Ovulation Day Plan: உடனே குழந்தை பிறக்கணுமா ? இந்த நாள் எல்லாம் நோட் பண்ணிக்கோங்க!
Sep 24, 2024, 03:39 PM IST
Ovulation Day Plan: திருமணம் ஆகிய அடுத்த சில மாதங்களில் குழந்தைக்கு சிலர் பிளான் செய்வார்கள். ஆனால் சிலர் அவர்களது கேரியரை முடித்த பின் குழந்தை பெற்றுக் கொள்ளலாம் என நினைத்து இருப்பார்கள்.
ஒரு பெண் அவளாகவே மட்டுமே குழந்தை பெற்றுக் கொள்ள வேண்டும் என்ற முடிவை எடுக்க வேண்டும். ஏனெனில் குழந்தை பெற்று அதனை வளர்த்து ஒரு நிலைக்கு கொண்டு வருவது இன்றும் ஒரு பெண்ணின் கையில் மட்டுமே உள்ளன. திருமணம் ஆகிய அடுத்த சில மாதங்களில் குழந்தைக்கு சிலர் பிளான் செய்வார்கள். ஆனால் சிலர் அவர்களது கேரியரை முடித்த பின் குழந்தை பெற்றுக் கொள்ளலாம் என நினைத்து இருப்பார்கள்.
சில முன் திட்டங்களுடன் இருப்பது குழந்தை பெறுவதில் உள்ள சிக்கல்களை தீர்க்க உதவும். எனவே குழந்தை பெற்றுக் கொள்ள நினைத்தவுடன், அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். இதனை மேற்கொள்ளும் போது உடனடியாக கரு உருவாக்கு வாய்ப்பு அதிகரிக்கிறது. இதனை பின்பற்றி குழந்தைக்கு திட்டமிட்டு செயல் படுங்கள்.
சரியான வயது
20 முதல் 35 வயதிற்குள் குழந்தை பெற்றுக் கொள்வது சிறந்த முடிவாகும். மேலும் இந்த வயதில் தான் பெண்களின் கருமுட்டை வளர்ச்சி இயற்கையாகவே வளமானதாக இருக்கும். எனவே இந்த வயதிற்குள் குழந்தை பெற்றுக் கொள்ளும் பொது தேவை இல்லாத சிக்கல்களை சந்திக்க வேண்டியதில்லை. மேலும் 35 வயதிற்கு மேல் பெண்களின் கருமுட்டை வளர்ச்சி குறைய தொடங்குகிறது.
ஓவலேஷன் நாட்கள்
ஒரு பெண்ணின் கரு முட்டை வளர்ச்சி அடைந்து, கருப்பையினுள் செல்லும் முறையை அண்டவிடுப்பு அதாவது ஓவலேஷன் எனப்படும் காலம் ஆகும். இக்காலத்தில் உறவில் ஈடுபடும் போது குழந்தை பிறப்பதற்கான வாய்ப்பு அதிகமாக இருக்கும். இதனை கணக்கிடுவது மிகவும் எளிய ஒன்றாகும்.
சீரான மாதவிடாய் இருக்கும் பெண்களுக்கு, மாதவிடாய் தொடங்கி 14 ஆவது நாள் இந்த கரு முட்டை வெளியில் வரும். இது பெலோப்பியன் குழாய் வழியாக கருப்பையை அடையும். இந்த குறிப்பிட்ட நாட்களில் கருமுட்டையை விந்து அடையும் போது கரு உருவாகும்.
ஒழுங்கற்ற மாதவிடாய் உள்ள பெண்கள் மருத்துவர்களை அணுகி அவர்களது ஓவலேஷன் நாட்களை தெரிந்து கொள்ளலாம். மேலும் இந்த கரு உருவாகுதல் நடைபெற ஆரோக்கியமான கரு முட்டை மற்றும் விந்து தேவைப்படுகிறது.
கரு உருவாக வாய்ப்பு
இந்த ஓவலேஷன் நாட்களில் மட்டும் கரு உருவாவதில்லை. ஒவ்வொரு பெண்களுக்கும் இந்த காலம் மாறுபடலாம். குறிப்பாக எந்த நாட்களில் வேண்டுமானாலும், பாதுகாப்பில்லாத உறவு வைத்துக் கொள்ளும் போது கரு உருவாக வாய்ப்பு உள்ளது. கருவை உருவாவதை தடுக்க நினைப்பவர்கள், கரு உறவாக வேண்டும் என நினைப்பவர்கள் என அனைவருக்கும் அவர்களது உடல் சூழற்சியை பொறுத்து மாறுபடும்.
பொறுப்பு துறப்பு
இங்கு பகிரப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் முற்றிலும் உண்மை என்றும், இதனால் தீர்வு நிச்சயம் என்றும் கூற முடியாது. ஆனாலும், அனுபவங்களின் அடிப்படையில் தேர்ந்தெடுத்து ஆய்ந்தறிந்தே வழங்கப்படுகிறது. இவையனைத்தும் தீர்வு என்று நாங்கள் ஒரு போதும் கூறமாட்டோம்.
எனவே, நாள்பட்ட அல்லது தீவிரமான பிரச்னைகளுக்கு மருத்துவரை அணுகுவதுதான் சிறந்த வழி. எனவே தேவையான பிரச்னைகளுக்கு மருத்துவரை அணுகி பலன்பெறுவதே சிறந்தது. இவையெல்லாம் முதலுதவி போல் உதவக்கூடும். இங்கு கொடுக்கப்படும் மருத்துவக்குறிப்புக்களை பின்பற்றி பயன்பெறுங்கள்.
டாபிக்ஸ்