தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  தீபாவளிக்கு சாஃப்ட் அதிரசம் செய்யனுமா? இந்த மாதிரி செஞ்சு பாருங்க! சூப்பர் டிரிக்ஸ்!

தீபாவளிக்கு சாஃப்ட் அதிரசம் செய்யனுமா? இந்த மாதிரி செஞ்சு பாருங்க! சூப்பர் டிரிக்ஸ்!

Suguna Devi P HT Tamil

Oct 29, 2024, 07:56 PM IST

google News
தீபாவளி பண்டிகை என்றாலே பட்டாசும் பலகாரமும் தான் நினைவுக்கு வரும். அந்த அளவிற்கு பலகாரங்கள் தீபாவளி பண்டிகையில் முக்கியத்துவம் பெறுகின்றன. நாம் பலகாரங்களை உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் வழங்கி மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்கிறோம்.
தீபாவளி பண்டிகை என்றாலே பட்டாசும் பலகாரமும் தான் நினைவுக்கு வரும். அந்த அளவிற்கு பலகாரங்கள் தீபாவளி பண்டிகையில் முக்கியத்துவம் பெறுகின்றன. நாம் பலகாரங்களை உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் வழங்கி மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்கிறோம்.

தீபாவளி பண்டிகை என்றாலே பட்டாசும் பலகாரமும் தான் நினைவுக்கு வரும். அந்த அளவிற்கு பலகாரங்கள் தீபாவளி பண்டிகையில் முக்கியத்துவம் பெறுகின்றன. நாம் பலகாரங்களை உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் வழங்கி மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்கிறோம்.

தீபாவளி பண்டிகை என்றாலே பட்டாசும் பலகாரமும் தான் நினைவுக்கு வரும். அந்த அளவிற்கு பலகாரங்கள் தீபாவளி பண்டிகையில் முக்கியத்துவம் பெறுகின்றன. நாம் பலகாரங்களை உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் வழங்கி மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்கிறோம். பலகாரங்கள் வழியே பகிரப்படும் இந்த மகிழ்ச்சி பண்டிகைகளின் போது அதிகமாகும். இந்தியாவில் அனைத்து பண்டிகைகளின் போதும் உணவு என்பது ஒரு பிரதான கொண்டாட்டமாக இருந்து வருகிறது. உணவின் வழியே மட்டுமே ஒரு விழாவின் கொண்டாட்டம் திருப்தி அடைகிறது. அந்த வகையில் தீபாவளி பண்டிகையில் பலவிதமான பலகாரங்கள் செய்யப்படுகின்றன. 

 தமிழகத்தை பொறுத்தவரை முறுக்கு, அதிரசம் போன்ற பலகாரங்கள் சுடப்படுகின்றன.  தமிழ்நாட்டில் பிரதானமாக சுடப்படும் இனிப்பு பண்டமாக அதிரசம் இருந்து வருகிறது. தீபாவளி என்றால் அதன் பலகார லிஸ்ட்டில் கண்டிப்பாக அதிரசம் இருக்கும். ஏனென்றால் அதிரசமே மிகவும் எளிமையாக செய்யக்கூடிய ஒரு இனிப்பு பண்டமாகும். இருப்பினும் அதிரசம் செய்யும் போது சில சமயங்களில் மாவு பதம் சரியாக இல்லாத காரணத்தால் கட்டியாகவோ அல்லது உதிரி உதிரியாகவோ அதிரசங்கள் வருகின்றன. மிகவும் சாஃப்டான அதிரசத்தை செய்யும் ட்ரிக்ஸ் மிகவும் எளியதாகும்.  வீட்டிலேயே எளிமையாக சாஃப்டான அதிரசம் செய்வது எப்படி என்பதை இதில் காணலாம். 

தேவையான பொருட்கள் 

2 கிலோ பச்சரிசி 

ஒன்றரை கிலோ வெல்லம் 

5 ஏலக்காய் துண்டுகள் 

அதிரசம் பொரிக்கத் தேவையான அளவு எண்ணெய் 

செய்முறை 

முதலில் 2 கிலோ பச்சரிசியை நன்கு கழுவி சுத்தம் செய்து 6 முதல் 7 மணி நேரங்கள் ஊற வைக்க வேண்டும். பின்னர் ஊற வைத்த அரிசியை எடுத்து ஒரு பெரிய துணியில் பரப்பி காய வைக்க வேண்டும். இது 10 முதல் 15 நிமிடங்கள் மட்டுமே காய விட வேண்டும். காய வைத்த அரிசியை எடுத்து ஒரு மிக்சி ஜாரில் போட்டு பொடியாக அரைக்க வேண்டும். இதனுடன் 4 ஏலக்காய் தூண்டுகளை போட்டு அரைக்க வேண்டும். இது அதற்கு வாசனையை கூட்டும். அரைத்த மாவை ஒரு சல்லடை வைத்து சலித்து எடுத்துக் கொள்ளவும். அதனை ஒரு பாத்திரத்தில் போட்டு அழுத்தி வைத்துக் கொள்ளவும். 

பின்னர் பாகு காய்ச்ச ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து தண்ணீர் ஊற்றி காய விட வேண்டும். அதில் வெல்லத்தை நுணுக்கி போட வேண்டும். வெல்லம் முழுவதுமாக கரைய வேண்டும். இதனை மிதமான தீயில் காயச்ச வேண்டும். கம்பி பதத்திற்கு வரும் போது அடுப்பை அனைத்து விட வேண்டும். வேறு பாத்திரத்தில் சிறிதளவு தண்ணீர் ஊற்றி அதில் காய்ச்சிய வெல்லப் பாகை ஊற்றி பார்க்க வேண்டும். நன்றாக உருட்டும் பதம் வந்தால் சரியாக உள்ளது என அர்த்தம். இந்த பாகை அரைத்த அரிசி மாவுடன் சேர்த்து கலந்து விட்டு ஒரு நாள் முழுவதும் அப்படியே விட வேண்டும்.  ஒரு நாள் முழுவதும் ஊறிய மாவை எடுத்து சிறு சிறு உருண்டைகளாக உருட்டி ஒரு இழையில் வைத்து தட்டி எண்ணெயில் போட்டு பொரித்து எடுக்க வேண்டும். மிதமான தீயில் பொரித்து எடுத்தால் மட்டுமே அதிரசத்தின் உள்ளேயும் நன்றாக வெந்து வரும். இவ்வாறு செய்யும் போது மிகவும் மென்மையான அதிரசம் கிடைக்கும்.   

 

 

 

டாபிக்ஸ்

அடுத்த செய்தி