தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Body Perfume: உங்கள் உடலில் நீண்ட நேரம் வாசனை நீடிக்க இந்த 5 இடங்களில் பர்ஃபியூம் யூஸ் பண்ணுங்க!

Body Perfume: உங்கள் உடலில் நீண்ட நேரம் வாசனை நீடிக்க இந்த 5 இடங்களில் பர்ஃபியூம் யூஸ் பண்ணுங்க!

I Jayachandran HT Tamil

Jun 09, 2023, 05:44 PM IST

google News
உங்கள் உடலில் நீண்ட நேரம் வாசனை நீடிக்க பர்ஃபியூம்கள் அடிக்க வேண்டிய இடங்கள் பற்றி இங்கு தெரிந்து கொள்ளுங்கள்.
உங்கள் உடலில் நீண்ட நேரம் வாசனை நீடிக்க பர்ஃபியூம்கள் அடிக்க வேண்டிய இடங்கள் பற்றி இங்கு தெரிந்து கொள்ளுங்கள்.

உங்கள் உடலில் நீண்ட நேரம் வாசனை நீடிக்க பர்ஃபியூம்கள் அடிக்க வேண்டிய இடங்கள் பற்றி இங்கு தெரிந்து கொள்ளுங்கள்.

கோடைக்காலம் வந்துவிட்டாலே வியர்வை தொந்தரவு வந்துவிடும். வியர்வையினால் உடலில் கெட்ட நாற்றம் ஏற்படும். அத்துடன் வியர்க்குரு, அரிப்பு போன்ற உபாதைகளும் ஏற்படும். வியர்வையினால் உடலில் ஏற்படும் துர்நாற்றத்தைப் போக்க வாசனைத் திரவியங்களை பூசிக் கொள்ளலாம். ஆனால் குறிப்பிட்ட சில இடங்களில் அவற்றைப் பூசினால் வாசனை நீண்டநேரம் நீடிக்கும். உங்களுக்கும் தர்மசங்கடம் ஏற்படாது.

நாம் அனைவரும் நமது வாசனைத் திரவியங்கள் நீண்ட காலம் நீடித்து இருக்க விரும்புகிறோம். அப்படி அது நீடிக்காமல் வாசனை போய்விட்டால் வாசனைத் திரவியம் மீதுதான் பழி சொல்கிறோம். அதனால், அது உண்மையல்ல நம் உடலில் எந்த பகுதிகளில் வாசனைத் திரவியத்தைப் பயன்படுத்த வேண்டும் என்பது நமக்கு தெரியாமல் இருப்பது தான் காரணம்.

நீங்கள் எந்த வகையான வாசனைத் திரவியம் அல்லது பாடி ஸ்ப்ரேயைப் பயன்படுத்தினாலும், அதை உங்கள் உடலில் உள்ள சில முக்கிய பகுதிகளில் பயன்படுத்தினால், அது நீண்ட நேரம் தங்கி நல்ல வாசனையாக இருக்கும்.

வாசனைத் திரவியத்தைப் பயன்படுத்தச் சிறந்த இடங்கள்-

பொதுவாக மக்கள் தங்கள் கைகள், அக்குள், கழுத்து மற்றும் ஆடைகளில் நினைத்துப்பார்க்க முடியாத அளவுக்கு வாசனைத் திரவியங்களைத் தெளிப்பார்கள். வெளியில் செல்வதற்கு முன் அல்லது நிகழ்வில் கலந்துகொள்ளும் முன் மக்கள் செய்யும் பொதுவான நடைமுறை இதுதான். அப்படி பயன்படுத்தினால் வாசனை அதிகபட்சம் 2 மணி நேரம் நீடிக்கும். பிறகு நீங்கள் மீண்டும் பயன்படுத்த வேண்டும். வாசனைத் திரவியத்தை நீண்ட நேரம் பயன்படுத்துவதற்கான முக்கிய இடங்களை நீங்கள் அறியாதபோது இது நிகழ்கிறது.

நீண்ட நேரம் நறுமணம் வீசும் 5 இடங்களைப் பற்றி இனி பார்க்கலாம்.

தலை முடி-

நல்ல வாசனையைப் பெற, நீங்கள் வாசனைத் திரவியங்களைப் பயன்படுத்தக்கூடிய பகுதிகளில் ஒன்று உங்கள் தலைமுடி. ஸ்ப்ரேயை உங்கள் தலைமுடியிலிருந்து 10 அங்குல தூரத்தில் பிடித்து வாசனைத் திரவியத்தை லேசாக ஸ்ப்ரே செய்ய வேண்டும். நீங்கள் உங்கள் தலைமுடியில் வாசனைத் திரவியத்தைப் பயன்படுத்தும்போது, உங்கள் தலைமுடியை ஒவ்வொரு முறை அசைக்கும் போது வாசனை வெளியேறும்.

காதுகளுக்குப் பின்னால்-

உங்கள் காதுகளுக்குப் பின்புறம் அல்லது கழுத்தின் முதுகுப்பகுதி வாசனைத் திரவியத்தைப் பயன்படுத்துவதற்கு ஏற்றது. அந்த பகுதிகள் நீண்ட நேரம் வாசனைத் திரவியத்தை நீடித்துப் பாதுகாக்கிறது.இதுபோன்று பயன்படுத்தினால் ஒரு நாளுக்கு மேல் வாசனை நீடிக்கும்.

நாடித்துடிப்பு இடங்கள்-

நிபுணர்களின் கூற்றுப்படி, நாடித்துடிப்பு புள்ளிகளின் வெப்பம் வாசனையை வெளிப்படுத்துகிறது. இப்படிப்பட்ட பல்ஸ் பாயின்ட்களில் தெளிக்கப்படும் வாசனைத் திரவியம் வாசனையை அதிகரிக்கிறது. நீண்ட நேரத்துக்கு இனிமையான வாசனையை உண்டாக்குகிறது என்று சொல்வதில் தவறில்லை. எனவே, உங்கள் நறுமணம் நீண்ட நேரம் இருக்க வேண்டுமெனில் நாடிப் புள்ளிகளில் சிறிது வாசனைத் திரவியங்களைத் தெளிக்க மறக்காதீர்கள்.

முழங்கைகள்-

முழங்கைகளுக்குள் உள்ள பகுதி வெப்பத்தை வெளியிடுகிறது, அந்த பகுதி வேகமாக வாசனையை வெளிப்படுத்தும் தன்மையைக் கொண்டுள்ளது. ஆகையால் வெப்பம் நறுமணத்தை அதிகரிக்கிறது. நீண்ட நேரம் உடலில் இருக்க உதவுகிறது. எனவே, அடுத்த முறை நீங்கள் வாசனைத் திரவியத்தைப் பயன்படுத்தும்போது, உங்கள் முழங்கைகளுக்குள் சிலதுளிகளைத் தெளிக்க மறக்காதீர்கள். எந்தவொரு பொது நிகழ்ச்சியிலும் கலந்துகொள்ளும் போது இந்த குறிப்பு உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.

முழங்கால்களுக்கு பின்னால்-

முழங்கால்களுக்குப் பின்னால் உள்ள மென்மையான பகுதி வாசனைத் திரவியங்களைப் பயன்படுத்துவதற்கான மற்றொரு சிறந்த இடமாகும். உங்கள் முழங்கால்களுக்குப் பின்னால் வாசனைத் திரவியத்தைப் பயன்படுத்துவது உங்கள் கால்களைக் கடக்கும்போது அல்லது உங்களை சுற்றி வரும்போது வாசனையை உதைக்கும். நீங்கள் செல்லும் இடங்களில் எல்லாம் வாசனைத் திரவியத்தின் வாசனை மலரும்.

உங்கள் ஆடைகளில் பர்ஃபியூமைத் தெளிக்கலாம், ஆனால் அது சிறிது நேரத்தில் போய்விடும். எனவே, உங்கள் உடலில் இந்த ஐந்து பகுதிகளே சிறந்தவை.

டாபிக்ஸ்

அடுத்த செய்தி