Kids Favourite Foods: குழந்தைகளும் விரும்பும் மாலைநேர சிற்றுண்டி பால் கொழுக்கட்டை
Jun 03, 2023, 03:51 PM IST
குழந்தைகளும் விரும்பும் மாலைநேர சிற்றுண்டி பால் கொழுக்கட்டை செய்முறை குறித்து இங்கு தெரிந்து கொள்ளுங்கள்.
மாலை நேரத்தில் பள்ளிகளில் இருந்து திரும்பும் குழந்தைகள், அலுவலகத்தில் இருந்து வரும் பெரியவர்கள் பசியோடுதான் வருவார்கள். வந்தவுடன் டீ அல்லது காபி குடித்துவிட்டு நிற்கமாட்டார்கள். ஏதாவது ருசியாகச் சாப்பிட வேண்டும் என்று நினைப்பார்கள். அவர்கள் விருப்பத்துக்கு ஏற்ற ஒரு மாலை நேர சிற்றுண்டிதான் பால் கொழுக்கட்டை. இதைச் செய்து கொடுத்தால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை மிகவும் விரும்பிச் சாப்பிடுவார்கள்.
குடும்பத்தில் அனைவரையும் சுண்டி இழுக்கும் சுவையான பால் கொழுக்கட்டை செய்யத் தேவையான பொருட்கள்:
அரிசி மாவு - அரை கப்
பால் - அரை கப்
தண்ணீர்- 2 டேபிள்ஸ்பூன்
சர்க்கரை - அரை கப்
நெய் - 1 டேபிள்ஸ்பூன்
ஏலக்காய் பொடி - ஒரு சிட்டிகை
உப்பு - ஒரு சிட்டிகை
அலங்கரிக்க
குங்குமப்பூ சிறிது
பிஸ்தா, பாதாம் சிறிதளவு
பால் கொழுக்கட்டை செய்முறை:
ஒரு பாத்திரத்தில் அரிசிமாவு, தண்ணீர், பால் ஆகியவற்றை ஒன்றாகக் கலந்து கொள்ளவும்.
மிதமான சூட்டில் அடுப்பை வைத்து கட்டி விழாமல் கிளறிக் கொண்டேயிருக்க வேண்டும்.
உருண்டை பிடிக்கும் பதத்திற்கு வந்தவுடன் அடுப்பை அனைத்து ஆற விடவும்.
மாவு ஆறியதும், அதனுடன் நெய் சேர்த்து சிறு சிறு உருண்டைகளாக பிடித்துக்கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் பால் மற்றும் சர்க்கரை ஒன்றாக சேர்த்து மிதமான சூட்டில் கொதிக்கவிடவும். இதில் உருட்டி வைத்துள்ள உருண்டைகளை சேர்க்கவும்.
கொழுக்கட்டை மேலே மிதக்க ஆரம்பித்ததும், ஏலக்காய் தூள், குங்குமப்பூ சேர்த்து இறக்கவும்.
பின்னர் சுடச்சுட கிண்ணத்தில் வைத்து பரிமாறவும்.
டாபிக்ஸ்