Chola Paniyaram: மொறு மொறு சோளப் பணியாரம் செய்வது எப்படி? - இதோ ஈஸி டிப்ஸ்!
Jul 11, 2023, 04:13 PM IST
குழந்தைகள் முதல் அனைவரும் விரும்பி சாப்பிடும் மொறு மொறு சோளப் பணியாரம் செய்வது எப்படி என்பது பற்றி இங்கு காண்போம்.
இயற்கையான உணவு பொருட்களே நமது உடல் ஆரோக்கியத்துக்கு நல்லது என்று வயதானவர்கள் சொல்வதை கேட்டிருப்போம். அதிலும் நமக்கு உற்ற துணையாக இருப்பவை சிறுதானியங்கள்.
நாம் அன்றாட உணவில் சேர்த்துக்கொள்ளும் அரிசி மற்றும் கோதுமையை காட்டிலும் ஐந்து மடங்கு அதிகமான புரதம், வைட்டமின்கள், நார்ச்சத்து, கால்சியம், இரும்புச்சத்து மற்றும் தாதுக்கள் போன்ற ஊட்டச்சத்துக்கள் சிறுதானியங்களில் அதிகளவில் உள்ளன.
நம் பாட்டியும் தாத்தாவும் வயதான காலத்திலும் ஆரோக்கியத்தோடு வாழ்வதைப் பார்த்திருப்போம். அதற்கு காரணம் அவர்கள் சிறுவயதில் சாப்பிட்ட சிறுதானியங்களால் உணவுகளாகும். ஆனால், நம்மில் பலரும் இன்று மறந்துபோனவைதான் இந்த சிறுதானியங்கள். குறிப்பாக சோளத்தில் இயற்கையாகவே நார்ச்சத்து, புரதச்சத்து, மாவுச்சத்து நிறைந்துள்ளது. நார்ச்சத்து நிறைந்துள்ளதால் எளிதில் செரிமானம் ஆகக்கூடியது.
எனவே நம் குழந்தைகளுக்கு சிறுதானியங்களால் ஆன சுவையாக உணவுகளை சமைத்துக் கொடுப்போம். அதற்கான சிறந்த ரெசிபிதான் இந்த சோளப் பணியாரம். சத்துமிக்க அனைத்து வயதினரும் விரும்பி உண்ணும் சோளப் பணியாரம் செய்வது பற்றி இங்கு பார்ப்போம்.
தேவையான பொருட்கள்
சோளம் (ஊறவைத்தது) - 1 கப்
அரிசி மாவு - 1 கப்
உளுந்து - 0.25 கப்
வெந்தயம் - 1 தேக்கரண்டி
சின்ன வெங்காயம் - 200 கிராம்
பச்சை மிளகாய் - 4
கொத்த மல்லி - 1 கப்
எண்ணெய், உப்பு, தண்ணீர் தேவையான அளவு எடுத்துக்கொள்ளவும்.
செய்முறை
- சோளம், உளுந்து, வெந்தயத்தை சுத்தம் செய்து 30 நிமிடம் தண்ணீரில் ஊறவைக்கவும்
- பின்னர் அவற்றை மிக்ஸியில் அரைக்கவும்
- பின் தேவையான அளவு உப்பு சேர்த்து புளிக்க விடவும்
- பொடியாக நறுக்கிய வெங்காயம், கொத்த மல்லியை அதில் சேர்க்கவும்
- எண்ணெய் தடவிய பணியார சட்டியினை சூடாக்கி, அதில் ஒவ்வொரு குழியிலும் மாவினை ஊற்றி வேக வைக்கவும்
- பொன்னிறமாகும் வரை காத்திருந்தால் சுவை மிக்க சோளப் பணியாரம் தயார்
கறிவேப்பிலை சட்னி இதற்கு சிறந்த சைடிஷ் ஆகும்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வெப் ஸ்டோரி, வேலைவாய்ப்பு தகவல்கள், சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
டாபிக்ஸ்