Paal Poli: ருசியான பால் போளி செய்வது எப்படி?
Jul 05, 2023, 04:41 PM IST
பண்டிகைகளின் போது செய்யப்படும் மிகவும் ருசியான இனிப்பு பலகாரமாக இந்த பால் போளி இருக்கிறது.
பால் நம் உடலுக்கு மிகவும் சத்தான பானம். பாலில் கால்சியம், பொட்டாசியம், லாக்டோஸ் என பல விதமான சத்துக்கள் அடங்கியுள்ளன.
பாலில் பலவிதமான இனிப்பு ரெசிபிகள் செய்யலாம். பால்கோவா, பால் போளி, பாஸந்தி, ரசமலாய், கேக், மில்க் ஷேக் ஆகியவை செய்யலாம். இதில் நாம் இப்போது பால் போளி எப்படி செய்வது என்பது பற்றி பார்ப்போம்.
பண்டிகைகளின் போது செய்யப்படும் மிகவும் ருசியான இனிப்பு பலகாரமாக இந்த பால் போளி இருக்கிறது.
இதை செய்யத் தேவையான பொருட்கள்
மைதா- 1/2 கப்
பால்- 1/2 லிட்டர்
எண்ணெய்- பொரிக்க தேவையான அளவு
சர்க்கரை- 4 டேபிள் ஸ்பூன்
ஏலக்காய் தூள்- தேவையான அளவு
பாதாம்- 10
செய்முறை
ஒரு பாத்திரத்தில் மைதா மாவு, எண்ணெய் மற்றும் தண்ணீர் சேர்த்து சப்பாத்தி மாவு பதம் வரும் வரை பிசைந்து வைத்துக் கொள்ளவும்.
20 நிமிடம் நன்றாக ஊற விடவும்.. பின்னர், ஒரு கடாயில் பால், சர்க்கரை மற்றும் ஏலக்காய்த் தூள் சேர்த்து நன்கு கொதிக்க விடவும். அதில் சிறு துண்டுகளாக உடைத்த பாதாம் பருப்புகளை சேர்க்கவும். அதை இறக்கி நன்றாக ஆறவிடவும்.
ஊற வைத்த மாவை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி ஒரு தட்டில் வைக்கவும். ஒரு உருண்டையை எடுத்து சப்பாத்தி இடும் பலகையில் வைத்து பூரிகளாக இடவும்.
ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி அது காய்ந்த பின், இட்டு வைத்த பூரிகளை பொன்னிறமாக பொரித்து எடுக்கவும். நாம் ஆற வைத்த பாலுடன் இந்த பொரித்த பூரிகளை போட்டு நன்றாக ஊற விடவும்.
ஊறிய பின் அதை எடுத்து ஒரு தட்டில் பரிமாறினால் சுவையான பால் போளி தயார் ஆகிவிடும். இதை குழந்தைகளுக்கு செய்து தந்தால் மிகவும் விரும்பிச் சாப்பிடுவார்கள்.
என்ன ருசியான பால் போளி செய்ய ரெடி தானே!
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
டாபிக்ஸ்