Food Recipe: கோதுமை அரிசி சர்க்கரைப் பொங்கல் செய்முறை
Jan 23, 2023, 11:30 AM IST
சுவையான கோதுமை அரிசி சர்க்கரைப் பொங்கல் செய்முறை குறித்து இங்கு பார்க்கலாம்.
கோதுமை அரிசி சர்க்கரைப் பொங்கல் செய்யத் தேவையானப் பொருள்கள்:
கோதுமை அரிசி - 1 கப்
பச்சைப் பருப்பு - 1/4 கப்
வெல்லம் - 1 கப்
முந்திரி - 10
திராட்சை - 10
பால் (அ) தேங்காய்ப் பால் - 1/4 கப்
ஏலக்காய் - 1
நெய் - 1/4 கப்
செய்முறை:
பச்சைப் பருப்பை வெறும் வாணலியில் சிவக்க வறுத்து சுமார் 4 கப்புகள் அளவுக்குத் தண்ணீர் ஊற்றி வேக வைக்கவும்.
கோதுமை அரிசி சர்க்கரைப் பொங்கல் செய்முறை
நன்றாக வெந்ததும் கோதுமை அரிசியை சேர்த்துக் கிளறி வேக வைக்கவும். நன்றாகக் குழைய வேக வேண்டும்.
இது வெந்து கொண்டிருக்கும் போதே வெல்லத்தைப் பொடித்து ஒரு பாத்திரத்தில் போட்டு சிறிது தண்ணீர் விட்டு மிதமானத் தீயில் கொதிக்க விடவும்.
வெல்லம் கரைந்து வரும்.லேசான பாகு பதம் வரும் போது இறக்கிப் பொங்கலில் ஊற்றிக் கிளறவும்.
பிறகு பால் விட்டுக் கிளறி, ஏலக்காயைப் பொடித்துப் போட்டு சிறிது நேரம் அடுப்பில் வைத்திருந்து இறக்கவும்.
அடுத்து ஒரு வாணலி யில் நெய் ஊற்றி சூடாக்கி முந்திரி, திராட்சை வறுத்து பொங்களில் கொட்டிக் கிளறவும்.
சுவையான, இனிப்பான கோதுமைச் சர்க்கரைப் பொங்கல் தயார்.
கோதுமை அரிசியை வறுக்க வேண்டாம். வறுத்தால் குழைய வேகாமல் உதிரி உதிரியாக உப்புமா போல் வரும். உப்புமா செய்வதாக இருந்தால் மட்டுமே வறுக்க வேண்டும்.
கோதுமை அரிசி வாங்கும் போது ரவை மாதிரி இல்லாமல் ஒன்றிரண்டாக உடைத்த அரிசியாக வாங்கினால் சாதம், பொங்கல், உப்புமா என வெரைட்டியாக செய்வதற்கு நன்றாக இருக்கும்.