தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Kollu Chutney: பெண்களுக்கு வலிமை தரும் கொள்ளு கேரட் துவையல் செய்வது எப்படி?

Kollu Chutney: பெண்களுக்கு வலிமை தரும் கொள்ளு கேரட் துவையல் செய்வது எப்படி?

I Jayachandran HT Tamil

Jan 19, 2023, 04:16 PM IST

google News
வலுத்தவனுக்கு எள்ளைக் கொடு; கொழுத்தவனுக்கு கொள்ளைக் கொடு என்பது மூத்தோர் மொழி. ஆனால் கொள்ளு பருப்பில் கொலஸ்டிராலைக் குறைக்கும் ஆற்றலைத் தவிர்த்து இன்னும் பிற ஊட்டச்சத்துகள் நிறைந்துள்ளன. குறிப்பாக இவை பெண்களின் உடல்நலத்துக்கு ஆரோக்கியத்தைத் தருபவை.

கொள்ளுப் பருப்பை ஊற வைத்து, அந்த நீரை குடித்தால் உடலில் உள்ள கெட்ட நீர் வெளியேறி விடும். கொள்ளுப் பருப்புக்கு அந்தளவுக்கு டீடாக்ஸ் செய்யும் திறன் உண்டு. அதே

கொள்ளை நீரிலிட்டு கொதிக்க வைத்து அந்நீரை அருந்த ஜலதோஷம் குணமாகும். உடல் உறுப்புக்களைப் பலப்படுத்தும்.

வயிற்றுப்போக்கு, வயிற்றுப் பொருமல், கண் தொடர்பான பாதிப்புகள் ஆகியவற்றையும் கொள்ளு நீர் குணப்படுத்தும்.

கேரட்டில் பொட்டாசியம், வைட்டமின் A, பையோடின், வைட்டமின் B6, வைட்டமின் K1 மற்றும் தாதுப்பொருட்கள் அடங்கியுள்ளன.

அவை ரத்த அழுத்தத்தைக் குறைத்தல், கண் பார்வையை கூர்மையாக்குதல், புரதச் சத்தை அதிகரித்தல், ஆற்றலை அதிகரித்தல், எலும்புகளை உறுதியாக்குதல் போன்ற பல சாதகங்களைத் தருகின்றன. வீட்டில் அதிகம் உழைக்கும் பெண்களுக்கு இவை எல்லாம் அத்தியாவசியமானவை.

உடல் ஆரோக்கியத்துக்கு மட்டுமல்லாமல் மேனியின் அழகையும் பராமரிக்க உதவும். தினமும் கேரட் ஜூஸ் குடித்து வந்தால் முகம் பளபளப்பாகும்.

இனி கொள்ளு கேரட் துவையல் செய்வது எப்படி? என்பதைப் பார்க்கலாம்.

தேவையான பொருட்கள் :

கேரட் துருவல் - 1 கப்,

வெங்காயம் - 1

பூண்டு - 4 பல்,

காய்ந்த மிளகாய் -10,

உளுந்தம் பருப்பு - 1 கைப்பிடி,

கடலைப் பருப்பு - 1 கைப்பிடி,

கொள்ளு - 30 கிராம்,

கடுகு, கறிவேப்பிலை,

உப்பு - தேவையான அளவு.

செய்முறை :

வெங்காயத்தை அரிந்து கொள்ளவும். வாணலியில் எண்ணெய் விட்டு சூடானதும் வெங்காயம், கேரட் துருவல், பூண்டை போட்டு வதக்கவும்.

பின்பு மிளகாய் வற்றல், கொள்ளு, உளுந்தம் பருப்பு, கடலைப் பருப்பு ஆகியவற்றைத் தனியாக வறுக்கவும்.

அனைத்தும் சூடு ஆறியவுடன் வதக்கிய கலவையுடன் உப்பு, புளி தண்ணீர் சேர்த்து நைசாக மிக்சியில் அரைக்கவும்.

இத்துடன் வறுத்த பருப்புகள், மிளகாய் சேர்த்து கொர கொரப்பாக அரைக்கவும். வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, உளுந்தம் பருப்பு, கறிவேப்பிலை போட்டு தாளித்து துவையலில் சேர்த்து கலக்கவும்.

சுவையான கொள்ளு கேரட் துவையல் ரெடி.

தோசை, இட்லி, சப்பாத்திக்கு சேர்த்து சாப்பிட்டால் மிகவும் ருசியாக இருக்கும். பெண்களின் உடல் வலிமைக்கும் நல்லது.

டாபிக்ஸ்

அடுத்த செய்தி
கவனம் பெற்றவை