தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Healthy Diet: ருசியான சத்தான வித்தியாசமான நெல்லிக்காய் பொரியல்!

Healthy Diet: ருசியான சத்தான வித்தியாசமான நெல்லிக்காய் பொரியல்!

I Jayachandran HT Tamil

Jun 03, 2023, 05:38 PM IST

google News
ருசியான சத்தான வித்தியாசமான நெல்லிக்காய் பொரியல் பற்றி இங்கு தெரிந்து கொள்ளுங்கள்.
ருசியான சத்தான வித்தியாசமான நெல்லிக்காய் பொரியல் பற்றி இங்கு தெரிந்து கொள்ளுங்கள்.

ருசியான சத்தான வித்தியாசமான நெல்லிக்காய் பொரியல் பற்றி இங்கு தெரிந்து கொள்ளுங்கள்.

நெல்லிக்காயில் நம் உடலுக்குத் தேவையான அத்தனை ஊட்டச்சத்துகளும் நிறைந்துள்ளன. ஊட்டச்சத்துகளை கிரகித்துக் கொள்ளும் ஆற்றலையும் உடலுக்கு நெல்லிக்காய் தருகிறது.

நெல்லிக்காய் புளிப்பு, இனிப்பு மற்றும் துவர்ப்புச் சுவைகளைக் கொண்டது; குளிர்ச்சித் தன்மையானது; கண்களுக்குக் குளிர்ச்சி தரும்; செரிமானத்தைக் தூண்டும்; சிறுநீர் பெருக்கும்; குடல் வாயுவை அகற்றும்; பேதியைத் தூண்டும்; உடல்சூடு, எலும்புருக்கி நோய், பெரும்பாடு, வாந்தி, வெள்ளைப்படுதல், ஆண்குறிக் கொப்புளங்கள் போன்றவற்றைக் குணமாக்கும்.

நெல்லிக்கனிகளை அதிகம் சாப்பிட்டு வருபவர்களுக்கு தோலில் உள்ள செல்கள் புத்துணர்வு பெற்று, ரத்த ஓட்டத்தை நன்கு தூண்டி தோலில் சுருக்கங்கங்கள் போன்றவை ஏற்படுவதை தடுத்து, இளமையான தோற்றத்தை நீட்டிக்க செய்கிறது.

இதில் நிறைந்திருக்கும் வைட்டமின் சி சத்து சருமத்துக்கு இலகுவான தன்மையை தருவதோடு சரும புற்று நோய்கள் ஏற்படாமலும் காக்கிறது. குறைந்த பட்சம் வாரத்திற்கு ஒரு முறை நெல்லிக்காய் சாப்பிடுவதால் முகப்பொலிவு, பளப்பான சருமம் ஆகியவற்றை பெறலாம். நெல்லிக்காயை அப்படியே சாப்பிட முடியாதவர்கள் பொரியல் செய்து சாப்பிடலாம்.

நெல்லிக்காய் பொரியல் செய்யத் தேவையான பொருட்கள்:

பெரிய நெல்லிக்காய் - 10

இட்லி மிளகாய்ப் பொடி - 2 தேக்கரண்டி

எண்ணெய், கடுகு, கறிவேப்பிலை, சீரகம் - தேவையான அளவு

தாளிக்க:

கொத்தமல்லித்தழை - தேவையான அளவு

உப்பு - தேவையான அளவு.

நெல்லிக்காய் பொரியல் செய்முறை:

கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

நெல்லிக்காயின் விதைகளை நீக்கி ஆவியில் வேக விடவும்.

கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, சீரகம், கறிவேப்பிலை போட்டு தாளித்து வெந்த நெல்லிக்காய் துண்டுகள், உப்பு இட்லி மிளகாய்ப் பொடி சேர்த்துக் கிளறி விடவுமா்.

பின்னர் கொத்தமல்லித்தழை தூவி இறக்கி பரிமாறவும்.

சுவையான நெல்லிக்காய் பொரியலை சாப்பிட்டு மகிழுங்கள்.

அடுத்த செய்தி