூள்
வெங்காயத்தாள்
2 டீஸ்பூன் மிளகு
1 டீஸ்பூன் சீரகம்
1 டீஸ்பூன் சோம்பு
1 பட்டை
3 கிராம்பு
4 ஏலக்காய்
100 ml எண்ணெய்
2 பல் பூண்டு
2 பச்சை மிளகாய்
செய்முறை
முதலில் பாசுமதி அரிசியை நன்றாக கழுவி சுத்தம் செய்து ஊற வைக்க வேண்டும். பின்னர் அரிசியை குக்கர் அல்லது ஒரு பாத்திரத்தில் போட்டு வேக வைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். அரிசியை வேக வைக்கும் போது அதில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி வேக விட வேண்டும். சாதம் ஒட்டாமல் நன்கு பிரிந்து வரும். பின்னர் ஒரு கடாயை அடுப்பில் வைத்து அதில் மிளகு, சீரகம், சோம்பு, பட்டை, கிராம்பு ஏலக்காய் சேர்த்து வறுத்து எடுக்க வேண்டும். இவை நன்கு ஆறியதும் ஒரு மிக்சியில் போட்டு நன்கு பொடியாக அரைக்கவும்.
பின்பு அதே கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் பொடியாக நறுக்கிய பூண்டு, பச்சை மிளகாய் சேர்த்து வதக்கி விடவும். பிறகு மெல்லிசாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும். வெங்காயம் பொன்னிறமாக மாறியதும் பின்பு கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும். அதில் பொடியாக நறுக்கிய தக்காளி சேர்த்து 2 நிமிடம் வதக்கவும். பிறகு உப்பு, மஞ்சள் தூள், மிளகாய் தூள் சேர்த்து கலந்துவிடவும். அரைத்த மசாலாத்தூளை சிறிதளவு சேர்த்து கலந்துவிடவும். பின்பு மசாலாவை கடாயில் ஒரு பக்கமாக நகர்த்தி, பிறகு எண்ணெய் ஊற்றி அதில் முட்டையை உடைத்து ஊற்றவும். உப்பு,மிளகு தூள் மற்றும் மிளகாய் தூள் சேர்த்து கடாயை மூடி மிதமான தீயில் 1 நிமிடம் வேகவிடவும்.
பின்பு மெதுவாக கலந்துவிட்டு கடாயை மூடி 2 நிமிடம் வேகவிடவும். பிறகு அரைத்த மசாலா தூளை சேர்த்து கலந்துவிடவும். கடைசியாக வேகவைத்த பாஸ்மதி அரிசி மற்றும் வெங்காயத்தாள் சேர்த்து கலந்து இறக்கவும். இதனை சூடாக சாப்பிட்டால் அதிக சுவையாக இருக்கும். ஆறிய பின்னும் சுவை குறையவே குறையாது. இந்த முட்டை சாதத்தை நீங்களும் உங்கள் வீட்டில் முயற்சி செய்து பார்த்து அணைவருக்கும் கொடுத்து மகிழுங்கள்.
டாபிக்ஸ்