தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  குலு குலு ரசகுல்லா! வீட்டிலேயே செய்வது எப்படி? இனி பேக்கரிக்கு போகவே தேவையில்லை! ஸ்வீட் ரெசிபி!

குலு குலு ரசகுல்லா! வீட்டிலேயே செய்வது எப்படி? இனி பேக்கரிக்கு போகவே தேவையில்லை! ஸ்வீட் ரெசிபி!

Suguna Devi P HT Tamil

Nov 10, 2024, 02:06 PM IST

google News
நாம் வீட்டிலேயே சுவையான பலகாரங்களை செய்யலாம். வீட்டிலேயே தித்திக்கும் ரசகுல்லா செய்வது எப்படி என்பதை இங்கு பார்ப்போம்.
நாம் வீட்டிலேயே சுவையான பலகாரங்களை செய்யலாம். வீட்டிலேயே தித்திக்கும் ரசகுல்லா செய்வது எப்படி என்பதை இங்கு பார்ப்போம்.

நாம் வீட்டிலேயே சுவையான பலகாரங்களை செய்யலாம். வீட்டிலேயே தித்திக்கும் ரசகுல்லா செய்வது எப்படி என்பதை இங்கு பார்ப்போம்.

நமக்கு உணவுகள் என்றாலே தனி விருப்பம் உண்டு. அதிலும் இனிப்பு பலகாரங்கள் மிகவும் பிடித்தமான உணவாக இருந்து வருகிறது. பேக்கரிகளில் வாங்கி சாப்பிடும் பலகாரங்கள் மிகவும் விலை அதிகமாகவும், சுத்தம் இல்லாமலும் இருக்க வாய்ப்பு உள்ளது. எனவே நாம் வீட்டிலேயே சுவையான பலகாரங்களை செய்யலாம். வீட்டிலேயே தித்திக்கும் ரசகுல்லா செய்வது எப்படி என்பதை இங்கு பார்ப்போம். 

தேவையான பொருட்கள்

1 லிட்டர் பால்

2 கப் சர்க்கரை

1 எலுமிச்சம் பழம்

1 டேபிள்ஸ்பூன்  ஏலக்காய் தூள்

பிஸ்தா 

பாதாம் 

செய்முறை 

முதலில் அடுப்பில் அதிக தீயில் பாத்திரத்தை வைத்து பாலை சூடாக்கவும். பால் சூடாகும் போது அதன் மேலே ஆடை கட்டிக் கொள்ளாமல் இருப்பதற்காக பாலை கிண்டிக் கொண்டே இருக்க வேண்டும். பின்னர் பால் கொதித்த உடன் அதில் ஒரு எலுமிச்சம் பழத்தை பிழிந்து எலுமிச்சை சாற்றை சிறிது சிறிதாக ஊற்றி கலக்கவும். சுமார் ஒரு நிமிடத்திற்கு பிறகு பன்னீர் தனியாகவும் தண்ணீர் தனியாகவும் வந்து விடும். இப்போது அடுப்பில் இருந்து இறக்கி ஒரு வடிகட்டி மூலம் தண்ணீர் தனியாகவும் பன்னீர் தனியாகவும் பிரித்துக் கொள்ளவும். பின்பு பன்னீரில் 2 அல்லது 3 முறை தண்ணீர் விட்டு நன்கு கழுவி மீண்டும் பில்டர் செய்து கொள்ளவும். அடுத்து இந்த பன்னீரை ஒரு பருத்தி துணியில் போட்டு நன்கு இறுக்கி இதில் இருக்கும் தண்ணீரை முழுமையாக எடுத்து விட வேண்டும்.

ஒரு பாத்திரத்தை மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் சர்க்கரை மற்றும் தண்ணீரை சேர்த்து சர்க்கரை கரையும் வரை காய்ச்சி எடுததுக் கொள்ள வேண்டும். முன்னதாக துணியில் கட்டி வைத்த பன்னீரை எடுத்து சப்பாத்தி மாவு போல பிசைந்து கொள்ள வேண்டும். சப்பாத்தி மாவு போல வந்ததும், சிறு சிறு உருண்டைகளாக உருட்டி எடுத்துக் கொள்ள வேண்டும். இதனை மென்மையாக உருட்டிக் கொள்ள வேண்டும்.  அடுத்து அடுப்பில் இருக்கும் சர்க்கரை பாகை எடுத்து பில்டர் செய்து மீண்டும் அடுப்பில் வைத்து கொதிக்க விடவும். சர்க்கரை பாகு கொதித்ததும் அதில் பிடித்து வைத்திருக்கும் உருண்டைகளை மெதுவாக ஒரு கரண்டியின் மூலம் சர்க்கரை பாகில் இறக்கி விட்டு அவ்வப்போது மெதுவாக அதை திருப்பி விடவும்.

இந்த உருண்டைகள் நன்றாக உப்பியதும் அடுப்பை அணைத்து விட்டு மூடி வைக்க வேண்டும். இதனை சுமார் 10 லிருந்து 15 நிமிடம் வரை அப்படியே வைக்கவும். அவ்வப்போது திறந்து இதை கிண்டி விடவும். 15 நிமிடத்திற்கு பிறகு மூடியைத் திறந்து ஒரு மேஜைக்கரண்டி அளவு ஏலக்காய் தூள் தூவி ஒரு கிளறு கிளறி அடுப்பிலிருந்து இறக்கி ஆற விடவும்.சுமார் 6 லிருந்து 7 மணி நேரத்திற்குப் பிறகு இதை எடுத்து ஒரு கிண்ணத்தில் வைத்து அதன் மேலே துருவிய பிஸ்தா மற்றும் பாதாம் துண்டுகள் தூவி பரிமாறவும். இப்பொழுது உங்கள் இனிப்பான மற்றும் சுவையான ரசகுல்லா தயார். இதை உங்கள் வீட்டில் கட்டாயம் செய்து பார்த்து உங்கள் குடும்பத்தாருடன் உண்டு மகிழுங்கள்.

டாபிக்ஸ்

அடுத்த செய்தி
கவனம் பெற்றவை