தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Paruthipaal Karupatti Halwa : வாயில் வைத்த உடனே கரையும்.. பருத்திப்பால் கருப்பட்டி அல்வா எப்படி செய்வது!

Paruthipaal Karupatti Halwa : வாயில் வைத்த உடனே கரையும்.. பருத்திப்பால் கருப்பட்டி அல்வா எப்படி செய்வது!

Divya Sekar HT Tamil

Feb 11, 2024, 12:10 PM IST

google News
Paruthipaal Karupatti Halwa : சுவையான ஆரோக்கியமாக பருத்திப்பால் கருப்பட்டி அல்வா செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
Paruthipaal Karupatti Halwa : சுவையான ஆரோக்கியமாக பருத்திப்பால் கருப்பட்டி அல்வா செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

Paruthipaal Karupatti Halwa : சுவையான ஆரோக்கியமாக பருத்திப்பால் கருப்பட்டி அல்வா செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

பருத்திப்பால் கருப்பட்டி அல்வா

தேவையான பொருட்கள்

பருத்தி/பருத்தி விதை - 1 கப்

பனை வெல்லம்

தேங்காய் பால் - 1 கப்

நெய்

முந்திரி

செய்முறை

பருத்திப்பால் கருப்பட்டி அல்வா செய்வது எப்படி என்று பார்க்கலாம். முதலில் நீங்கள் பருத்தி விதையை அதாவது பருத்தி கொட்டையை எடுத்துக் கொள்ளுங்கள். அதனை இரவு தண்ணீரில் போட்டு ஊற வைக்கவும்.

 இந்த பருத்திக்கொட்டை அனைத்து நாட்டு மருந்து கடைகளிலும் நமக்கு கிடைக்கும். அங்கு சென்று நீங்கள் வாங்கிக் கொள்ளலாம். இரவு முழுவதும் இந்த பருத்திக்கொட்டை தண்ணீரில் ஊற வைக்க வேண்டும். இப்போது ஊற வைத்த பருத்திக் கொட்டையை மிக்ஸி ஜாரில் போட்டு நன்கு பேஸ்ட்டாக அரைத்துக் கொள்ளவும். பின்னர் வடிகட்டி வைத்து அதனை வடிகட்டி தனியாக பாலை மட்டும் எடுக்க வேண்டும். மீதமுள்ள திப்பியை அதாவது சக்கயையை மீண்டும் சிறிது தண்ணீர் ஊற்றி மிக்ஸியில் அரைத்து அதனையும் இதே போல வடிகட்டி வைத்து வடித்து எடுத்துக் கொள்ளுங்கள். 

இப்போது வடித்து வைத்த பருத்திக்கொட்டை பாலை ஒரு கடாயில் வைத்து ஊற்றி கிண்டிக் கொண்டே இருக்க வேண்டும். பின்னர் பனைவெல்லம் அல்லது கருப்பட்டி இதனை எடுத்து சிறிது தண்ணீர் ஊற்றி மிக்ஸ் செய்து அதனை வடிகட்டி அந்த கருப்பட்டி பாவை மட்டும் எடுத்துக் கொள்ளுங்கள். பருத்திப்பால் நன்கு கொதித்து வந்ததும் .அதில் தேங்காய் பால் சேர்த்து பின்னர் வடிகட்டி வைத்த கருப்பட்டி பாவை சேர்த்து நன்கு மிக்ஸ் செய்யவும்.

 முதலில் நமக்கு தண்ணீர் பதத்தில் தான் இருக்கும் கிண்டிக் கொண்டே இருக்க இருக்க அது கெட்டியாக மாறும் நன்கு கெட்டியாகும் நிலைக்கு வரும்போது அதில் நீங்கள் நெய் சேர்க்கலாம். நெய் சேர்த்து மீண்டும் நன்கு கிளறவும். பின்னர் நெய்யில் வறுத்த முந்திரியை போட்டு நன்கு மிக்ஸ் செய்யவும். இப்போது அல்வா பதத்திற்கு வந்ததும் நீங்கள் அதனை இறக்கி ருசி பார்க்கலாம். இது வாயில் வைத்த உடனே கரையும். அவ்வளவு சுவையாக இருக்கும். ஒரு முறை இதனை வீட்டில் செய்து பாருங்கள் பின்னர் விடமாட்டீர்கள்.

நன்மைகள்

அல்சர்,  உணவுப்பாதையில் புண்கள் உள்ளவர்கள் வெறும் வயிற்றில் பருத்தி பால் குடித்து வந்தால் புண்கள் குணமாகும். உடலுக்கு கால்சியம் சத்து கிடைக்கின்றது. இதயத்தை பலப்படுத்தும் ஆற்றல் கொண்டது.

வயிறு சார்ந்த பிரச்சினைகள் அனைத்தையும் சரிபடுத்தினால் கணையம் சுரக்கக்கூடிய இன்சுலின் பிரச்சனை தடுக்கப்படுகிறது. பருத்திப்பால் உடலுக்கு வலுவையும் அதிகரிக்கின்றது. பருத்திக் கொட்டை வயிற்றில் இருக்கக்கூடிய உங்களை மாற்றக்கூடிய வல்லமை பெற்றது

பருத்திப்பால் வாரத்தில் ஒரு முறையாவது எடுத்துக்கொள்வதன் மூலம் உடலுக்கு தேவையான ஆற்றலும், வலுவும் கிடைக்கின்றது. பருத்திப்பால் உடலுக்கு வலுவையும் அதிகரிக்கின்றது. பருத்திக் கொட்டை வயிற்றில் இருக்கக்கூடிய உங்களை மாற்றக்கூடிய வல்லமை பெற்றது.

பருத்தி பாலில் வைட்டமின், புரதம் மற்றும் கொழுப்பு சத்துக்கள் அடங்கியுள்ளது. அதிக அளவு நார்ச்சத்து இருப்பதன் காரணமாக சிறந்த மலமிளக்கியாக விளங்குகிறது.ஒரு சிலருக்கு மாட்டுப்பால் அலர்ஜி இருக்கும். இந்தப் பிரச்சினை உள்ளவர்கள் பருத்திப்பால் தாராளமாக குடிக்கலாம். ரத்த அழுத்தத்தை சீராக்கி இதயத்திற்கு ஆரோக்கியத்தை தருகிறது இந்த பருத்திப்பால்

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

டாபிக்ஸ்

அடுத்த செய்தி