தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Tasty Recipe: கபத்தைக் கரைக்கும் காரசாரமான மிளகு நண்டு பொரியல் செய்முறை

Tasty Recipe: கபத்தைக் கரைக்கும் காரசாரமான மிளகு நண்டு பொரியல் செய்முறை

I Jayachandran HT Tamil

Jun 18, 2023, 11:45 PM IST

google News
கபத்தைக் கரைக்கும் காரசாரமான மிளகு நண்டு பொரியல் செய்முறை பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.
கபத்தைக் கரைக்கும் காரசாரமான மிளகு நண்டு பொரியல் செய்முறை பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.

கபத்தைக் கரைக்கும் காரசாரமான மிளகு நண்டு பொரியல் செய்முறை பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.

தீராத நெஞ்சுச் சளி, கபம், இருமல், ஆஸ்துமா பிரச்னைகளுக்கு நண்டு சமையல் சிறந்த நிவாரணம் தரும். ஆற்று நண்டை இடித்து சாறு செய்து குடித்தால் தலைபாரம் நீங்கி நீர் இறங்கிவிடும். மூக்கிலிருந்து தண்ணீர் ஒழுகுவது நிற்கும். மிளகு சேர்த்து காரமான நண்டு பொரியல் அல்லது வறுவல் செய்து சாப்பிட்டால் நெஞ்சுச்சளி, கபம் நீங்கி விடும்.

இதற்கெல்லாம் மேலாக கடல் உணவுகளில் மிகவும் சுவை நிறைந்தது நண்டு.

நண்டு பொரியல் செய்யத் தேவையான பொருள்கள்:

நண்டு - 3

சின்ன வெங்காயம் - 10

காய்ந்த மிளகாய் -8

கடுகு -1ஸ்பூன்

பெப்பர் -5 ஸ்பூன்

கருவேப்பிலை -1 கொத்து

எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்

உப்பு - தேவையான அளவு

நண்டு பொரியல்செய்முறை:

நண்டை தண்ணீரில் போட்டு கொதிக்க விட்டு பின் நண்டை உடைத்து அதில் இருந்து சதையை எடுக்கவும்.

அப்படி கிடைக்கவில்லை என்றால் முழு நண்டை வாங்கி நாம் சதையை தனியே எடுத்து கொள்ளலாம்.

இருந்தாலும் முழு நண்டாகச் சமைப்பதில் சுவையும் சக்தியும் அதிகம். நண்டு எலும்பை உறிஞ்சும்போது மிகவும் ருசியாகவும் அதன் சாறு சளியை கரைக்கும்.

சட்டியில் எண்ணை விட்டு அதில் கடுகு, காய்ந்த மிளகாய் போட்டு வதக்கவும்.

அதில் வெங்காயம், கறிவேப்பிலை போட்டு வதக்கவும். வெங்காயம் வதங்கி யதும் நண்டு சதை யினை அதனுடன் சேர்த்து கிளறவும்.

நன்கு கிளறி உப்பு சேர்த்து அப்படியே 3நிமிடம் மூடி வைத்து விட்டு பின் மூடியினை திறந்து கிளறி விட்டு பெப்பர் தூவி இறக்கவும்.

சுடச்சுட நண்டை சாப்பிட வேண்டும். அப்போதுதான் அதன் தாக்கம் உடம்பில் நல்ல விளைவுகளை தரும்.

டாபிக்ஸ்

அடுத்த செய்தி
கவனம் பெற்றவை