Crab Gravy : காரசாரமான நண்டு குழம்பு எப்படி செய்வது? ரொம்ப ஈஸி தான்..இதோ பாருங்கள்!
Dec 10, 2023, 10:01 AM IST
காரசாரமான நண்டு குழம்பு எப்படி செய்வது என்பது குறித்து இதில் பார்ப்போம்.
தேவையான பொருட்கள்
எண்ணெய் - 5 டீஸ்பூன்
கடுகு விதைகள் - 1 தேக்கரண்டி
பெருஞ்சீரகம் விதைகள் - 1 தேக்கரண்டி
வெங்காயம் - 1
தக்காளி-1
இஞ்சி பூண்டு விழுது - 1 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்
மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
கொத்தமல்லி தூள் - 2 டீஸ்பூன்
உப்பு
தண்ணீர்
மசாலா பேஸ்ட்டுக்கு
வெங்காயம்-1
தக்காளி 1
இஞ்சி பூண்டு விழுது - 1 டீஸ்பூன்
கறிவேப்பிலை
கொத்துமல்லி தழை
பச்சை மிளகாய் - 2
சீரகம் - 1 டீஸ்பூன்
மிளகு - 1 டீஸ்பூன்
தேங்காய் - 1/4 கப்
தண்ணீர்
செய்முறை
வெங்காயம்,தக்காளி, இஞ்சி பூண்டு விழுது,கறிவேப்பிலை,கொத்துமல்லி தழை,பச்சை மிளகாய், சீரகம்,மிளகு,தேங்காய் என மேலே குறிப்பிட்டுள்ள பொருட்களை மிருதுவான பேஸ்டாக அரைக்கவும். பின்னர் கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு, பெருஞ்சீரகம், இலைகள் சேர்க்கவும்.
அதில் நறுக்கிய வெங்காயம், தக்காளி, இஞ்சி பூண்டு விழுது சேர்த்து நன்கு வதக்கவும். மஞ்சள் தூள், மிளகாய் தூள் சேர்த்து எண்ணெய் பிரியும் வரை வதக்கவும்.
இப்போது சுத்தம் செய்த நண்டு சேர்த்து சில நிமிடங்கள் சமைக்கவும். பின் அரைத்த விழுதை சேர்த்து 10 நிமிடம் வதக்கினால் நண்டு குழம்பு ரெடி.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்