கம கமக்கும் மீன் குழம்பு! எந்த மீனா இருந்தாலும் இந்த மாதிரி செஞ்சு பாருங்க!
Oct 16, 2024, 01:42 PM IST
மீன் குழம்பு செய்வதற்கு கடைகளில் வாங்கும் மசாலாக்களை பயன்படுத்தினால் சுமாரான சுவையை மட்டுமே தரும்.
நமது வீடுகளில் அசைவ சமையல் என்றால் நமது வீடுகளில் உள்ளவர்கள் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள். அதிலும் மீன் குழம்பு என்றால் அனைவருக்கும் மிகவும் பிடிக்கும். கடலோர பகுதிகளில் இருக்கும் பகுதிகளில் பல விதமான மீன் வகைகள் கிடைக்கின்றன. ஆறுகள் பகுதிகளிலும் மீன்கள் கிடைக்கின்றன. ஒவ்வொரு மீனும் ஒரு விதமான ருசியை கொண்டுள்ளது. மீன் குழம்பு செய்வதற்கு கடைகளில் வாங்கும் மசாலாக்களை பயன்படுத்தினால் சுமாரான சுவையை மட்டுமே தரும். நாம் வீட்டிலேயே மசாலா அரைத்து சுவையான மீன் குழம்பு செய்யும் முறையை தெரிந்துக் கொள்ள இதனை படியுங்கள்.
தேவையான பொருட்கள்
ஒரு கிலோ மீன்
அரை கிலோ சின்ன வெங்காயம்
2 பச்சை மிளகாய்
சிறிதளவு கறிவேப்பிலை
2 தக்காளி
தேவையான அளவு தண்ணீர்
தேவையான அளவு உப்பு
3 டீஸ்பூன் எண்ணெய்
சிறிதளவு அளவு புளி
குழம்பு மசாலா அரைக்க
சிறிதளவு கடுகு
சிறிதளவு வெந்தயம்
சிறிதளவு சீரகம்
சிறிதளவு மிளகு
1 டீஸ்பூன் எண்ணெய்
12 சின்ன வெங்காயம்
5 பூண்டு
1 +1/2 தக்காளி
1/4 டீஸ்பூன் மஞ்சள்
3 டீஸ்பூன் கொத்தமல்லி தூள்
2-3 தேக்கரண்டி மிளகாய் தூள்
1/2 கப் துருவிய தேங்காய்
1/2 கப் தண்ணீர்
செய்முறை
முதலில் ஒரு கடாயில் சிறிதளவு கடுகு, வெந்தயம், மிளகு மற்றும் சீரகம் ஆகியவற்றை போட்டு பொன்னிறமாக வறுத்து எடுக்கவும். பின்னர் இதனை ஒரு மிக்சியில் போட்டு அரைத்து எடுத்து வைத்துக் கொள்ளவும். பின்னர் அதே கடாயில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி சூடானதும் நறுக்கிய சின்ன வெங்காயம்,5 பல் பூண்டு போட்டு நன்கு வதக்கவும். வதங்கிய பின் ஒரு தக்காளியை நறுக்கி போட்டு வதக்கவும். இந்த வதங்கிய தக்காளி வெங்காயத்தை எடுத்து அரைத்து வைத்திருந்த மசாலா பொடியுடன் சேர்க்கவும். பின் அரை முடி தேங்காயை துருவி அதனுள் சேர்த்துக் கொள்ளவும். மேலும் இதனுடன் 2 டீஸ்பூன் மிளகாய் தூள், 2 டீஸ்பூன் மல்லித் தூள் மற்றும் சிறிதளவு மஞ்சள் தூள் சேர்த்து அரைத்துக் எடுத்துக் கொள்ளவும்.
பின் ஒரு கடாயில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் 10 சின்ன வெங்காயம் மற்றும் பூண்டு சேர்த்து வதக்கவும். வதங்கியதும் அதில் சிறிதளவு கறிவேப்பிலை போட்டு வதக்கி விடவும். பின் அரைத்து வைத்த மசாலாவை சேர்க்கவும். பின் 2 நறுக்கிய பச்சை மிளகாய் மற்றும் தேவையான அளவு தண்ணீர் ஊற்ற வேண்டும். மேலும் புளியை ஊற வைத்து அதன் தண்ணீரை வடிகட்டி சேர்க்க வேண்டும். நன்றாக காய்ந்த பின் மீனை கழுவி சுத்தம் செய்து போட வேண்டும். மீன் போட்ட பின்பு அது ஒரு 10 நிமிடம் மட்டும் காய விடவும். பின் ஒரு சின்ன கடாயில் சிறிதளவு தேங்காய் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, வெந்தயம் மற்றும் கறிவேப்பிலை போட்டு தாளிக்கவும். பின் இதனை மீன் குழம்புடன் சேர்க்கவும். சுவையான மற்றும் அருமையான மீன் குழம்பு ரெடி.
டாபிக்ஸ்