தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Vallarai Keerai Thuvaiyal : ஞாபக சக்திக்கு.. ஆரோக்கியமாக வாழ உதவும் வல்லாரைக் கீரைத் துவையல்.. இப்படி செய்து பாருங்க!

Vallarai Keerai Thuvaiyal : ஞாபக சக்திக்கு.. ஆரோக்கியமாக வாழ உதவும் வல்லாரைக் கீரைத் துவையல்.. இப்படி செய்து பாருங்க!

Divya Sekar HT Tamil

Jun 28, 2023, 08:04 AM IST

google News
ஞாபக சக்திக்கு உதவும் வல்லாரைக் கீரைத் துவையல் செய்வது எப்படி என்பது குறித்து பார்க்கலாம்.
ஞாபக சக்திக்கு உதவும் வல்லாரைக் கீரைத் துவையல் செய்வது எப்படி என்பது குறித்து பார்க்கலாம்.

ஞாபக சக்திக்கு உதவும் வல்லாரைக் கீரைத் துவையல் செய்வது எப்படி என்பது குறித்து பார்க்கலாம்.

சத்தான வல்லாரைக்கீரையை வைத்து துவையல் எப்படி செய்வது என்பது குறித்து இங்கு பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்

கடலை பருப்பு - சிறிது

வெங்காயம் - 2 (எலுமிச்சை அளவு)

வர மிளகாய் - 2

பச்சை மிளகாய் - 1

இஞ்சி - சிறிது

பூண்டு - 2 பல்

வல்லாரைக் கீரை - 1 கட்டு

தக்காளி - 1

உப்பு -  தேவையான அளவு

செய்முறை

முதலில் அடுப்பில் கடாய் வைத்து கொள்ளுங்கள். அதில் சிறிது எண்ணெய் ஊற்றுங்கள். அதில் சிறிது கடலை பருப்பை போட்டு வதக்கவும். பின்னர் அதில் நறுக்கி வைத்த வெங்காயத்தை போடவும். பின்னர் இஞ்சி, பூண்டு போடவும். பிறகு அதில் வர மிளகாயும், பச்சை மிளகாயும் போடவும். இவற்றை எல்லாம் பச்சை வாசம் போகும் வரை வதக்கவும்.

 பின்னர் நறுக்கி வைத்த வல்லாரைக் கீரையை இதில் சேர்த்து நன்கு வதக்கவும். கீரை அரைபதத்தில் வதங்கிய உடன் அதில் நறுக்கி வைத்த தக்காளியை போடவும். தேவையான அளவு உப்பை சேர்க்கவும். பின்னர் சிறிது நேரம் வதக்கவும். நன்கு வதங்கிய உடன் அடுப்பை ஆப் செய்துவிட்டு ஆர வைக்கவும். ஆரியவுடன் அதனை மிக்சியில் போட்டு அரைக்கவும். தற்போது வால்லாரை கீரை துவையல் ரெடி. இதனை வீட்டில் செய்து பாருங்கள். சுவையாக இருக்கும். உடலுக்கு நல்ல ஆரோக்கியத்தை கொடுக்கும்.

வல்லாரைக் கீரையில் உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்துகள் நிறைந்துள்ளன. கீரையில் பல வகையான வைட்டமின்களும் தாதுச்சத்துகளும் நிறைந்துள்ளன. வல்லாரைக் கீரை மூளையை சுறுசுறுப்பாக்கும். நினைவாற்றலை வளர்க்கும்.ரத்த சர்க்கரையின் அளவைக் கட்டுக்குள் வைக்க இது உதவியாக இருக்கிறது. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் சரும ஆரோக்கியத்திற்கும் தலைமுடியின் வளர்ச்சிக்கும் உகந்தது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

டாபிக்ஸ்

அடுத்த செய்தி