Herbal Recipes: கல்லீரல் நோய், இதயம், சிறுநீரக நோய்களை விரட்டும் காசினி கீரை சட்னி
Jun 04, 2023, 06:18 PM IST
கல்லீரல் நோய், இதயம், சிறுநீரக நோய்களை விரட்டும் காசினி கீரை சட்னி செய்முறை பற்றி இங்கு தெரிந்து கொள்ளுங்கள்.
மூலிகைகளில் நல்ல பலன்களைத் தருவதில் முக்கியமானது காசினிக் கீரை. காசினிக்கீரை இலை, வேரை பொடி பாணமாக்கி தேனீருக்கு பதிலாக பருகலாம். காசினிக் கீரையில் கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு சத்து, மற்றும் வைட்டமின் ஏ, பி, சி ஆகியவைகள் உள்ளன. ஜீரண கோளாறு, பித்தப்பை நோய், கல்லீரல் நோய்கள், ரத்த சோகை, சிறுநீரக நோய்கள், இதய நோய்கள், வாத நோய்கள் ஆகியவற்றை குணப்படுத்தும் வல்லமை உடையது.
மருத்துவ குணம் மிகுந்த காசினி கீரையில், சட்னி தயார் செய்ய தெரியுமா? இந்தச் சட்னி உடலுக்கும் மனதிற்கும் மருந்தாக இருக்கும்
தேவையான பொருட்கள்
-
காசினி கீரை- 2 கோப்பை அளவு,
பச்சை மிளகாய்- 5 எண்ணிக்கை,
கறிவேப்பிலை- சிறிதளவு,
பூண்டு, வெங்காயம்- தலா ஒன்று,
உப்பு- தேவையான அளவு,
அரைத்த தேங்காய்- 3 தேக்கரண்டி
தாளிப்பதற்கு
கடுகு, உளுந்தம் பருப்பு- தலா ஒரு தேக்கரண்டி, எண்ணெய்- சிறிதளவு.
செய்முறை:-
• மிளகாய், வெங்காயத்தை நறுக்கிக் கொண்டு, பூண்டையும் தட்டி வைத்துக் கொள்ளுங்கள்.
• காசினி கீரையை அம்மியில் நன்றாக அரைத்துக் அதில் சிறிதளவு தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்.
• கீரை கொதி நிலைக்கு வந்த பின்னர், பூண்டு, வெங்காயம், மிளகாய் ஆகியவற்றை அதில் போட வேண்டும்.
• சிறிது நேரம் கழித்து, தேங்காய் விழுதை கீரையில் கொட்டி, நன்றாக கிளற வேண்டும்.
• கடைசியாக தாளிக்கும் பொருட்களுடன், கறிவேப்பிலையும் போட்டு தாளித்து, அதை கீரையுடன் சேர்க்க கிளறி இறக்க வேண்டும்.
• இப்போது காசினி கீரை சட்னி தயார் ஆகிவிடும். இதை இட்லியுடன் சேர்த்து சாப்பிட்டால் சுவையாக இருக்கும்.
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
https://twitter.com/httamilnews
https://www.facebook.com/HTTamilNews
https://www.youtube.com/@httamil
டாபிக்ஸ்