தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Health Tips : ஆயுள் முழுவதும் வாதம், பித்தம், கபத்தை சமநிலையில் பராமரிக்க வேண்டுமா? இந்த தேநீரே போதும்!

Health Tips : ஆயுள் முழுவதும் வாதம், பித்தம், கபத்தை சமநிலையில் பராமரிக்க வேண்டுமா? இந்த தேநீரே போதும்!

Priyadarshini R HT Tamil

Feb 04, 2024, 11:30 AM IST

google News
Health Tips : ஆயுள் முழுவதும் வாதம், பித்தம், கபத்தை சமநிலையில் பராமரிக்க வேண்டுமா? இந்த தேநீரே போதும்!
Health Tips : ஆயுள் முழுவதும் வாதம், பித்தம், கபத்தை சமநிலையில் பராமரிக்க வேண்டுமா? இந்த தேநீரே போதும்!

Health Tips : ஆயுள் முழுவதும் வாதம், பித்தம், கபத்தை சமநிலையில் பராமரிக்க வேண்டுமா? இந்த தேநீரே போதும்!

நமது உடலில வாதம், பித்தம் மற்றும் கபம் ஆகிய மூன்றும் சமநிலையில் இருந்தால்போதும். அது உடலுக்கு பல நன்மைகளைக்கொடுக்கும். அதில் ஏதேனும் ஒன்று அதிகம் அல்லது குறைவாக இருந்தால் கூட உடலில் பல்வேறு பிரச்னைகள் ஏற்படும்.

உடல் வலி, உடல் சோர்வு, பாதம், மூடுகளில் நீர்கோர்த்தல், வலி, வீக்கம், எரிச்சல் என பல்வேறு பிரச்னைகள் ஏற்படும். முழங்கால் வலியும் இருக்கும். இதற்கு மிகவும் முக்கியமான காரணம் வாத நீர் என்ற கெட்ட நீர் உடலில் தங்கியிருப்பது ஆகும்.

இந்த கெட்ட வாத நீரை உடலில் இருந்து வெளியேற்ற வேண்டுமெனில், அதற்கு வீட்டிலேயே செய்யக்கூடிய எளிய வழிமுறைகள் உள்ளது. அதற்கு உதவும் தேநீர் குறித்து தெரிந்துகொள்ளலாம்.

தேவையான பொருட்கள்

சோம்பு – ஒரு ஸ்பூன்

(இதில் அதிகளவில் கால்சியம், மெக்னீசியம், பாஸ்பரஸ், ஆகிய சத்துக்கள் உள்ளது. இது வாத நீரை வெளியேற்றும் வல்லமை கொண்டது)

மிளகு – 2

(எப்போதும் எந்த மருத்துவக்குறிப்பிலும், காரத்தையும் சேர்த்து எடுத்துக்கொள்ளும்போது அந்த மருந்து நல்ல வேகமாக வேலை செய்யும்)

புதினா – 4 இலைகள்

(வாசத்துக்கு மட்டுமல்ல, இதன் மூலம் வயிறு கோளாறு வாயுத்தொல்லைகள் நீங்கும். வாய் துர்நாற்றத்துக்கு மருந்து. உடலில் வாதத்தன்மையை குறைக்கும்.

செய்முறை

ஒரு பாத்திரத்தில் தண்ணீரை நன்றாக கொதிக்கவிட்டு அதில் சோம்பு, புதினா, மிளகு ஆகியவை சேர்த்து நன்றாக கொதிக்கவிடவேண்டும். ஒரு டம்ளர் தண்ணீர் முக்கால் டம்ளர் ஆகும் வரை கொதிக்கவிடவேண்டும். இந்த தேநீர் தயார்.

இதை காலையில் வெறும் வயிற்றில் இதை பருகலாம். அது உடலுக்கு நன்மை தரும். இதை குடித்து அரைமணி நேரத்திற்கு பின்னர்தான் எதை வேண்டுமானாலும் எடுக்க வேண்டும். மாலையிலும் குடிக்கலாம். இதனுடன் எதுவும் கலக்காமல் பருகுவது நல்லது. வேண்டுமானால் ஒரு ஸ்பூன் தேன் சேர்த்துக்கொள்ளலாம்.

இதை ஒரு வாரம் தொடர்ந்து பருகினால், கால்களில் உள்ள நீர்க்கட்டு, பாத வலி, பாத எரிச்சல், மூட்டு வலி ஆகியவை குறையும். மூட்டு வீக்கம், முழங்கால் வீக்கம் ஆகியவை குணமடையும். இதை ஒன்றரை மாதத்துக்கு தாராளமாக எடுத்துக்கொண்டு வர உடல்லி நல்ல மாற்றம் தெரியும்.

அதற்கு பின்னர் வாரத்தில் இரண்டு முறை எடுத்துக்கொள்ள வேண்டும். அதன்பின்னர் வாரத்தில் இருமுறை எடுத்துவர வாழ்நாள் முழுவதும் உடலில் வாதம், பித்தம், கபத்தை சமநிலையில் பராமரிக்கும். வாயுத்தொல்லை நீங்கும். வயிறு உப்புசம் குறைக்கும்.

உடல் எடையை குறைக்க வேண்டும் என்று எண்ணுபவர்கள், தங்கள் உடலில் உள்ள கொழுப்பை கரைக்க உதவும். கெட்ட நீரை வெளியேற்றும். செரிமான மண்டலம் சீராக வேலை செய்ய உதவும் தேநீர். இதை அனைத்து வயதினரும் எடுத்துக்கொள்ளலாம்.

மூட்டுகளில் ஏற்படும் வலி மற்றும் வீக்கத்தை குறைக்க இஞ்சியை அரைத்து வலியுள்ள பகுதிகளில் தடவவேண்டும். இஞ்சியை நேரடியாக சருமத்தில் தடவும்போது ஒரு வித எரிச்சல் ஏற்படும். அதை பொறுத்துக்கொள்ள வேண்டும். மூட்டுகளில் தேங்கும் வாதநீரை இஞ்சி சாறு முழுமையாக உறிஞ்சிவிடும். இஞ்சிக்கு பதில் சுக்கு பவுரைக்கூட சேர்த்துக்கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

டாபிக்ஸ்

அடுத்த செய்தி