Migraine Headache: ஒற்றை தலைவலியை சரிசெய்ய என்ன செய்ய வேண்டும்?
Jun 03, 2023, 05:26 PM IST
ஒற்றை தலைவலியை சரிசெய்ய என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்ளுங்கள்.
ஒற்றைத் தலைவலி என்பது மிகவும் கடுமையான வலியாகும். வலிவந்துவிட்டால் நான்கைந்து நாட்களுக்காவாவது இருக்கும். சிலருக்கு என்ன வைத்தியம் செய்தாலும் போகாது. வாந்தி, குமட்டல், கடும் தலைவலி, கூடவே காய்ச்சலும் ஏற்படலாம்.
இப்படி அடிக்கடி ஏற்படும் ஒற்றை தலைவலியை சரிசெய்யும் வீட்டு வைத்தியம் குறித்தும், ஒற்றை தலைவலி எதனால் ஏற்படுகிறது என்பதையும் பார்ப்போம்.
ஒற்றை தலைவலி உலக வியாதியாக கருதப்படுகிறது. பல்வேறு காரணங்களால் தலைவலி ஏற்படுகிறது. ஒற்றை தலைவலி தொடங்கி, பின் தலைவலி, தலைபாரம் என தலைவலிகளில் பலவகைகள் உண்டு. இதை சரிசெய்யும் வீட்டு வைத்தியம் குறித்து விரிவாக பார்க்கலாம்.
ஒற்றைத் தலைவலியை குறைக்க யோகா பெரிதும் உதவுகிறது. நீண்டகாலமாக இப்படி தலைவலி பிரச்னையால் அவதிப்படுபவர்கள் தினமும் 20 நிமிடம் யோகாசனம் செய்வதை வழக்கமாக்கி கொள்ளவும். இதன் மூலம் தலைவலியை அடியோடு சரிசெய்து விடலாம்.
ஒற்றைத் தலைவலி வந்த உடன் மாத்திரைகளை எடுத்து கொள்ளாமல் அதற்கு பதில் இஞ்சி கசாயம், சுக்கு காபி போன்ற மூலிகளை வைத்தியத்தை பின்பற்றலாம். காலம் காலமாக இருந்து வரும் இந்த பாட்டி வைத்தியம் தலைவலிக்கு மிகப் பெரிய நிவாரணம் அளிக்கிறது.
வெந்நீர்
தலைவலியை சரிசெய்ய வெந்நீர் பெரிதும் உதவுகிறது. திடீரென்று தலைவலி வந்தவுடன் சூடாக ஒரு டம்ளர் வெந்நீர் வைத்து குடிக்கலாம். இப்படி செய்யும் போது தலைவலி நீங்கி நிவாரணம் கிடைக்கும். குறிப்பாக காபி, டீ போன்றவற்றை பருகாமல் வெந்நீர் குடிப்பது மிகவும் நல்லது.
போதுமான தூக்கம்
தலைவலி ஏற்பட முக்கியமான காரணம் போதுமான தூக்கம் இல்லாமல் போவது. இதை சரிசெய்ய ஓய்வு நேரத்தில் சிறிது நேரம் படுத்து தூங்கவும். அதே போல் இரவு நேரத்தில் மொபைல், லேப்டாப் போன்றவற்றை பயன்படுத்துவதை குறைத்தால் தலைவலி பிரச்சனை குறையும்.
வைட்டமின் மாத்திரைகள்
பலநேரங்களில் உடலில் ஏற்படும் வைட்டமின் குறைப்பாட்டால் தலைவலி ஏற்படுகிறது. இதை சரிசெய்ய வைட்டமின் B2, B12 நிறைந்த மாத்திரைகளை எடுத்து கொள்ளலாம். இதன் மூலம் தலைவலி பிரச்சனைக்கு தீர்வு கிடைக்கும்.
டாபிக்ஸ்