தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Healthy Diet: புரதம் நிறைந்த உணவு மீல்மேக்கர் வடை செய்முறை

Healthy Diet: புரதம் நிறைந்த உணவு மீல்மேக்கர் வடை செய்முறை

I Jayachandran HT Tamil

Mar 30, 2023, 09:34 PM IST

புரதம் நிறைந்த உணவு மீல்மேக்கர் வடை செய்முறை குறித்து இங்கு அறிந்து கொள்ளுங்கள்.
புரதம் நிறைந்த உணவு மீல்மேக்கர் வடை செய்முறை குறித்து இங்கு அறிந்து கொள்ளுங்கள்.

புரதம் நிறைந்த உணவு மீல்மேக்கர் வடை செய்முறை குறித்து இங்கு அறிந்து கொள்ளுங்கள்.

மீல் மேக்கர் என்பது சோயா பீன்ஸில் தயாராகக்கூடிய உணவுப் பொருள். சோயா பீன்ஸில் ஏராளமான புரதச் சத்துகளும், தாதுச்சத்துகளும் நிறைந்துள்ளன. இதிலிருந்து தயாரிக்கப்படும் மீல் மேக்கரிலும் புரதச்சத்தும் இதரச் சத்துகளும் நிறைந்துள்ளன. இந்த மீல் மேக்கர் உணவப் பொருளை வைத்து குழம்பு வகைகளும் செய்யலாம். இதில் மீல்மேக்கர் வடை செய்வது எப்படி என்பதைப் பற்றி இனி பார்ப்போம்.

ட்ரெண்டிங் செய்திகள்

Benefits of Beer : என்ன பீர் குடித்தால் உங்களின் வாழ்நாள் நீடிக்குமா? எப்படி குடிக்கவேண்டும்? – வழிகாட்டி

Detox Symptoms : உங்கள் உடலுக்கு எப்போது கழிவு நீக்கம் தேவை? அதற்கான அறிகுறிகள் இவைதான்!

Tea : 'ஒரு டீ சாப்பிடலாமா சார்.. இந்த வார்த்தைக்கு பின்னாடி இத்தனை கதை இருக்கா' தேநீர் என்றும் நமக்கு சுவையான பானம்தான்!

Benefits of Bottle Guard : கோடையில் இந்த ஒரு காய் மட்டும் போதும்! உடலில் தண்ணீர் சத்து குறையாது!

மீல்மேக்கர் வடை செய்யத் தேவையான பொருட்கள்-

மீல் மேக்கர் - 100 கிராம்

பொட்டுக் கடலை மாவு - அரை கப்

பெரிய வெங்காயம் - 1

கரம் மசாலா - ஒரு தேக்கரண்டி

கறி மசாலா - ஒரு தேக்கரண்டி

இஞ்சி பூண்டு விழுது - ஒரு தேக்கரண்டி

சோம்பு, சீரகத்தூள் - ஒரு தேக்கரண்டி

மஞ்சள் தூம் - கால் தேக்கரண்டி

சோள மாவு - ஒரு தேக்கரண்டி

கொத்தமல்லி

புதினா

கறிவேப்பிலை

எண்ணெய்

உப்பு

மீல்மேக்கர் வடை செய்முறை

ஒரு கிண்ணத்தில், பொட்டுக் கடலை மாவு, சோள மாவு, மஞ்சள் தூள், சோம்பு & சீரகத்தூள், கறி மசாலா, கரம் மசாலா, இஞ்சி பூண்டு விழுது, பொடியாக நறுக்கிய புதினா, கொத்தமல்லி, கறிவேப்பிலை, பச்சை மிளகாய், பெரிய வெங்காயம் சேர்த்து கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர்விட்டு பிசைந்துக் கொள்ளவும்.

பிறகு, வெந்நீரில் வேக வைத்து பொடியாக நறுக்கிய மீல் மேக்கர், உப்பு சேர்த்து வடை பதத்துக்குத் தயார் செய்துக் கொள்ளவும்.

இடையே, வாணலியை அடுப்பில் வைத்து பொரிப்பதற்கு எண்ணெய் ஊற்றி சூடாக்கவும்.

கலவையில் இருந்து மாவை கொஞ்சம் கொஞ்சமாக எடுத்து வடைப்போல் தட்டி, சூடான எண்ணெய்யில் போட்டு பொன்னிறமாகும் வரை பொரித்து எடுக்கவும்.

சுவையான சத்தான புரதம் நிறைந்த மீல்மேக்கர் வடை தயார்.

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இந்த வடையை ருசித்துச் சாப்பிடுவர்.

டாபிக்ஸ்