Ragi Uttapam: உடலுக்கு சத்தான ராகி ஊத்தப்பம் எப்படி செய்வது?
Jul 21, 2023, 01:30 PM IST
ராகி ஊத்தப்பம் எப்படி செய்வது என பார்க்கலாம்.
ராகியில் அதிக நார்ச்சத்து உள்ளது. அதிக அளவு நார்ச்சத்து உணவு வயிற்றை நீண்ட நேரம் நிறைவாக வைத்திருக்கும். ராகி மாவில் ஊத்தப்பம் செய்து காலை உணவாக சாப்பிடலாம். ராகி ஊத்தப்பம் உங்கள் காலை உணவின் ஊட்டச்சத்து மதிப்பை அதிகரிக்கிறது. கீழே உள்ள ராகி ஊத்தப்பம் எப்படி செய்வது என பார்க்கலாம். செய்முறையைப் பாருங்கள்.
தேவையான பொருள்கள்
ராகி மாவு - அரை கப்
ரவா - 2 ஸ்பூன்
தயிர் - ஒரு கப்
துருவிய கேரட் - 1/4 கப்
கேப்சிகம் துண்டுகள் - 1/2 கப்
வெங்காயம் - 1
கறிவேப்பிலை - 1 துளி
கடுகு - 1/4 டீஸ்பூன்
பேக்கிங் சோடா - ½ தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
மிளகு தூள் - தேவையான அளவு
எண்ணெய்
செய்முறை
- முதலில் ஒரு பாத்திரத்தில் ராகி மாவு, ரவா மற்றும் கறிவேப்பிலை போடவும். மேலும் உப்பு மற்றும் கருப்பு மிளகு தூள் சேர்க்கவும்.
- இப்போது தயிர் சேர்த்து நன்கு கலக்கவும். கலவையில் தண்ணீர் சேர்த்து மென்மையான மாவை உருவாக்கவும். 15 முதல் 20 நிமிடங்கள் ஒதுக்கி வைக்கவும்.
- இப்போது மாவில் பேக்கிங் சோடா அல்லது ஈனோ உப்பு சேர்த்து லேசாக கலக்கவும். அதிகமாக கலக்க வேண்டாம்.
- எல்லாம் தயாரானதும், தோசை கல் எடுத்து சிறிது எண்ணெய் தெளித்து சூடாகும் வரை காத்திருக்கவும். எண்ணெய் சூடாக்கப்பட்ட பிறகு, தவாவில் சிறிது கெட்டியாக ஊத்தப்பத்தை பரப்பவும்.
- இப்போது நறுக்கிய வெங்காயம், கேரட் மற்றும் கேப்சிகம் துண்டுகளை சேர்க்கவும். தவாவை சுற்றி எண்ணெய் ஊற்றவும். ஒரு மூடியால் மூடி, மிதமான தீயில் சமைக்கவும்.
அவ்வளவு தான் தயார். உங்களுக்குர் பிடித்த சட்னியுடன் சூடாக பரிமாறவும்.
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்