தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  கம கம வாசம் வரும் ருசியான காளான் பிரியாணி! செட்டிநாடு ஸ்டைல் மசாலா! இப்போவே செஞ்சு பாருங்க!

கம கம வாசம் வரும் ருசியான காளான் பிரியாணி! செட்டிநாடு ஸ்டைல் மசாலா! இப்போவே செஞ்சு பாருங்க!

Suguna Devi P HT Tamil

Oct 17, 2024, 10:50 AM IST

google News
செட்டிநாடு சமையல் முறைகள் அனைத்தும் உணவில் ருசியை சற்று கூட்டும். எப்போதும் தமிழ்நாட்டில் செட்டிநாடு ரெசிபிக்கு எப்போதும் ஒரு பெயர் உண்டு. (awesome cuisine)
செட்டிநாடு சமையல் முறைகள் அனைத்தும் உணவில் ருசியை சற்று கூட்டும். எப்போதும் தமிழ்நாட்டில் செட்டிநாடு ரெசிபிக்கு எப்போதும் ஒரு பெயர் உண்டு.

செட்டிநாடு சமையல் முறைகள் அனைத்தும் உணவில் ருசியை சற்று கூட்டும். எப்போதும் தமிழ்நாட்டில் செட்டிநாடு ரெசிபிக்கு எப்போதும் ஒரு பெயர் உண்டு.

செட்டிநாடு சமையல் முறைகள் அனைத்தும் உணவில் ருசியை சற்று கூட்டும். எப்போதும் தமிழ்நாட்டில் செட்டிநாடு ரெசிபிக்கு எப்போதும் ஒரு பெயர் உண்டு. அது போன்று செட்டிநாடு முறையில் காளான் பிரியாணி செய்தால் மிகவும் ருசியாக இருக்கும். எளிமையாக முறையில் செட்டிநாடு ஸ்டைலில் காளான் பிரியாணி செய்வது எப்படி என்பதை இங்கே பார்ப்போம். 

தேவையான பொருட்கள்

அரை கிலோ காளான் 

அரை கிலோ பாசுமதி அரிசி

4 பெரிய வெங்காயம்

2 தக்காளி

3 பச்சை மிளகாய்

1 தேங்காய்

3 டீஸ்பூன் தயிர்

இஞ்சி பூண்டு விழுது 

1 டீஸ்பூன் மஞ்சள் தூள்

1 டீஸ்பூன் மிளகாய் தூள்

1 டீஸ்பூன் மல்லி தூள்

சிறிதளவு மிளகு தூள்

1 டீஸ்பூன் சீரக தூள்

 பிரியாணி இலை

இலவங்கப் பட்டை

3 ஏலக்காய்

 நட்சத்திர சோம்பு

2 ஜாதிப்பத்திரி

8 கிராம்பு

சிறிதளவு பெருஞ்சீரகம்

தேவையான அளவு உப்பு

சிறிதளவு புதினா

சிறிதளவு கொத்தமல்லி

தேவையான அளவு எண்ணெய்

தேவையான அளவு நெய்

தேவையான அளவு தண்ணீர்

செய்முறை

முதலில் அரிசியை நன்கு கழுவி சுத்தம் செய்து ஊற வைத்துக் கொள்ளவும். பின் 2 பெரிய வெங்காயத்தை நறுக்கி அதை வறுத்து எடுத்து ஒரு தட்டில் வைத்து ஆற விடவும். பின் ஒரு அகன்ற பாத்திரத்தில் நறுக்கிய காளான், வறுத்த வெங்காயம், இஞ்சி பூண்டு பேஸ்ட், புதினா, கொத்தமல்லி, தயிர், மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லி தூள், மிளகு தூள், சீரக தூள் மற்றும் தேவையான அளவு உப்பை போட்டு கிளறவும். இந்த கலவையை அப்படியே ஊற விடவும். அடுத்து ஒரு பெரிய கடயாயை மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் எண்ணெய் மற்றும்  நெய் விட்டு அதை சூடாக்கவும். எண்ணெய் சுட்டதும் அதில் பிரியாணி இலை, இலவங்கப் பட்டை, ஏலக்காய், நட்சத்திர சோம்பு, ஜாதிப்பத்திரி, கிராம்பு, மற்றும் பெருஞ்சீரகத்தை போட்டு அதை கிளறி விடவும்.

பின்பு நறுக்கிய வெங்காயம் மற்றும் பச்சை மிளகாயை சேர்த்து வெங்காயம் நன்கு பொன்னிறமாகும் வரை அதை வதக்கவும். வெங்காயம் பொன்னிறமானதும் அதில்  நறுக்கிய தக்காளியை சேர்த்து அதை வதக்கவும். தக்காளி மசிந்ததும் அதில்  ஊற வைத்திருக்கும் காளான் கலவையை சேர்த்து அதை நன்கு கிளறி விட்டு சுமார் ஐந்து நிமிடம் வரை வேக விடவும். சில நிமிடங்கள் வெந்த பிறகு அதில் தேங்காய்ப்பால்,அரை கப் அளவு தண்ணீர், மற்றும் சிறிதளவு உப்பு சேர்த்து அதை நன்கு பக்குவமாக கிளறி விடவும். அடுத்து அதில்  ஊற வைத்திருக்கும் அரிசியை சேர்த்து பக்குவமாக நன்கு கிளறி விட்டு மூடி போட்டு சுமார் 20 நிமிடம் வரை அதை வேகவிடவும். 20 நிமிடத்திற்க்கு பிறகு அடுப்பை அணைத்துவிட்டு அதை சுமார் ஐந்து நிமிடம் வரை அப்படியே வைக்கவும். ஐந்து நிமிடத்திற்கு பிறகு செட்டிநாடு ஸ்டைல் காளான் பிரியாணியை எடுத்து தட்டில் வைத்து சுட சுட பரிமாறவும்.

டாபிக்ஸ்

அடுத்த செய்தி
கவனம் பெற்றவை