தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Cheese Murukku Sandwich: சொடக்கு போடும் நேரம் கூட ஆகாது.. சுவையான சீஸ் முறுக்கு சாண்ட்விச்

Cheese Murukku Sandwich: சொடக்கு போடும் நேரம் கூட ஆகாது.. சுவையான சீஸ் முறுக்கு சாண்ட்விச்

Jul 29, 2023, 04:04 PM IST

google News
சீஸ் முறுக்கு சாண்ட்விச் செய்வது எப்படி என்பது குறித்து இங்கே தெரிந்து கொள்வோம்.
சீஸ் முறுக்கு சாண்ட்விச் செய்வது எப்படி என்பது குறித்து இங்கே தெரிந்து கொள்வோம்.

சீஸ் முறுக்கு சாண்ட்விச் செய்வது எப்படி என்பது குறித்து இங்கே தெரிந்து கொள்வோம்.

பாரம்பரிய உணவுகளைத் தாண்டி தற்போது இருக்கக்கூடிய குழந்தைகளுக்கு சாட் உணவுகள் மீது ஆர்வம் அதிகமாகிவிட்டது. அவசரமாக ஓடிக் கொண்டிருக்கும் இந்த தொழில்நுட்ப காலத்தில் உடனடியாக தயாராக இருக்கும் உணவுகளின் மீது நாட்டம் அதிகரித்து வருகிறது.

தொடர்ந்து சாப்பிட்டால் உடலுக்குத் தீங்கு விளைவிக்கக் கூடிய பல சிக்கல்கள் இருந்தாலும் பொதுமக்களின் நாட்டமானது தற்போது துரித உணவுகள் மீது அதிகம் ஆகிவிட்டன.

தற்போது அந்த துரித உணவுகளைச் சத்தான உணவுகளாக எடுத்துக் கொள்ள வேண்டிய சூழ்நிலை நமக்கு வந்துவிட்டது. அந்த வகையில் உடலுக்குச் சிக்கல்களைத் தராத உடனடியாக செய்யக்கூடிய சீஸ் முறுக்கு சாண்ட்விச் செய்வது எப்படி என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்ளலாம்.

தேவையான பொருட்கள்

  • தேவையான அளவு முறுக்கு
  • ஒரு வெங்காயம்
  • ஒரு வெள்ளரிக்காய்
  • ஒரு தக்காளி
  • ஒரு கப் சீஸ் துருவல்
  • ஒரு கப் ஓமப்பொடி
  • சட்னி செய்முறை
  • ஒரு கைப்பிடி புதினா
  • ஒரு கைப்பிடி கொத்தமல்லி தழை
  • சிறிய துண்டு இஞ்சி
  • இரண்டு பச்சை மிளகாய்
  • மூன்று மேசைக்கரண்டி பொட்டுக்கடலை
  • ஒரு மேசைக்கரண்டி எலுமிச்சை சாறு
  • தேவையான அளவுக்கு உப்பு

செய்முறை

சட்னி

முதலில் மிக்ஸி ஜார் ஒன்றில் கொத்தமல்லித் தழை, பச்சை மிளகாய், இஞ்சி, புதினா, பொட்டுக்கடலை, உப்பு, எலுமிச்சை சாறு உள்ளிட்டவற்றைப் போட்டு சிறிதளவு தண்ணீர் ஊற்றி கெட்டியான பதத்தில் அரைத்து வைத்துக் கொள்ள வேண்டும்.

சாண்ட்விச்

  • முதலில் தட்டையாகவும் அல்லது வட்டமாகவும் உங்கள் முருக்கை வறுத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
  • அடுத்தது வெள்ளரிக்காய் தக்காளி வெங்காயம் உள்ளிட்டவற்றை முறுக்கு ஏற்ப வட்டமாக நறுக்கி வைத்துக் கொள்ள வேண்டும்.
  • முதலில் முறுக்கின் மேல் இந்த சட்னியைச் சிறிதளவு தடவி வைத்துக் கொள்ள வேண்டும்.
  • அதன் பின்னர் வெங்காயம் வெள்ளரிக்காய் தக்காளி ஓமப்பொடி உள்ளிட்டவற்றை வெங்காயம் வெள்ளரிக்காய் தக்காளி ஓமப்பொடி உள்ளிட்டவற்றை ஒன்றின் மேல் ஒன்று அடுக்காக அடுக்கி வைத்துக் கொள்ள வேண்டும்.
  • இந்த அடிக்கும் மீது சிறிதளவு சட்னியை வைத்து அதற்குப் பிறகு ஒரு முறுக்கைக் கொண்டு மூட வேண்டும்.
  • பின்னர் அதற்கு மேற்பகுதியில் சீஸ் துருவலைத் தேவையான அளவு தூவிக் கொள்ள வேண்டும். அவ்வளவுதான் சீஸ் முறுக்கு சாண்ட்விச் ரெடி.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

 

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

 

Google News: https://bit.ly/3onGqm9

 

டாபிக்ஸ்

அடுத்த செய்தி