தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Kids Health: குழந்தைகள் விரும்பும் மாம்பழ பால், நோய் எதிர்ப்பு சக்தி தரும் பூண்டுப்பால் செய்முறை

Kids Health: குழந்தைகள் விரும்பும் மாம்பழ பால், நோய் எதிர்ப்பு சக்தி தரும் பூண்டுப்பால் செய்முறை

I Jayachandran HT Tamil

Jun 03, 2023, 05:48 PM IST

குழந்தைகள் விரும்பும் மாம்பழ பால், நோய் எதிர்ப்பு சக்தி தரும் பூண்டுப்பால் செய்முறை பற்றி இங்கு தெரிந்து கொள்ளுங்கள்.
குழந்தைகள் விரும்பும் மாம்பழ பால், நோய் எதிர்ப்பு சக்தி தரும் பூண்டுப்பால் செய்முறை பற்றி இங்கு தெரிந்து கொள்ளுங்கள்.

குழந்தைகள் விரும்பும் மாம்பழ பால், நோய் எதிர்ப்பு சக்தி தரும் பூண்டுப்பால் செய்முறை பற்றி இங்கு தெரிந்து கொள்ளுங்கள்.

வயது வித்தியாசமில்லாமல் அனைவரும் விரும்பிச் சாப்பிடும் பழங்களில் முதன்மையானது மாம்பழம். குழந்தைகளுக்கு மிகவும் இஷ்டமான பழம் இது.

ட்ரெண்டிங் செய்திகள்

Late Night Eating Problems : நட்டநடு ராத்திரியில் உணவு சாப்பிடுபவரா? அச்சச்சோ அதனால் ஏற்படும் பாதிப்புகளை பாருங்கள்!

Mango Aviyal : மாங்காயில் வித்யாசமான அவியல் குழம்பு செய்வது எப்படி என்று தெரிந்துகொள்ளுங்கள்!

Benefits of Gulkand : தினமும் ஒரு ஸ்பூன் ரோஜா குல்கந்து! ஆற்றல், அமைதி, பாலியல் உணர்வு அதிகரிப்பு என எத்தனை நன்மைகள்!

Dry Fruits Laddu : தினமும் இதை மட்டும் ஒரு உருண்டை சாப்பிடுங்க! 15 நாளில் முடி உதிர்வது முற்றிலும் சரியாகும்!

இப்போது மாம்பழ சீசன். பல வகையான மாம்பழங்கள் வருகின்றன. உங்களுக்குப் விருப்பமான மாம்பழங்களை வாங்கி, சூப்பரான மாம்பழ பால் செய்து சாப்பிடலாம். மாம்பழ பால் தயாரிப்பது எப்படி என்று பார்க்கலாம். இது குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும்.

மாம்பழ பால் செய்யத் தேவையான பொருட்கள்-

பால் - 1 லிட்டர்

சர்க்கரை - தேவையான அளவு

பைனாப்பிள் எசன்ஸ் - 1 டீஸ்பூன்

நன்கு கனிந்த மாம்பழம் - 2

மாம்பழ பால் செய்முறை

மாம்பழத்தை தோல் நீக்கி பொடியாக நறுக்கி கொள்ளவும்.

பாலை நன்றாக கொதிக்க வைத்து பால் அரை லிட்டராக சுண்டியதும் இதில் சர்க்கரையை சேர்த்து நன்றாக கலக்கவும். பாலுக்கு பதில் மில்க் மெய்ட் வாங்கியும் பயன்படுத்தலாம்.

அடுத்து அதில் பைனாப்பிள் எசன்ஸ் சேர்த்து நன்றாக கலக்கவும்.

அடுத்து அதில் பொடியாக நறுக்கிய மாம்பழத்தை கலந்து பிரிட்ஜில் 2 மணி நேரம் வைத்திருந்து பரிமாறவும்.

சூப்பரான மாம்பழ பால் தயார்.

இனி குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு ஆற்றலை அதிகரிக்கும் பூண்டு பால் பற்றி பார்க்கலாம்.

பூண்டை தினசரி பயன்படுத்தி வந்தால், சளி ஏற்படும் எண்ணிக்கைகள் குறைந்துவிடும். அதிலுள்ள பாக்டீரியா எதிர்ப்பு குணங்கள் தொண்டை எரிச்சல்களை குணப்படுத்த உதவும். மேற்பகுதி சுவாச பாதை தொற்றுக்களின் தீவிரத்தை குறைக்க பூண்டு உதவிடும். ஆஸ்துமா, சுவாசிப்பதில் சிரமம் போன்ற நுரையீரல் கோளாறுகளுக்கும் இது பயனளிக்கும். அதனால் கண்டிப்பாக இது ஒரு விலை மதிப்பற்ற மருந்தே. இதன் சளிநீக்கத் திறனால் தீவிர மூச்சுக்குழாய் அழற்சியும் குறையத் தொடங்கும். எனவே, வெறும் பூண்டு பல்லும் சாப்பிடலாம். அல்லது சுவையாக பூண்டு பாலும் சாப்பிடலாம் பூண்டு பால் தயாரிப்பது எப்படி? என்று பார்ப்போம்.

பூண்டு பால் செய்யத் தேவையான பொருட்கள்:

பால் - 500 மி.லி. ,

மிளகுதூள் - 1 தேக்கரண்டி,

சுக்கு தூள் - 1 தேக்கரண்டி,

மஞ்சள்தூள் - அரை தேக்கரண்டி,

தேன் - 1 மேஜை கரண்டி,

பூண்டு - 1,

பாதாம் - 12

பூண்டு பால் செய்முறை:

அடுப்பில் பாலை வைத்து கொதிக்க ஆரம்பித்தவுடன் அதில் மஞ்சள்தூள், மிளகுதூள், சுக்கு தூள், சுத்தம் செய்த பூண்டு ஆகியவற்றை சேர்க்கவும்.

200 மி.லி. அளவுக்கு பால் வற்றியதும் இறக்கி தேன் கலந்து பருகவும்.

குழந்தைகளுக்கு சிறிய டம்ளரில் தந்தால் போதும்.

அடுத்த செய்தி