உடல் ஆரோக்கியத்தைத்தரும் சுண்ட வத்தல் மணத்தக்காளி வத்தல் சாதப்பொடி
Mar 22, 2023, 09:44 PM IST
உடல் ஆரோக்கியத்தைத் தரும் சுண்ட வத்தல் மணத்தக்காளி வத்தல் சாதப்பொடி செய்வது குறித்து இங்கு அறிந்து கொள்வோம்.
சுண்ட வத்தல் மற்றும் மணத்தக்காளி வத்தல் சேர்த்து செய்வது அற்புதமான, ஆச்சரியமூட்டும் சத்துக்கள் அடங்கிய சாதப்பொடி ஆகும். உடலில் நோய் எதிர்ப்பு சக்தி பெருகிட நம் முன்னோர்கள் பின்பற்றிய அற்புத சக்தி, இயற்க்கை உணவு வகையான இந்தப் பொடி செய்வதும் சுலபம்.
சேர்க்கும் பொருட்களும் குறைவே. சாதாரணமாக வத்தல் குழம்பில் சேர்க்கும் பொது பெரும்பாலும் அதை அகற்றி விட்டே உட்கொள்கிறோம். வத்தலின் முழுமையான சத்து நமக்கு உள்ளே சேருவது இல்லை. இதன் அருமை தெரியாமல் நாம் அதன் சுவை கருதி அகற்றி விடுகிறோம் ஆனால் இதன் உண்மையான சத்துக்கள் நாம் உடலுக்கு எவ்வளவு முக்கியம் என்பது குறித்து இங்கு விவரிக்கப்பட்டுள்ளது.
வைட்டமின்கள், தாதுக்கள், ஆக்ஸிஜனேற்றிகளைத் தவிர, உயர்தர புரதங்கள் இதில் நிரம்பியுள்ளன. இந்தப் பொடியில் இயற்கையாகவே கார்ப்ஸ், கலோரிகள், கொழுப்புகள் குறைவாகவும் உள்ளது. இது எடை இழப்பு உணவுகளில் ஒன்றாகக் கருதலாம். செரிமானத்தை ஊக்குவிக்கிறது. ரத்த சோகையை குணப்படுத்துகிறது. நீரிழிவு நோயை கட்டுப்படுத்துகிறது. பெண்களின் சீரற்ற
மாதவிடாயை ஒழுங்குபடுத்துகிறது. இதய ஆரோக்கியம் தருகிறது. காய்ச்சலை திறம்பட எதிர்த்து நிற்கிறது. சிறுநீரக செயல்பாடுகளை ஊக்குவிக்கிறது
நோய்த்தொற்றுக்கு எதிரான பாதுகாப்பு சக்தியை கொடுக்கிறது.
சூப்கள், கறி, பருப்பு போன்ற பல உணவுகளை சமைப்பதில் இந்தப் பொடியைப் பயன்படுத்தலாம், உப்பு மற்றும் மசாலாப் பொருட்களுடன் சுவையூட்டப்பட்ட உலர்ந்த வகையாகவும் உட்கொள்ளலாம்.
பொடி வகையாக செய்யும் பொது உட்கொள்ளும் அளவு சற்று அதிகமாகும், முழுமையான சக்திகளையும் பெற உதவும். சற்று கசப்பு சுவைத்தான், எனினும் நெய்யோடு சேர்த்து உண்ணும் போது கசப்பு அதிகம் தெரியாது . பாகற்காய் போன்றே இருக்கும், தேவைப்பட்டால் இங்கு குறிப்பிட்ட அளவுக்கு சற்று அதிகமாக பருப்பு சேர்த்துக்கொள்ளலாம். இது கசப்புத்தன்மையை குறைக்க உதவும்.
சுண்ட வத்தல் மணத்தக்காளி வத்தல் சாதப்பொடி செய்யத் தேவையான பொருட்கள்:
சுண்ட வத்தல் – 50 கிராம் பக்குவமான முறையில் செய்த வத்தல் பெற்றிட
மணத்தக்காளி வத்தல்-25கிராம்
உளுத்தம் பருப்பு-50 கிராம்
மோர் மிளகாய் அல்லது சிவப்பு மிளகாய்-3,4
மிளகு- ஆரை தேக்கரண்டி
சீரகம் ஒரு தேக்கரண்டி
கறிவேப்பிலை ஒரு பிடி
பெருங்காயம்- கால் தேக்கரண்டி
உப்பு சிறிது ஏற்கனவே வத்தலில் உப்பு சுவை இருப்பதால் குறைத்து சேர்க்கவும்.
சுண்ட வத்தல் மணத்தக்காளி வத்தல் சாதப் பொடி செய்முறை:
வாணலியை சூடுபடுத்தி இரண்டு தேக்கரண்டி எண்ணெய் விட்டு வத்தல் வகையை ஒன்றொன்றாக வறுத்தெடுத்துக்கொள்ளவும்
பிறகு, அதே எண்ணெயில் மிளகாய் மிளகு, சீரகம், வறுக்கவும் இறுதியாக கறிவேப்பிலை, உப்பு, பெருங்காயம் வறுத்தெடுக்கவும்.
ஆறியதும் மிக்சியில் அனைத்தையும் சேர்த்து மென்மையான பொடியாக அரைத்துக்கொள்ளவும்.
சூடான சாதத்தோடு நெய்சேர்த்து கலந்து சாப்பிடுங்கள்.
டாபிக்ஸ்