Health Tips: பெண்களே இது உங்களுக்குத்தான்.. பாதாமில் எத்தனை நன்மைகள் இருக்கு தெரியுமா?
Jul 29, 2023, 08:27 PM IST
பாதாம் பருப்பால் பெண்களுக்குக் கிடைக்கும் நன்மைகள் குறித்து இங்கே காண்போம்.
பாதாம் பருப்பால் பெண்களுக்குக் கிடைக்கும் நன்மைகள் குறித்து இங்கே காண்போம்.
பெண்கள் எப்போதும் தங்கள் உடல் ஆரோக்கியத்தைச் சரியான முறையில் வைத்துக் கொள்ள வேண்டும். அதற்கு அவசியமான சில ஊட்டச்சத்து நிறைந்த தானியங்கள், காய்கறிகள், பழங்கள், பருப்புகள் என அனைத்து சத்தான உணவுகளையும் எடுத்துக் கொள்ள வேண்டும்.
அந்த வகையில் நட்ஸ் வகைகளான பாதாம், பிஸ்தா, முந்திரி, உலர் திராட்சை, பேரிச்சம்பழம் அத்தி உள்ளிட்ட உணவுப் பொருட்களைச் சாப்பிட்டால் உடலுக்கு ஏராளமான ஊட்டச்சத்துக்கள் கிடைக்கும்.
பாதாம் பருப்பின் நன்மைகள்
- குறிப்பாகப் பாதாம் பருப்பை ஊறவைத்து அதன் மேல் தோலை நீக்கிய பிறகு சாப்பிடுவது அதிக ஊட்டச்சத்தை தரும் மருத்துவர்கள் கூறுகின்றனர்.
- பாதாம் பருப்பை ஒரு கைப்பிடி அளவு எடுத்து முதல் நாள் இரவு ஊற வைக்க வேண்டும். இனிய பிறந்தநாள் காலை எழுந்து உடன் உணவுக்கு முன்பாக அதனைத் தோலை உரித்துச் சாப்பிடலாம்.
- அப்படிச் சாப்பிட்டு வந்தால் நார்ச்சத்து, தாதுக்கள், ஆன்ட்டி ஆக்சிடென்ட்கள், ஒமேகா 3, புரதச்சத்து வைட்டமின்கள் உள்ளிட்ட சத்துக்கள் அனைத்தும் கிடைக்கும்.
- தொடர்ந்து பாதாம் பருப்பு சாப்பிட்டு வருவதன் மூலம் நீரழிவு நோய், சரும நோய், முடி உதிர்வு, ரத்த சோகை, சுவாசக் கோளாறு உள்ளிட்ட நோய்கள் வராது.
- உடல் எடையைக் குறைக்க விரும்பும் பெண்கள் தினமும் 5 பாதாம் பருப்பைச் சாப்பிட்டு வந்தால் ரத்தத்தில் இருக்கக்கூடிய கெட்ட கொழுப்புகள் குறையும். .
- ஆறு அல்லது ஏழு பாதாம் பருப்புகளைத் தினமும் ஊற வைத்துச் சாப்பிடுவதன் மூலம் மலச்சிக்கலில் இருந்து நிவாரணம் பெறலாம்.
- ஊற வைத்த பாதாமி சாப்பிடும் பொழுது அது ரத்தத்தில் இருக்கக்கூடிய அழுத்தத்தைக் கட்டுப்படுத்துகிறது. ரத்தத்தில் இருக்கக்கூடிய சிகப்பு மற்றும் வெள்ளை அணுக்களை அதிகமாகக் கூடிய சக்தி பாதாம் பருப்பிற்கு உண்டு.
- எலும்புக்குத் தேவையான கால்சியம் மற்றும் பாஸ்பரஸ் இந்த பாதாம் பருப்பில் உள்ளது.
- மூளையின் செயல் திறனை அதிகப்படுத்தி புத்திக் கூர்மையை அதிகரிக்கப் பாதாம் பருப்பு பெரிதும் உதவுகிறது. நரம்பு மண்டலத்திற்குத் தேவையான சீரான இயக்கத்தை இதன் மூலம் பெறலாம்.
- தினமும் இரவு தூங்குவதற்கு முன்பு முகத்தில் பாதாம் எண்ணில் தடவி மசாஜ் செய்து வைத்தால் முகத்தில் பொலிவு அதிகரிக்கும் என கூறப்படுகிறது.
- மாதவிடாய் நின்ற பிறகு தினமும் பாதாம் பருப்பைப் பெண்கள் சாப்பிட்டு வந்தால் சருமத்தில் இருக்கக்கூடிய சுருக்கங்கள் விலகும்.
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்