Beauty Tips: மேக்கப் கலையாமல் சன்ஸ்கிரீன் கிரீம் அப்ளை செய்வது எப்படி?
Mar 30, 2023, 10:20 PM IST
மேக்கப் கலையாமல் சன்ஸ்கிரீன் கிரீமை முகத்தில் அப்ளை செய்வது எப்படி என்பது குறித்து இங்கு அறிந்து கொள்ளுங்கள்.
வெயில்காலம் வந்துவிட்டது. இருந்தாலும் அலுவலகத்துக்கோ, விசேஷங்களில் கலந்து கொள்வதற்கோ, வெளியில் செல்வதற்கோ மேக்கப் போடாமல் இருக்க முடியாத சூழ்நிலைகள் இருக்கலாம். இந்த நேரத்தில் மேக்கப் கலைந்துவிடாமல் பக்குவமாக சன்ஸ்கிரீன் கிரீம்களை அப்ளை செய்வது மிக முக்கியமாகும்.
கோடைக்காலத்தில் சூரிய கதிர்களால் நம் சருமத்துக்கு பல பாதிப்புகள் ஏற்படும். முகத்தில் தோன்றும் சருக்கங்கள், மங்கு, கரும்புள்ளிகள், சரும புற்றுநோய் ஆகியவை சூரிய கதிர்களால் சருமத்துக்கு ஏற்படும் பாதிப்புகள். சன் ஸ்கிரீன் பயன்படுத்தும் போது இதிலிருந்து நாம் தப்பித்து கொள்ளலாம். இது மட்டும் இல்லாமல் சருமத்தை புத்துணர்ச்சியாக வைக்கவும் சன்ஸ்கிரீன் உதவுகிறது.
காலையில் வெளியே கிளம்புவதற்கு முன்பாக சன்ஸ்கிரீன் தடவி கொண்டால் நாள் முழுவதும் போதும் என்பது கிடையாது. எந்த ஒரு சன்ஸ்கிரீனாக இருந்தாலும் அதன் பயன் வெறும் இரண்டு மணி நேரத்துக்கு மட்டுமே இருக்கும். அதன் பிறகு மீண்டும் சன்ஸ்கிரீன் தடவ வேண்டும். முகத்தில் மேக் அப் போடாதவர்களுக்கு அவ்வப்போது சன்ஸ்கிரீன் தடவுவது சுலபமான ஒரு காரியம் தான். ஆனால் முகத்தில் மேக் அப் போட்டிருப்பவர்களுக்கு இரண்டு மணி நேரத்துத்கு ஒரு முறை மேக் அப் கலையாமல் சன்ஸ்கிரீன் தடவுவது சற்று கடினம் தான். நீங்கள் கவலைப்பட தேவையில்லை. இதற்கு சுலபமான இரண்டு வழிமுறைகள் உண்டு. அதனை இப்போது தெரிந்து கொள்ளலாம்.
முதலில் SPF 30 கொண்ட நல்ல ரக சன்ஸ்கிரீனை தடவி கொள்ளுங்கள். இப்போது மேக் அப் போட்டு முடித்த பிறகு ஃபேஸ் மிஸ்டை தடவுங்கள். இப்போது நாம் பார்க்க இருக்கும் முதல் முறை வறண்ட சருமம் கொண்டவர்களுக்கு, இரண்டாவது முறை எண்ணெய் சருமம் உடையவர்களுக்கு ஆகும்.
முறை-1:
இதனை செய்வதற்கு உங்களுக்கு சிறிதளவு சன்ஸ்கிரீன் மற்றும் ஹார்டு ஃபேஸ் ஸ்பான்ஜ் தேவை. ஹார்டு ஃபேஸ் ஸ்பான்ஜ் முகத்தில் உள்ள பொருட்களை எடுக்காமல் நமக்கு வேண்டியதை தடவி கொள்ளலாம். சன்ஸ்கிரீன் தடவ வேண்டிய நேரம் வரும்போது ஆங்காங்கே முகத்தில் சன்ஸ்கிரீனை புள்ளி புள்ளியாக பரப்பி கொள்ளுங்கள். இப்போது பொறுமையாக ஹார்டு ஃபேஸ் ஸ்பான்ஜ் கொண்டு கிரீமை தடவி கொள்ளலாம். இதனை சுலபமான முறையில் செய்து விடலாம்.
முறை-2:
முறை ஒன்றை காட்டிலும் இது சுலபமானது. ஆனால் அதிகப்படியான வறண்ட சருமம் கொண்டவர்கள் இதனை தவிர்க்கவும். இதனை செய்வதற்கு SPF 30 அடங்கிய பவுடர் காம்பாக்ட் தேவை. ஒவ்வொரு 2 – 3 மணி நேரத்துக்கு ஒரு முறை உங்களை புத்துணர்ச்சி செய்து கொள்ளவும், சன்ஸ்கிரீன் தடவவும் இந்த பவுடர் காம்பாக்டை பயன்படுத்தி கொள்ளுங்கள். மேக் அப் கலையாமல் சன்ஸ்கிரீனை தடவி கொள்ளுங்கள்.
டாபிக்ஸ்