Beauty Tips: கருமையான அலைஅலையாய் நீண்ட கூந்தல் வளர வாரம் ஒருமுறை இப்படி செய்யுங்கள்!
Jun 17, 2023, 04:37 PM IST
கருமையான அலைஅலையாய் நீண்ட கூந்தல் வளர செய்ய வேண்டிய வழிமுறைகள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.
கருமையான அலைஅலையாய் நீண்ட கூந்தல் வளர வேண்டும் என்ற ஆசை எந்தப் பெண்ணுக்குத்தான் இருக்காது. அடர்த்தியான சுருள் கூந்தல் இடுப்புக்குக் கீழ் தழையத் தழையை வளரவேண்டும் என்ற இயல்பான ஆசை பெண்களுக்கு இருக்கத்தான் செய்யும். இதற்கு அவர்களது இளம் வயதிலிருந்தே சரியான கூந்தல் பராமரிப்பை செய்து வர வேண்டும். இருப்பினும் கூந்தலில் ஏற்பட்டுள்ள பிரச்னைகளை சரிசெய்வதற்கான இயற்கையான வழிமுறைகள் நிறைய உள்ளன. சில வழிமுறைகளை வாரம் ஒரு முறை செய்தால்கூட நல்ல பலன்களைப் பெறலாம்.
இவ்வாறு வாரம் ஒருமுறை செய்யக் கூடிய கூந்தல் பராமரிப்பு அலுவலகத்துக்குச் செல்லக்கூடிய எல்லாப் பெண்களுக்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். செய்வதற்கும் சிரமம் இருக்காது. வார விடுமுறை நாட்களில் ஹாய்யாக டிவியை பார்த்துக் கொண்டே செய்து விடலாம்.
இந்தக் கூந்தல் பராமரிப்பை முதல் எண்ணெய் மசாஜ்ஜில் தொடங்கவும். எண்ணெய்யை உரிஞ்சக்கூடிய வறண்ட கூந்தலில் இளம் சூடான எண்ணெய்யை உச்சந்தலையில் ஊற்றி நீங்களே முடியை மெதுவாக மசாஜ் செய்யுங்கள்.
மசாஜ் செய்த பத்து நிமிடங்களுக்குள் உங்களால் சில மாற்றங்களை உணர முடியும். கூந்தலில் பூசுவதற்கு இயற்கையான, கெமிக்கல் இல்லாத பிரிங்ராஜ், அமலா போன்ற கூந்தலுக்கு நன்மைதரும் எண்ணெய்யைப் தேர்ந்தெடுக்கவும். இது நீண்டகால பயன்களைக் கொடுக்கும்.
இந்த மசாஜ் முடி உதிர்தலை கட்டுப்படுத்துகிறது. கூந்தலில் ஈரப்பதத்தை அளிக்கிறது. தளர்வான கூந்தலுக்கு இந்துலேகா பிரிங்கா எண்ணெய் சிறப்பான நன்மையைத தருகிறது. உச்சந்தலையில் இந்த எண்ணெய்யை ஊற்றி மசாஜ் செய்வதால் கூந்தலின் வலு அதிகரிக்கிறது. கூந்தலுக்குத் தேவையான சிறந்த ஆற்றலையும் தருகிறது.
எண்ணெய் மசாஜ் செய்து முடித்தவுடன் ஒரு துண்டில் இளஞ்சூடான நீரில் நனைத்து கூந்தலைச் சுற்றி போர்த்தி விடுங்கள். இதனால் கூந்தலில் படர்ந்துள்ள எண்ணெய் முடியின் வேர்களுக்குள் ஆழமாக ஊடுருவ வழி வகுக்கிறது. இந்த முறையால், கூந்தல் சேதம், முடியின் வறட்சி தடுக்கப் படுகிறது. 15 நிமிடங்கள் கழித்து கூந்தலில் இருந்து துண்டை எடுத்து விடலாம்.
பழ மாஸ்க் கூந்தலின் உறுதித் தன்மைக்கு மிகவும் பலன் தருகிறது. பழ மாஸ்கில் இயற்கையான இரண்டு டேபிள்ஸ்பூன் தேனை கலந்து கொள்ளுங்கள். வாழைப்பழம் ,பப்பாளி, வெண்ணெய் ஆகியவை உலர்ந்த கூந்தலை சரிசெய்யும். ஸ்ராபெர்ரிகள், கிவிஸ், கற்றாழை ஆகியவை எண்ணெய் பிசுபிசுப்பை போக்கும். பழ மாஸ்க் போட்ட பினனர் 20 நிமிடங்கள் அப்படியே விட்டுவிடுங்கள்.
பின்னர் சல்ஃபேட் மற்றும் பராபின் இல்லாத ஷாம்பை பயன்படுத்தி கூந்தலை அலசவும். சல்ஃபேட் உங்கள் கூந்தலில் இருக்கும் இயற்கையான எண்ணெய்யை உறிஞ்சி வறண்டு போகச் செய்கிறது. எனவே, உங்கள் ஷாம்பை தேர்ந்தெடுக்கும்போதே அதன் மூலப் பொருட்களை சரிபார்த்து வாங்குங்கள். உங்களின் கூந்தலின் ஆரோக்கியத்துக்கு முடிந்தவரை, உங்களுக்கு ஏற்றுக்கொள்ளக்கூடிய முடிந்த மட்டில் இயற்கைப் பொருட்கள் அடங்கிய ஷாம்புகளை வாங்கிப் பயன்படுத்தவும். இயற்கையான ஷாம்பூகளில் இந்துலேகா நல்லது. இயற்கையான பொருள்களே அடங்கியிருக்கும் ஷாம்புவை பயன்படுத்துவதால் முடி உதிர்வை தடுக்கலாம்.
ஸ்ப்ரே கண்டிஷனர் பயன்படுத்துவதை கண்டிப்பாக நிறுத்துங்கள். கண்டிஷனரை சேர்ப்பது, ஓரு கட்டத்தில் உங்கள் கூந்தல் முடியை உதிரச் செய்யும். அதற்கு பதிலாக ஒரு ஸ்பிரே பாட்டிலில் ஒரு கப் தண்ணீர், ஒரு டேபிள்ஸ்பூன் தேங்காய் எண்ணெய், அரை கப் தேங்காய்ப்பால், அரை கற்றாழை ஜெல் ஆகியவற்றை கலந்து பயன்படுத்துங்கள். இந்த ஸ்பிரேயை உறிஞ்சுவதன் மூலம் முடிக்கு நல்ல பலன் கிடைக்கும். ஒவ்வொரு முறை பயன்படுத்தவதற்கு முன்பும் பாட்டிலை குலக்கியபின்பு பயன்படுத்துங்கள்.
இந்த நடைமுறைகளைப் பின்பற்றினால் உங்களது கனவு கூந்தல் நிச்சயம் வளரும். நீங்களும் மகிழ்ச்சியில் துள்ளிக் குதிப்பீர்கள்.
டாபிக்ஸ்